புதன், 3 ஜூன், 2020

கேள்வி :இந்த சமூகத்தில் நீங்கள் மாற்ற நினைக்கும் ஒரு விடயம் எது?
பெண் பார்க்கும் சடங்கு.

என் பதில் :..



ஒரு பொண்ணை நல்லா அலங்கரிச்சி யாருன்னே முன்ன பின்ன தெரியாதவங்க முன்னே நிறுத்தி அவங்களை பரிசோதிக்க விட வேண்டியது.

பெண்ணு என்ன படிச்சிருக்கா? நீ பேசு மா. அவள் குரல்வளத்தை பரிசோதிக்க.

எல்லாருக்கும் காபி குடுமா. எல்லாரையும் நல்லா வணங்கிக்கோ.

மாப்பிள்ளை இவர் தான் பார்த்துக்கோ. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவங்களாம் பெண்ணை வச்ச கண் வாங்காம பார்ப்பது.

ஏதோ ஸூல இருக்க மிருக்கத்தை பார்ப்பது போல ஒரு உணர்வு.

இதுல என்ன வேடிக்கைன்னா, அப்ப தான் பொண்ணும் பையனும் பார்த்துருப்பாங்க. அதுக்குள்ள எல்லாரும் கேப்பாங்க. உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா, உனக்கு பையன பிடிச்சிருக்கானு? அந்த ஐஞ்சி நிமிஷத்துல அவங்களோட வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுக்கணும். பிடிச்சிருக்கானும் தெரியாது பிடிக்கலையானும் தெரியாது. ஆனா எல்லோரோட வர்ப்புறுத்தலால பிடிச்சிருக்குன்னு சொல்லியாகனும்.

சில சமயம் பையன் வீட்டுக்காரங்க வீட்டுக்கு போய் பதில் சொல்றேன்னு சொல்லிட்டு ஏதாவது சப்ப காரணம் சொல்லி வேண்டாம்னு பெண்ணை நிராகரிச்சிடுவாங்க.

இதனால ஒரு பெண்ணுக்கு ஏற்ப்படுற மன உளைச்சலை பற்றி யாரும் கவலை படுறதில்லை.

பையன் வீட்டுல பெண் புகைப்படத்தை பார்த்திருப்பாங்க. அந்த பெண்ணை பற்றிய தகவல் எல்லாம் தெரிஞ்சிருக்கும். அப்ப பெண்ணை பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடணும். பிடிச்சிருந்தா மட்டும் பெண் பார்த்து நிச்சயம் பண்ணணும்.

பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும் மன உளைச்சல் கம்மியாகும். அந்த பெண்ணுக்கு ஏதோ குறையிருக்கு போல அதான் அவளை நிராகரிச்சிட்டாங்கங்குற வீண் பேச்சுகளையும் தவிர்க்கலாம்.

இந்த முறையை கண்டிப்பா மாத்தணும். அவள் எத்தனை முறைதான் யாருனே தெரியாதவங்களுக்கு காபி குடுத்துக்கிட்டு சிரிச்ச முகத்தோட நிற்ப்பாள். சொல்லுங்க?

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக