வியாழன், 11 ஜூன், 2020

அந்தியூருக்கு அருகில்  காணாமல் போன  மாலப்பட்டி – உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சிக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் கற்பகவள்ளி ஆய்வு
உடுமலைப்பேட்டைக்கு அருகில்  இருப்பது அந்தியூர் எனும் சிற்றூர் இதிலிருந்து தெற்கில் 2 கி.மீ. தொலைவில்   பெருமாள் கோயில்உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரில்  ஒரு பாழடைந்த கிணறும் இந்தக் கிணற்றில்  சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருந்ததாகவும்  கூறப்படுகிறது.
இந்தக் கோயிலுக்கு பின்புறம் அடர்ந்த நடுகற்களும்இ கற்பதுக்கைளும் காணப்படுகின்றன. இது போரில் வீரமரணம் அடைந்த வீரர்களை அடக்கம் செய்த இடமாகவும்.அவர்களின் நினைவாக நடப்பட்ட கற்களாகவும் இருக்கலாம் என  உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ப. கற்பகவள்ளி ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது. இந்தப் பகுதியில் இருக்கும்  இந்த நடுகற்கள் சுமார் 300 முதல்  400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இந்தப் பகுதி பாளையக்காரர்கள் போரிட்டு மடிந்ததாகவும்இ அதன் அடையாளமாகவே இந்த கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதையும்இ இதே போல் இதற்கு அருகாமையில் உள்ள கெடிமேடு புதிர்நிலைக் கற்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில்  மிகவும் அதிகப்படியான போர் வீரர்கள் இந்த இடத்தில்  மடிந்துள்ளனர் எனவும். 15 ஆம் நூற்றாண்டில் இறுதியில் கொங்கு நாட்டில் இது போன்று அதிக இடங்களில் போர் நடைபெற்றுள்ளது. அதையொட்டி நினைவு நடுகற்கள் இன்றளவிலும்இ  ஜிலேப்பநாயக்கன்பாளையம்இ தீபாலபட்டிஇ தேவனூர் புதூர்இ கம்பாளபட்டிஇ கூளநாயக்கன்பட்டிஇ சின்னபொம்மன்சாளை என பல இடங்களில் இது போன்று நடுகற்கள் மக்களின் வழிபாட்டில் உள்ளது எனவும் இ
இந்தப் பகுதி  மக்களின் வாழ்விடங்களில் அருகாமையில் இல்லாமல்  காட்டுக்குப் பகுதியில் இருப்பதால் இது வாழ்விடமல்லாமல் புகழிடமாகவே ( சாவிடம்) இருந்துள்ளது.
இந்தக் கற்பதுக்கைக்கு அருகில் உள்ள கோயிலும் அந்தக் கோயிலுக்கு வழிபட வரும்  பெரும்பான்மையான மக்களும் இதையே உறுதிப்படுத்துகின்றனர்.
ஆகஇ இந்தப்பகுதி மக்கள் வீரத்தோடு வாழ்ந்தனர் என்பதையும் அந்த வீரத்திற்காக தம் உயிரையும் கொடுத்துள்ளனர் என்பதையும் இதன் வழி உறுதிப்படுத்தலாம். இவ்வாறு இந்தப் பகுதியில்  வாழ்ந்தவர்கள் எனக்கொண்டால் அது பாளையத்துக்காரர்களாகவே உள்ளனர் என்பதையும் கோட்டமங்கலத்தில் உள்ள வீரகம்பத்தைப் போன்றும் மெட்ராத்தி பகுதியில் உள்ள  நினைவு நடுகல் போன்றும் இருப்பதால் இதுவும் பாளையத்துக்காரர்களின் நினைவிடமாகக் கருதலாம்.
இவ்வாறு  ஸ்ரீ ஜிவிஜி விலாலாட்சி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ப.கற்பகவள்ளி தனது கள ஆய்வில் தெரிவித்தார். இவருடன் உடுமலை வரலாற்று நடுவத்தின்  ஆய்வத்தின் ஆய்வாளர் வழக்குரைஞர் சத்தியவாணி மற்றும் ஆய்வாளர்களும் உடன் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக