சனி, 13 ஜூன், 2020

கேள்வி :..கொரோனா முடிந்த பின்னர் ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரிகளில் என்ஜினியரிங் படித்த மாணவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் :..என் நண்பரின் மகனிடம் கேட்டுஅறிந்தது ..


என்னுடைய நண்பரின் மகனிடம் கிட்ட 2 நாளுக்கு முன்னாடி பேசி கொண்டிருந்தேன்...அப்ப அவர்  இதை பகிர்ந்தார்

நான்: தம்பி ...விடுமுறையை கொண்டாடிட்டு இருக்கியா?

தம்பி : இல்லந .., placementடை நினைத்தால் பயமாக இருக்கிறது.


தம்பி  3ஆவது ஆண்டு, இப்ப 4ஆவது ஆண்டு போக போறான். உண்மையை சொல்லனும்னா வடிவேல் சொல்ற மாதிரி 'இப்ப 2/4ஆவது ஆண்டு போற பசங்க முகத்தில பீதி தெரியுறது கண்ணாடி மாதிரி பளிச்சுனு தெரிய தான் செய்யுது. இப்ப இருக்கிற நிலைமையில் இந்த வருடம் ப்ளேஸ்மெண்ட் எப்படி இருக்கும்னு யாருக்குமே தெரியாது.


இவர்களை ஒப்பிடும் போது, இந்த கல்வியாண்டில் முடித்தவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டகாரர்கள். NIT யில் ஓரளவுக்கு மொத்த வகுப்பும் பிப்ரவரி மாதத்தில் ப்ளேஸ்மெண்ட் ஆகி விடும். இதுவரை ப்ளேஸ்மெண்ட் ஆனவர்கள் யாரையும் அவர்களுடைய நிறுவனம் cancel செய்யவில்லை, ஆனால் எனது தெரிந்து நிறைய நிறுவனங்கள் அவர்கள் சம்பளங்களை கொஞ்ச காலத்துக்கு 50% நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு 20 லட்சம்/per annum சம்பளத்தில் சேர்ந்தவனக்கு, ஒரு சில மாதங்கள் 10 லட்சம் தான் சம்பளம், ஒரு வருடத்திற்குள் முதலில் சொன்ன அந்த 20 லட்ச சம்பளத்திற்கு உயர்த்துவார்கள்...அந்த மாதிரி...

என்னை கேட்டால் ஒன்றும் இல்லாததிற்கு இது பரவாயில்லை. ஆனால் இந்த முறை நிறைய மாணவர்கள் MS/MBA விற்கு போவார்கள் என்று நினைக்கிறன்.


தம்பியிடம் சொல்லியிருக்கிறேன் ..வரும் காலம் இப்படி தான் இருக்கும் எதிர்கொள்ள தயாராக இருக்கனும் ...இதுவும் ஒரு வாழ்க்கை கல்வி ..எப்படி இக்கட்டான சூழ்நிலையில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை காலம் சொல்லிக்கொடுக்கிறது ..இதுவும் ஒரு உளவியல் பயிற்சி தான் .தம்பியிடம் .நம்பிக்கை அளித்த இருக்கிறேன் ..


நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக