கேள்வி :.புது பணக்காரர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அவர்களின் சில நடவடிக்கைகள் என்னென்ன? திடீர் பணக்காரர்களை எப்படி கொண்டுகொள்வது ?
என் பதில் :...
புது பணக்காரர்கள் என்றாலே, புது வாழ்க்கை என்ற மறு வாழ்க்கை ஆரம்பம். இன்றைய அரசியல்வாதிகளை, கார்ப்பரேட் போர்வைக்குள் இருக்கும் புதிய பணக்கார்ர்களை, சமூகத்தில் திடீர் என்று முளைத்த காளான்கள் இப்படியாக பல்வேறு மக்கள் உண்டு.
தமிழிழ் ஒரு பழமொழி உண்டு:
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” - இதில் பல அர்த்தங்கள் உண்டு. அவர்கள் வாடிக்கை, குணங்கள் இப்படி பல.
விலை உயர்ந்த காரை வாங்கி ஓட்டி செல்லும் போது, நம்மை யாரெல்லாம் பார்க்கிறார்கள், இளசுகள்்ஓட்டும் போது இளசுகளை்பார்த்து ரகளை பண்ணுவது,
அவர்கள் வீட்டுக்கு நண்பர்கள் , சொந்தக்காரர்கள் சென்றாலே, நடக்கும் ரகளை தாங்க முடியாது. இப்படி பல.
அவர்களுக்கு ஏது செய்வதென்றே தெரியாது, ஏதாவது விசித்திரமாக செய்வார்கள். மக்களும் இவர்களை விசித்திரமாகவே பார்ப்பார்கள்.
“நிறை குடம் என்றும் தழும்பாது” என்பது முற்றிலும் உண்மை.
தான் பணக்காரன் என்ற எண்ணத்துடன் பழகுவோருடன் நான் அதிகம் பழகுவதில்லை; அவர்களிடமிருந்து விலகி நடப்பதே என் வழக்கம்; ஒரே காரணம் அவர்களின் ஆணவம்.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக