கேள்வி :..."இத சொன்னா நம்மல பைத்தியம்ன்னு சொல்லுவாங்க" என்று நீங்கள் நினைக்கும் அந்த விஷயம் (அ) உண்மை என்ன?
பதில் :....நிறைய இருக்கிறது.
ஆனால் இதை எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல.
நம்ம படிச்ச கல்விக்கும், வேலைக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல
அரசுத் தேர்விலும், வங்கி தேர்விலும் நேர மேலாண்மை, சரியான பதில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் வேலை கிடைத்ததும் அதே வேகத்துடன், பணிகளை சரியாக செய்து முடிக்கிறார்களா? பின்னர் எதற்காக அப்படி ஒரு தேர்வை நடத்த வேண்டும்?
எல்லையில் ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகிறது. அப்படி இருக்கையில் அதிபரின் கட்டுப்பாட்டில் இராணுவம் இல்லையா? இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விட்டு மறுபுறம் தாக்குதல் என்றால் அதனை என்னவென நினைப்பது?
பெண்கள் அரைகுறை ஆடை அணிவதால் தான் கற்பழிப்பு நடக்கிறது என்றால் பச்சிளம் குழந்தை என்ன செய்தது? அதையும் தாண்டி உங்களுக்கு ஆடை தான் பிரச்சினை என்றால், அப்பேர்ப்பட்ட ஆடைகளை உங்கள் பெண் பிள்ளைகளுக்கு ஏன் வாங்கி கொடுக்கிறீர்கள்?
மதுக்கடை திறப்பதால் தான் குடிக்கிறேன் என்றால், கடந்த 35 நாட்களாக மதுக்கடை திறக்காமல் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?
அரசுப்பள்ளி வேண்டாம், ஆனால் அரசுக் கல்லூரி, அரசுப்பணி மட்டும் வேண்டும், இது எப்படி?
இறைபக்தி மிகுதியாக இருக்கும் தேசத்திலும் கூட குற்றங்கள் அதிகமாக இருப்பது எதனால்?
ட்ரெண்டிங் ஆன வீடியோக்கள் அந்த ஒருநாள் உங்களை திசை திருப்பும் வேலையை செய்துவிட்டு செல்வதை மக்கள் எப்போது உணர்வார்கள்?
யானை இறந்தது கவலைக்குரிய விசயம், ஆனால் ஒருவேளை அந்த வெடிமருந்து காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்டு அதன் வயிற்றிலும் ஒரு குட்டியோடு இறந்து போயிருந்தால் இதே இரக்கம் நம்மிடத்தில் இருக்குமா?
ஒரு நல்ல நடிகர் இறந்து விட்டார், கவலைக்குரியது, ஆனால் அதன் குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? அதுவரை அவரை பற்றிய வீடியோக்களை , செய்திகளை ட்ரெண்டிங் கில் வைக்க முடியுமா? அப்படியென்றால் இதுவும் பத்தோடு பதினொன்றா?
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகள் மீதான இரக்கம், சுஜித் போன்ற குழந்தைகள் விழுந்தபிறகு தான் வருமா? அதுவரை அதை தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சி நடைபெறாமல், நடந்த பிறகு அதுபற்றி ட்ரெண்டிங் செய்து கொண்டு இருப்பீர்களா?
சென்னையில் மீண்டும் வெள்ளம் வரும்போது தான் மற்ற மாவட்ட மக்களை பற்றி தெரியுமா?
பல நிறுவனங்களுடன் கையெழுத்து, ஒப்பந்தம், ஆனால் அதன்பிறகு?
இந்தியர்கள் அனைவரையும் பிச்சைக்காரர்களாக வைத்துக்கொண்டு எப்படி பொருளாதார வல்லரசாக முடியும்?
ஒரேயொரு பணக்காரன் போதுமா? இந்தியா எனும் மலையை தூக்க?
நிலாவிலும், செவ்வாயிலும் தண்ணீர் இருந்தால் அதன் பயன் என்ன?
பூமியில் நிலத்தடி நீர் குறைகிறது என காரணம் சொன்னால், எங்கள் ஊரில் ஓடும் ஆற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து அதை குப்பியில் அடைத்து லிட்டர் 20 ரூபாய் என விற்கும் போது, செவ்வாயிலிருந்து நீரை கொண்டு வந்து இங்கே விற்றால் அதன் விலை என்னவாக இருக்கும்?
இணையம் உணவை உற்பத்தி செய்யுமா?
சமூகவலைதளத்தில் உங்கள் புகைப்படம், வீடியோக்களை பதிவிடுவதற்கு காரணம் என்ன? உங்கள் கலைத்திறமையை காண்பிக்க என்றால், சினிமாவில் வாய்ப்புக்கு முயற்சி செய்து சம்பாதிக்கலாமே? வெறுமனே ஏன்?
லிவ்விங் டூ கெதர் வாழ்க்கைக்கு ஆசைப்படும் நபர்கள் தங்கள் பெற்றோர் அவ்வாறு இருக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் பதில் என்ன?
வாட்சப் ஸ்டேட்டஸ் வைப்பதால் என்ன பலன்?
23 வயது வரை படிப்பு, அதன் பிறகு அயல்நாட்டு வேலை, கைநிறைய சம்பளம், 50 வயதில் இந்தியா வருகை, அதன் பிறகு உங்கள் பிள்ளைகள் திருமணம், இப்படி என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் செலவிட்ட தருணம் என்ன? 50 வயதுக்கு பிறகு நினைத்து பார்க்க, அந்த நியாபக சக்தியாவது உடம்பில் இருக்குமா?
பணம் தான் எல்லாம், இதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் 1000 ரூபாய் நோட்டு இப்போது உங்கள் கையில் இருந்தால்?
கடவுள் ஏழைகள் சார்பானவர், ஆனால் அவர் நேரிடையாக உதவி செய்ய முடியாது என்பதற்காக தான் சிலரை பணக்காரர்கள் ஆக்குகிறார், ஆனால் அவன் பணக்காரன் ஆனபின் அந்த கடவுளையே காத்திருந்து வணங்குவதற்கு முடியாமல் சிறப்பு தரிசனத்தில் வருகிறான் என்றால் கடவுள் இப்போது என்ன நினைப்பார்?
சட்டங்கள் அனைத்தும் அம்பேத்கரால் எழுதப்பட்டது, அதுதான் அனைவரும் படித்து சட்டப்பணிக்கு வருகிறார்கள், உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு சட்டப்புத்தகமும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வேறு சட்ட புத்தகமும் இல்லை, ஆனால் தீர்ப்புகள் மாறுவது எதனால்? அப்படி என்றால் சட்டத்தின் ஓட்டைகள் தான் ஒரு வழக்கின் வெற்றியை தீர்மானிக்கிறதா?
இங்கிலாந்தின் தேம்ஸ் நதி தூய்மையாக இருக்கும் போது, அதுவும் பூமியில் உள்ள ஒரு நதிதான், அங்கும் நிறுவனங்கள் இருக்கிறது ஆனால் அது மாசடையவில்லை, அப்படியென்றால் அவர்கள் பின்பற்றிய வழிமுறையை மற்ற நாடுகளுக்கு கொடுக்க மாட்டார்களா? அல்லது மற்ற நாடுகளுக்கு விருப்பம் இல்லையா?
எல்லா மனிதருக்கும் முதல் காதல் என்ற ஒன்று இருக்கும் போது, தங்கள் சகோதரியோ, மகளோ காதலித்தால் மட்டும் எதிர்ப்பதேன்?
12 ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து மக்களுக்கு இலவச சேவை செய்வேன் என பேட்டி கொடுத்த அந்த நபர்களெல்லாம் என்ன ஆனார்கள்?
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் இடத்தை வாங்கி போட்டு அதை பரம்பரை பரம்பரையாக தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைப்பது எதனால்?
அனைவருக்கும் வீடு திட்டம் என்பது வீடில்லாதவர்களுக்கா அல்லது தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்து வாடகை அதிகமாக வசூல் செய்பவர்களுக்கா?
31.மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற்ற பெண்கள் அனைவருமே பணிக்கு செல்பவர்கள் தானா? நிரூபிக்க முடியுமா?
இதுபோல நிறைய இருக்கிறது,
இதில் எல்லாமே உண்மைதான்.
இதில் எதாவது ஒன்று நிச்சயம் உங்களையும் பாதித்திருக்கும் ஏதாவது ஒரு வகையில்.
நன்றி .....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக