பதிவு செய்த நாள்( Dinamalar)
25ஜூன்
2020
உடுமலை:உடுமலை அரசு மருத்துவனை செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து, 'சீல்' வைக்கப்பட்டது.உடுமலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து வந்த முதியவர், கரட்டுமடத்தை சேர்ந்த பெண், திருச்சியை சேர்ந்த ரயில்வே துறை அதிகாரி, எகிப்திலிருந்து வந்த அந்தியூர் ஊராட்சியை சேர்ந்த பெண் என, நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து அடைக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 வயதான அவர், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது சகோதரரை பார்க்க, கடந்த, 15ம் தேதி சென்றுள்ளார். அங்கிருந்து, 20ம் தேதி, மதுரையிலிருந்து பழநிக்கு தனியார் பஸ்சிலும், பழநியிலிருந்து உடுமலைக்கு அரசு பஸ்சிலும் வந்துள்ளார்.21ம் தேதி, சளி, காய்ச்சல் ஏற்பட்டதால், 23ம் தேதி, கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து, செவிலியர் வீடு உள்ள, தளி ரோடு, காந்திசவுக், பஷீர் அகமது லே- அவுட் பகுதியில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது கணவர், இரு மகன்கள் மற்றும் சுற்றிலும் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.தொற்று பாதிப்பு காரணமாக, பஷீர் அகமது லே-அவுட் பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து, குடியிருப்பு 'சீல்' வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பணியில் இருந்ததால், அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருவோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசியம் இல்லாமல், வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளி பராமரித்தல் என, தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும், என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.📚📚✍️✍️

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக