கேள்வி : வாயு தொல்லையை இலகுவாக குணப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா?
பதில் :..
ஒரு வயது வரை நீங்கள் அள்ளி போடும் குப்பைகளை உங்கள் வயிறு கண்டு கொள்ளாது. ஆனால் 40 வயதிற்கு மேல் ஈரல், இரைப்பை மற்றும் சமீபாட்டு தொகுதிகளுக்கு முன்னரை போல் செயல் பட முடியாது!
ஆகவே வாயுத்தொல்லை ஓர் எச்சரிக்கை மணி ஆகும்.
திட்டமிட்ட, தேவையான உணவுகள்; தவிர்க்க வேண்டிய உணவுகள்,என ஒழுங்கு அமைப்புக்குள் வர வேண்டிய வேளை வந்தாயிற்று.
நீரிழிவு பரிசோதனை,இதய பரிசோதனைகள், உடல் ஆரோக்கியத்தை பேண தேவையான உடற்பயிற்சி என்னும் ஒழுங்கிற்குள் கட்டாயம் வரவேண்டும்.
உங்களை பயம் காட்டவில்லை! நல்ல ஓர் வைத்தியரை பார்த்து உங்கள் உடல் நிலையை பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.
எண்ணெய், இனிப்பு உணவுகளை குறையுங்கள்.
நேரடியாக வாயுத்தொல்லைக்கு மாத்திரம் மருந்து எடுப்பீர்களானால் நீண்ட நாளைக்கு கேட்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக