வியாழன், 18 ஜூன், 2020

கேள்வி :..வாழ்க்கையை நீங்கள் எந்த அளவுக்கு புரிந்து வைத்துள்ளீர்கள்?

என் பதில் :..வாழ்க்கையை பற்றிய ஆழமான புரிதல் எதுவும் நமக்கு இல்லை நமக்கு கிடைக்கும் அனுபவங்களின் மூலம் சிலவற்றை உணர்ந்துகொள்கிறோம். அவ்வாறு நான் வாழ்க்கையில் உணர்ந்து கொண்ட சில.

இந்த பூமியில் எதுவும் நிரந்தரமில்லை நமது உயிர் உட்பட
நாம் எதை விதைக்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும்.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்வோம். இதில் சிலரை (அ) சிலவற்றை உள்ளடக்க முடியாது எனெனில் அவர்களுக்கு நமது அன்பு புரிவதில்லை அவர்கள் விதிவிலக்கு

நம்மை போல பிறரையும் நினைக்க வேண்டும் என நினைத்தால் சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.அது அவர்களது தவறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

அளவுக்கு மீறிய எதுவுமே மதிக்கப்படுவதில்லை அன்பு உட்பட
பணம் ; பொன் ; பொருள் ; சொத்து இவை எவற்றாலும் நிம்மதியை வாங்கமுடியாது. நிம்மதி என்பது நம் மனதைப் பொறுத்தது.

மனம் ஒன்றே நம்மை வீழ்த்தும் ஆயுதம் ஆம் மனது திடமாக இருந்தால் எந்த தடையையும் உடைத்து முன்னேறலாம்

நமது எண்ணங்களே நம் வாழ்வை வடிவமைக்கிறது நேர்மறை எண்ணம் நம்மை வளரச் செய்யும்

இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை இரண்டையும் சமமாக நினைத்தாலே போதும்

வலி இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் யாரும் வாழவில்லை அனைவரது வாழ்விலும் வலி உண்டு

வாழ்க்கை இந்த நொடில எப்படி இருக்கோ அப்படி வாழ்றதுதான் நல்லது. முடிஞ்சத நினைத்து வருத்தப்பட்டோ (அ) நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதத நினைத்து பயந்தோ எதுவும் ஆகப்போறதில்லை
நம்மளோட கஷ்டத்தை நீக்குறதுக்கு ஆள் இருக்கோ இல்லையோ நமது கஷ்டத்தை கேட்டு சந்தோஷப்பட நிறைய பேர் இருக்காங்க
எல்லாத்தையும் மீறி நாம சந்தோஷமா இருந்தா எப்படி நம்மளோட குறைகளை கண்டுபிடிச்சு கஷ்டப்படுத்துறதுனு யோசிக்க நிறைய பேர் இருக்காங்க

வாழ்க்கையில் கிடைக்கிற துன்பம்தான் நம்மை பண்படுத்துகிறது
எத்தனை துன்பம் வந்தாலும் இந்த நிலையும் மாறும்னு போய்டனும் அப்போதான் வாழமுடியும்.

எதுவந்தாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனநிலை இருந்தால் போதும்.

இப்படி எவ்வளவோ இருக்கு ஆனால் எந்த நிலையிலும் நமது மனதைரியம் மட்டுமே நம்மை காப்பாத்தும்.

நன்றி ..வாழ்த்துக்கள் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக