சனி, 27 ஜூன், 2020

கேள்வி : குழந்தைகள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வது எவ்வாறு இருக்கும்?

என் பதில் :..

மிகவும் வெறுமையா இருக்கும். மனசு ஏங்கித்தவிக்கும். எல்லாமே இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல தோனும். தனக்காக யாருமே இல்லாத மாதிரி இருக்கும். இன்னும் ஆயிரம் எண்ணங்கள் வந்து அலைமோதும்.

எத்தனை குழந்தை என்று யாராவது கேட்றுவாங்களோனு ? பயந்து பயந்தே வீட்டுக்குள்ள முடங்க வைக்கும் .

எது எப்படி இருந்தாலும் இது நம்ம கைல இல்லையே குழந்தை இல்லை அப்டிங்கிறது வலி தரக்கூடிய ஒன்றுதான். இதையே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் ஓரளவு பக்குவப்பட்ட நம்ம மனசே இவ்வளவு காயப்படுதுனா பிறந்தவுடனேயே பெற்றோர்களை இழந்த குழந்தைகள் எவ்வளவு பாவம்?

அந்த மாதிரி குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கலாமே அதில் விருப்பம் இல்லனா இப்ப எவ்வளவோ புதிய புதிய வழிமுறைகள் வந்துருச்சு அதுல எதையாவது ஒன்ன முயற்சி பண்ணி பார்க்கலாம் அந்த முயற்சியிலும் தோல்வி அடைந்தா நம்மள சுத்தி எத்தனையோ குழந்தை இருக்கு அது நம்ம கூடவே இருக்க மாதிரி நினைச்சிக்கிட்டே வாழலாம். கணவன் மனைவிக்கு குழந்தையாகவும் மனைவி கணவனுக்கு குழந்தையாகவும் சந்தோஷமா வாழலாம்.

இது எல்லாத்தையும் மீறி அப்பப்பநினைவு வநந்துட்டு போய்ட்டுதான் இருக்கும் அதையும் தாண்டி வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு சந்தோஷம்

நம்ம கிட்ட இருக்க தனித்திறமைகளை வளர்த்துக்கலாம் நம்மளோட தரத்தை உயர்த்திக்கலாம் புதுசு புதுசா யோசிக்கலாம் அதற்கு செயல் வடிவம் கொடுக்கலாம் எத்தனையோ ஆதரவற்றவங்க குழந்தையிலிருந்து வயசானவங்க வரை இருக்காங்க அவங்கள நம்ம குழந்தையா நினைத்து ஒரு வேளை சாப்பாடு கொடுக்கலாம்.

இப்படி எதையாவது ஒன்றை செஞ்சு உயிரோட்டத்தோடு வாழலாம் அடுத்தங்களுடைய கேலி கிண்டல் விசாரணை எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு எங்களுக்கு எந்த குறையும் இல்லை நாங்க நல்லாதான் இருக்கோம்னு வாழ்ந்து காட்டலாம்

ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன்.

ஆனா ஒண்ணு இல்லாத ஒன்ன நெனச்சு ஏங்கி ஏங்கி தவிக்கிறத விட நாலுபேருக்கு உந்துசக்தியா மாறுற அளவுக்கு நம்முடைய இலட்சியத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.


நமக்கான எதுவும் நம்மை விட்டு போகாது. நமக்கு என்று விதிக்கப்பட்டிருந்தால் குழந்தையும் சரியான நேரத்தில் பிறக்கும் நம்பிக்கை மட்டும் இழக்காமல் வாழ்ந்தால் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக