வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..
வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .
தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன் குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும் வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும் வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...
இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல் அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .
மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .
பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .
தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .
ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந் தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும் கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,இன்று இந்து அறநிலையைத்துறையின் கீழ் இருந்தும் ,பராமரிப்பின்றி சிதிலங்களாய் சிதைந்து எச்சங்களாய் மிஞ்சும் கடைநிலைக்கு இலக்காகி மீள முடியா ,சுற்றிஅறிக்கையாகவும் ,மீட்டுயெடுக்கவும் ,புனரமைக்கவும் ,ஆளில்லா சுற்றிக்கையாகவும் காட்சியளிக்கிறது .
கோவில் தோன்றிய வாரலாறு ...:📚📚✍️✍️


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக