திங்கள், 1 ஜூன், 2020

கேள்வி : Google ஊழியர்களில் சிலர் ஏன் தங்கள் வேலையிலிருந்து ராஜினாமா செய்து முழுநேர YouTuber வேலையைச் செய்கிறார்கள்?

என் பதில் :..


ஐடி துறைக்கும் எனக்கும் காத தூரம்!

நான் புரிந்து கொண்டது.

தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி துறையில், உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரம் கிடையாது. இதில் நேற்றைய கண்டுபிடிப்பு நாளை பழசாகிவிடலாம். எனவே அவர்கள் எப்போதும் இரண்டு வேலைகளை செய்வர். ஒன்று தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது, மற்றொன்று வேலை வாய்ப்பு பற்றி கண்களை திறந்து வைத்துக் கொள்வது. இந்த இரண்டையும் செய்யாமல் இந்த துறையில் முன்னேறுவது முடியாது.

மேலும் தனியார் துறையில் உள்ளவர்கள் ஒரு கிளையை பற்றி மட்டும் தொங்க மாட்டார்கள், கூடவும் கூடாது. இரண்டாவது கிளை ஒன்றை பற்றிக் கொள்வது அவசியம். ஆனால் அது பல திறமைகளைப் பொறுத்து தான் அமைக்க முடியும். பலர் அதுபோல ஒரு இரண்டாவது வருமானத்திற்கு பிரயத்தனம் செய்வர்.

யூட்யூப் மூலம் சம்பாதிப்பது என்பது அந்த இரண்டாவது வருமானத்திற்கு வழிவகுப்பது போலத்தான். அது வழியாக பணம் ஈட்ட பொறுமை தேவை. 

இதன்மூலம் நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டோர் பலர். அவர்கள் ஒரு நேரத்தில் அந்த ஒரு வருமானத்தை வைத்தே முன்னேறி விடுவார்கள். ஒருவரிடம் கைகட்டி சேவகம் செய்ய அவசியம் இருக்காது.

கூகுளில் பணிபுரிபவர்கள் என்றால் ஐடி துறையை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அந்த திறமையை யூட்யூப் நன்கு பயன்படுத்தி வெற்றி பெறும் திறன் படைத்தவர்கள் யூட்யூபில் வெற்றி கண்டால், பின் கூகுள் எதற்கு? தனக்கு தானே யஜமானன் ஆகிவிடுவர்!

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக