உட்பிரிவுகள் பேசுவது ஒருக்காலும் எனக்கு ஏற்புடையதன்று. இராஜகம்பளம் என்றால் சில்லவார், கொல்லவார், தோக்கலவார் என்ற முப்பெரும் பிரிவுகளை இணைத்து தான் நம் முன்னோர்கள் குறிப்பாக இராஜகம்பள மகாஜன சங்கமாகட்டும், பண்பாட்டுக்கழகமாகட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புகளை பின்பற்றியே எங்களைப் போன்ற மிகச்சிறிய சங்கங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒரே பெரிய சமுதாய அமைப்பு பண்பாட்டுக்கழகம் மட்டுமே. முப்பிரிவையும் அரவணைத்து சென்றே இதுவரை வழிகாட்டி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களிலும் சில வாட்ஸ் அப் குரூப்பில் மட்டுமே சிலர் குல ரீதியாக பெருமை பேசிக்கொண்டுள்ளதை பார்க்கிறோம். முதலில் குல ரீதியாக தொடங்கியது பின்னர் இன ரீதியாக பேசத்தொடங்கினர். அது எப்பொழுதிலிருந்து என்றால் திருமலை நாயக்கர் "கொல்லவார் " என்று சமீபத்தில் நடிகை ஒருவரின் ஆய்வை ஒட்டி குல ரீதியாக பேசியவர்கள் தீடீரென "கொல்லவார் " அல்லது "கொல்லா " நாங்களே என்று நிரூபிக்க முயல்கிறார்கள். இதில் இதுவரை வழக்கமாக உள்ள "கொல்லவார்"களைக் காட்டிலும் திடீர் கொல்லவார்கள் மிக அதிகமாக தங்களை கட்டமைக்க முயல்கிறார்கள். கல்யாண வீடானாலும் நான் தான் மாப்பிள்ளை, எழவு வீட்டிலும் நானே என்ற மனப்பான்மையில் ஒரு குரூப் சுற்றி வருவதை காண முடிகிறது. இந்தப்பதிவில் கூட இராஜகம்பளம் 7 மாவட்டங்களில் 200 கிராமங்களில்....... என்று செல்வது அப்படியானால் மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. பண்பாட்டுக்கழகம் 40 ஆண்டுகலாக மிகவும் கஷ்டப்பட்டு கட்டமைத்து பல ஜமீன்களும், பெரியோர்களும் ஒன்றிணைந்து கட்டிக்காத்துவரும் ஒற்றுமையை சிறு பிள்ளைகள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கொட்டுவது போல் செய்வது இந்தக்கால சூழலுக்கு ஏற்றதா? எப்பொழுதும் ஒற்றுமையே பலம் என்பதை உணராது எழுதி என்ன பயன்? இனம் கல்வியில் சற்றே தட்டுத்தடுமாறி முன்னேற முயலும் சூழலில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து வரும்போல் உள்ளது. அப்படி வந்தால் அதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? ஏற்கனவே அரசியலும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ள நிலையில், நிலபுலங்களையும் இழந்து வருகிறோம். சவால்கள் மலையளவு நம் குழந்தைகள் முன்னே உள்ள நிலையில் ஒற்றுமைக்கு வழி வகுக்காமல், குலம், பிரிவு, வகை என்று பேசித்திரிவது தகுமா? நாம் எத்தனை அமைப்புகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரிவினை என்பதை சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் முளையிலேயே கிள்ளி எறிவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.
அருமை சொந்தமே ..அருமையான பதிவு ...விழிப்புணர்வு பதிவு ...நன்றி வாழ்த்துக்கள்
சொந்தமே ...சுப்பு கல்வி அறக்கட்டளை ....கம்பள விருட்சம் அறக்கட்டளை ...ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை ...வசந்தகால மலர்கள் கல்வி அறக்கட்டளை ...இந்த அறக்கட்டளைகளைகளையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் ...
நன்றி .சொந்தமே ....நம் சமுதாயம் என்றாலும் ...பொது தளத்தில் அரசு துறை ...தனியார் துறை ..வரலாற்று துறை ...தொல்லியல் துறை ..என்று கம்பள விருட்சம் அறக்கட்டளை பயணிக்க தொடங்கி 3 வருடங்கள் ஆகிறது ...நம் வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள நல சங்கம் -சென்னை ...போன்றே ...உங்களுடன் நாங்களும் வளர்க்கிறோம் ...
கண்டிப்பாக சொந்தமே ...என் அணுகமுறையும் இதுவே ...
சரியாக சொன்னீர்கள் .சொந்தமே ..அரசியல் தலைமைக்கு நம் சமுதாயத்தில் அதிகம் உள்ளனர் ...அவர்களுக்கு பின்புலமாக ...பக்கபலமாக இருப்பதே ...என்னுடைய தலையாய பணியும் அதுவே ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக