கேள்வி :.ஆண் எந்த எந்த விஷயங்களில் பெண்ணை சார்ந்து வாழ்கிறான்?
என் பதில் :..
ஆயிரம் தான் சமத்துவம் பேசினாலும், ஆணுக்குப் பெண் நிகர் என்றாலும், பெண்ணால் வெளியுலகத்தில் சாதிக்கமுடியாதது ஏதுமில்லை என்று ஆண்களே ஒத்துக்கொண்டாலும், சில பல விஷயங்களில் ஆண் ஒரு நாளும் பெண்ணுக்குச் சமம் இல்லை.
அவன் அப்படிப்பட்ட சில விஷயங்களில் பெண்ணைத் தான் மிகவும் சார்ந்திருக்கிறான்; அவற்றில் அவன் ஆதி கால ஆணைப் போலத்தான் இருப்பான்; செயல் படுவான். அவை:
வீட்டு நிர்வாகம், குடும்ப நிர்வாகம், சமையல் நிர்வாகம். ஒரு பெண் எவ்வளவுதான் வெளியுலகத்தில் போய் ஆணுக்கு நிகராகக் கொடி நாட்ட ஆண் ஆதரவும் ஊக்கமும் அளித்தாலும், வீடு என்று வரும்போது, ஆண் பெருமளவில் பெண்ணின் நிர்வாகத்தைத் தான் சார்ந்து இருக்கிறான்.
இது மாற்ற முடியாமல், ஆணின் மரபணுக்களில் எழுதப் பட்டு விட்ட ஒரு விஷயம் என்பதே என் கருத்து.
உற்றார், உறவுகளைப் பேணல், விருந்தோம்பல் (அதாவது இந்த விருந்தோம்பல் கலாசாரம் இன்னும் உயிரோடு இருக்கும் குடும்பங்களில்)
பிள்ளை வளர்ப்பின் மிக மிகப் பெரும் பங்கு, குறிப்பாகப் பிள்ளைகள் 3 வயதேனும் எட்டும் வரை.
தன் பெண் பருவம் அடையும் சமயத்தில்
தான் நோய்வாய்ப் படும் போது.
தன்னை ஒரு ஒழுக்க நியதிகளுக்குள் கட்டுப் படுத்தி வைத்துத் தான் தறிகெட்டு வாழ்க்கையில் பிறழ்ந்து போய்விடாமல் இருக்கத் தன் துணைவி தன் மீது செலுத்தும் அன்பின் ஆதிக்கத்தைச் சார்ந்திருத்தல் (கவனிக்க: ஒரு பெண் அதிகார தோரணை, சமத்துவப் போராட்ட மனப்பான்மையைக் கைக்கொண்டல்ல).
வயதாக ஆக, மேலும் மேலும் மனைவியின் கவனிப்பு, அக்கறை இவற்றைச் சார்ந்திருப்பது; அதை பெறுவதற்காகவே தன் ஆணாதிக்கத் திமிர், ஆதிகால அடக்குமுறைகள், அலட்சியம் இவற்றைக் கைவிட்டு/ பெருமளவில் குறைத்துக்கொண்டு மனைவியின் அதிகாரத்துக்கும், இழுப்புக்கும் கூடுதல் வணங்கிப் போவது.
இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ள பெண்கள் ஆணை அன்பினால் கட்டித் தன் வழிக்குக் கொண்டு வருவார்கள். அது Win-Win முறை. அது புரியாத, புரிய விருப்பம் இல்லாத புதுமைப் பெண்கள் எல்லாவற்றுக்கும் சமத்துவம் பேசி, மல்லுக்கு நின்று குடும்பத்தை Lose-Lose நிலைக்கு இட்டுச் செல்வார்கள்.
நன்றி ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக