புதன், 3 ஜூன், 2020

கேள்வி : கணவன் மனைவி பிரிவினைக்கு (எல்லா வயதிலும்) அடிப்படையில் எது காரணம்?

என் பதில் :


சுயநலம்தான் காரணம்! குழந்தைகள் இருந்தால் நாம் பிரிந்தால் அது நம் குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று சிந்திக்கத் தெரியாதவர்கள் தங்களுடைய சுய நலம் மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கும் ஒரு சுயநல முடிவு என்றுதான் சொல்வேன்!

குழந்தைகள் இல்லாவிட்டால் கூட அக்னிசாட்சியாக திருமணம் செய்யும்போது " நான் இவளை எந்தக்காலத்திலும் எந்தத் துன்பத்திலும் கைவிடமாட்டேன்!" என்று சொல்லி தான் கை பிடிக்கிறோம். அப்படி செய்தபின் தவறு நடந்தாலும் ஆண் மகன் அந்தப் பெண்ணை கைவிடுதல் ஸ்மிருதி சாஸ்திரம் இரண்டுக்கும் எதிரானது மட்டுமல்ல அது ஒரு நம்பிக்கை துரோகம்!


குழந்தைகள் மேம்போக்காக முடிவை ஏற்று கொண்டாலும் உண்மையான தாய் தந்தை பயாலஜிகல் மதர் அல்லது பயாலஜிகல் பாதர் என்பது மாற்றவே முடியாது.

நாம் தியாகம் செய்ய தயாராக வேண்டும். அப்போதுதான் நம் நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தப் பெண்ணிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும் எனக்கு என் சுகம்தான் முக்கியம் என்று!


நம்மால் ஒரு பொறுப்பு எடுத்து செய்ய முடியவில்லை என்றால் அந்த செயலில் இறங்க கூடாது. இன்றைக்கு மோசமான வளாக தெரியும் ஆண் அல்லது பெண் திருமணத்தின் போது மட்டும் எப்படி நல்லவனாக தெரிந்தாள் என்பதை யோசிக்க வேண்டும்! ஒருவேளை நான்தான் அவளை இப்படி மாற்றி விட்டேனா என்று ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசித்தால் பிரிவு ஏற்படாது!

நன்றி ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக