கேள்வி :..தவறு செய்பவர்கள், அவர்களும் குடும்பத்தினரும் கடைசி வரை நன்றாகத்தானே வாழ்கிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்பதன் அர்த்தம் என்ன?
பதில் :...
பாவம், புண்ணியம், முற்பிறவி, மறுபிறப்பு என்பது எல்லாமே பொய். இல்லாத கடவுளின் பெயரால் அச்சுறுத்தல் செய்து மக்களை சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக நடக்கத் தூண்டுவதற்காகத்தான் இப்படிப்பட்ட பழமொழிகளெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அரசினால் இயற்றப்பட்ட சட்டங்களை மீறும்போது தண்டனைகள் உண்டெனத் தெரிந்தாலும் சட்டத்தை மீறி வாழ்வோர் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சட்டத்தை மீறி வாழ்பவர்கள் அனைவருமே கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்களா? இல்லையே. பொதுச் சமூகத்தின் நலனைக் காக்க, எப்படி வாழவேண்டும் என்று மதங்களும், அதற்கு அப்பாற்பட்டு மனிதன் வகுத்த சட்டங்களும், இருக்கின்றன என்றாலும் எதற்கும் கட்டுப்படாதவர்கள் என்று கண்டறியப்படாத மக்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்; இன்னும் இருப்பார்கள். ஒருவன் குற்ற உணர்ச்சிகூட இல்லாமல் குற்றம் இழைத்தும், சட்டத்திலிருந்து சாமர்த்தியமாக தப்பித்தும், வாழ்பவனாக இருந்தால் அவனுக்கு எந்தக் கேடும் வந்துவிடாது என்பதுதான் உண்மை.
“அநியாயமாக வசதியற்றவனைக் கொலை செய்துவிட்டு, பணத்தைக் கொண்டு சட்டத்திலிருந்தும் தப்பித்துவிட்டான். இவனை இறந்தவன் ஆவி சும்மாவிடாது” என்பதுபோன்ற வசனங்களைக் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வரும். நம்மைச் சுற்றி நடபாடுபவர்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று கூறமுடியாது; சாமர்த்தியமாக சட்டத்திலிருந்து தப்பித்து வாழும் எத்தர்கள் பலர் இருக்கிறார்களே! எனவே தெய்வம் நின்றுகொல்லும் என்பது கையாலாகதவர்களின் புலம்பல்தான் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக