திங்கள், 8 ஜூன், 2020

கேள்வி :.பெண்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கும் அளவு ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?

பதில் :...

பெண்களை விட ஆண்களுக்குத்தான் சகிப்புத்தன்மை அதிகம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கான விளக்கத்தை அளிக்கிறேன்.

முதலில் சகிப்புத்தன்மை என்றால் என்ன என்று பார்க்கலாம்.

உதாரணத்திற்கு,

ஒரு ஆசிரியரை எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் தன்னுடைய இரண்டு குழந்தைகள் சத்தமாக பேசி சிரித்து விளையாடினால், ஏன் சத்தம் போடுகிறீர்கள்? அடித்து விடுவேன் என்று மிரட்டும் தொனியில் அடக்கலாம். அதே ஆசிரியர் பள்ளியில் 20 பிள்ளைகள் சத்தம் எழுப்பினால் அடித்து விடுவேன் என்றெல்லாம் மிரட்ட முடியாது. அமைதியாக இருக்குமாறு சொல்லத்தான் முடியும். ஒருவரே இருவேறு இடங்களில் தன்னுடைய சகிப்புத் தன்மையை மாற்றிக் கொள்கிறார்.


ஒரு அலுவலகத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த விஷயத்தை நான் ஆமோதித்தால், எனக்கு சகிப்புத்தன்மை உண்டு என்று அர்த்தம்.


எனக்கும் என் நண்பருக்கும் இருவேறு விதமான கருத்துக்கள் இருந்தபோதும் நட்பை துண்டித்து விடாமல் தொடர்ந்தால் அதற்கும் சகிப்புத்தன்மை என்றுதான் பெயர்.


இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கலாம். சகிப்புத் தன்மை அதிகம் கொண்டவர் ஆண்களா அல்லது பெண்களா என்று.

இவ்வாறு கருத்திலும் செயல்பாட்டிலும் இருக்கும் சகிப்புத்தன்மையை பார்த்தோம். அடுத்தது முக்கியமாக மருத்துவத்துறைக்கு வரலாம். சகிப்புத்தன்மை பற்றி அறிய சிறந்த உதாரணம் மருத்துவத்துறை.


இந்தியாவில் ஆண்-பெண் மருத்துவர்களின் சதவிகிதம் ஏறத்தாழ சமமாக இருந்தபோதிலும், மருத்துவத் தொழிலை தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து செய்பவர் ஆண் மருத்துவரே.


இந்தியாவில் மகளிர் மருத்துவத்தைப் பற்றி Dr.ராஜேஷ் மற்றும் Dr.மம்தா அவர்கள் AIIMS க்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்கள். அவர்கள் இன்னும் இந்தியாவின் மருத்துவத்துறையில் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.(பெண்ணியவாதிகளே ஆணாதிக்கம் என்று அவசரமாக படித்து விடாதீர்கள்).


கிராமம் முதல் நகரம் வரை பெண் மருத்துவர்களுக்கு தொடர்ந்து தேவை இருப்பினும், பெண்களால் திருமணம் குழந்தைப்பேறு குடும்பம் என்ற கட்டமைப்பை தாண்டி சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவை புரிய வரமுடியவில்லை.


அறுவை சிகிச்சை என்று வரும்பொழுது ஆண்களே கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் ஒரு அறுவை சிகிச்சைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே ரத்தம் சதை எலும்பு நரம்பு என்று சகித்துக் கொண்டு எல்லாவற்றுடனும் போராடவேண்டும்.



இயல்பாக பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு தொடர்ந்து நின்றுகொண்டு அறுவை சிகிச்சை செய்ய இயலாது. இக்காரணத்தினாலேயே பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுக்க தயக்கம் கொள்கிறார்கள்.


புகழ்பெற்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரிவில் சென்று பாருங்கள். ஆச்சரியம் கொள்வீர்கள். ஆண் மருத்துவர்களே இத்துறையில் சிறப்பாக செயல்படுகிறார்கள். பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் ஒரு ஆண் மருத்துவரால் எவ்வாறு இத்துறையில் சிறப்பாக செயல்பட முடியும்.


என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், பெண்ணானவள் தன்னுடைய கணவர் குடும்பம் என்று வரும் பொழுது மட்டுமே எவ்வளவு வேண்டுமானாலும் சகித்துக் கொள்வாள்.



ஆனால் பொதுவெளியில் ஒரு ஆணால் மட்டுமே பாரபட்சமின்றி சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள முடியும்.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக