கேள்வி :..சிறந்த வியாபார தந்திரம் என நீங்கள் நினைப்பது எது?
பதில் :....மிகப்பெரிய சவால் !!
வளர்ந்து வரும் பற்பசை நிறுவனத்தின் புதிய பொது மேலாளர் அவர் ,
.பன்னாட்டு வணிக நிறுவனங்களின் போட்டி; ,அதிகரித்துவரும் நிர்வாகச் செலவுகள் ,திறமையான ஊழியர்கள் பற்றாக்குறை ,சந்தைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.
விற்பனை விலையை அதிகரிக்காமல் ,உற்பத்தித் திறனையும்,விற்பனையையும் பலமடங்கு உயர்த்தவேண்டும். இலக்கை நிர்ணயித்தது நிறுவன தலைமை.
நிறுவனத்துக்குள் பதவி போட்டி (Internal politics) வேறு;அத்தனையும் தாண்டி ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம்.
உற்பத்தி ,விநியோகம் ,விற்பனை ,விளம்பரம் போன்ற எல்லா துறையினிலும் நுணுக்கமான ஆராய்ச்சி செய்து விற்பனை உத்தியை செயல்படுத்தலாம் என முடிவு செய்தார் பொது மேலாளர்.
பல்வேறு வகையான ஆலோசனைகள் ,வியாபார உத்திகள்,அதிகாரிகள்,நிபுணர்கள் மூலம் பெறப்பட்டு செயல் படுத்தப்பட்டாலும் ,நிர்வாக தலைமையை திருப்திபடுத்த முடியவில்லை .நிர்வாகச் செலவுகள் தான் அதிகரித்தது.
சுதேசி பொருள்களை பயன்படுத்துவதில் மக்களுக்கு தற்போது உள்ள ஆர்வம் விழிப்புணர்வு,பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் இவற்றை சாதகமாக பயன்படுத்தி நிறுவனத்தை முதல் இடத்துக்கு முன்னேற்ற வேண்டும் என்பது நிர்வாகத்தின் விருப்பம் .
குழப்பத்தில் இருந்தார் புதிய பொது மேலாளர் ,தன்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்த தலைமையிடம் தன்னுடைய திறமையை எப்படி நிரூபிப்பது? எனும் பெரும் கவலை அவருக்கு .
விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும் ,கவர்ச்சிகரமான தள்ளுபடி வேண்டும் ,விற்பனையாளர்களுக்கு ஊக்கப்பரிசு அளிக்க வேண்டும் .பொது இடங்களில் தற்காலிக விற்பனை மையங்கள் அமைக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அதிக செலவு பிடிக்கும் பழைய யுத்தியை பலரும் சொன்னார்கள்
இதையெல்லாம் தேவையான அளவு நிர்வாகம் செய்து கொண்டுதான் . இருந்தது.எனினும் உற்பத்தித்திறன் எதிர்பார்த்தபடி இல்லை .
இதுவரை யாரும்முயற்சித்துப் பார்க்காத
யுடன் கூடியபுதிய வழி ஏதாவது உண்டா ?
யோசனையில் ,ஏதோ ஒரு நினைவில் ,உற்பத்தியாகும் பொருள் சென்றடையும் கடைசி நுகர்வோரிடம் நேரடி தொடர்பில் உள்ள ஒரு சில்லறை விற்பனையாளர் கடையில் நின்றார் பொது மேலாளர் .
பரபரப்பாக நடந்த ,வியாபாரத்தின் நடுவே தன்னை விற்பனைப் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் .பரபரப்பு சற்று குறைந்த உடன் மெல்ல பேச ஆரம்பித்தார் .
கடைக்காரரின் பார்வையில் ,பற்பசையின் தரம் ,விற்பனை ,விலை ,லாப விகிதம் ,வினியோகம் ,மொத்த விற்பனையாளர் செயல்பாடு விற்பனை வாய்ப்பு எல்லாவற்றையும் கேட்டறிந்தார்.
பேச்சோடு பேச்சாக நிறுவனத்தின்செயல்திறன் ,விரிவாக்கம் ,போட்டியாளர்கள்,சந்தை நிலை உற்பத்தத்திறன் ,நிர்வாகத்தின் மனநிலை எதிர்பார்ப்பு இவற்றை மெதுவாக வெளிப்படுத்தினார்.
"உங்களுக்கு விற்பனை அதிக அளவில் வேணும்" அவ்வளவுதானே சார்! ,யோசனை ஒன்னு சொல்றேன். "சிறுதுளி பெருவெள்ளம்"அதிக செலவு இல்லாமல் வியாபாரம் நிறைய நடக்கும் ,
சொல்லுங்க ,என்றார்சுவாரசியம் இல்லாமல் பொது மேலாளர் .
சார் ,பற்பசை அடக்கப்படும் குழலின் (Tube)வாயை .5 mm மட்டும் அகலப் படுத்துங்கள் (width) போதும் .உங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அடைந்து விடுவீர்கள்.
"எப்படி"?
சந்தையில் கிடைக்கும் பற்பசை குழலின்அகலம் அதிகபட்சம் இரண்டு மில்லிமீட்டர் அதில் .5mm என்பது 25 சதவீதம். நுகர்வோர் பற்பசையை வெளியில் எடுக்கும் பொழுது வழக்கமாக அழுத்தும் வேகத்தில் எடுத்தால் 25% அதிக பற்பசை வெளியேறும் .தோராயமாக 30 நாட்களுக்கு வரும் பற்பசை 25 நாட்களில் தீர்ந்துவிடும் .எப்படி என்றாலும் நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதமாவது அதிகரிக்கும் .
ஆச்சரியத்தில் துள்ளி விட்டார்! புது மேலாளர் .லட்சக்கணக்கில் செலவழித்து ,பெரிய அதிகாரிகள் நிபுணர்களிடம் கிடைக்காத புதிய மாற்று சிந்தனை ஒரு சில்லறை கடைக்காரரிடம் கிடைத்தது கண்டு அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி .
புதிய மாற்று சிந்தனையை தலைமையிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று அவர் வெற்றி பெற்றது ,பின் கடைக்காரரை நிர்வாக தலைமையிடம் நேரடியாக அழைத்துச் சென்று பாராட்டியது வேறுகதை .
படித்த உங்களுக்கு :—
தொழில் நிறுவனத்தின் பார்வையில் இவரின் யோசனை ,பெரிய வியாபார தந்திரம் ,இல்லையா !!!
நீங்களே சொல்லுங்கள் !!!
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக