புதன், 3 ஜூன், 2020

கேள்வி :தனி நபர் கடன் இன்றி வாழ நீங்கள் கொடுக்கும் சிறந்த அறிவுரை என்ன?

என் பதில் :..

எனது அம்மா தான் வீட்டின் நிதி அமைச்சர். எப்பொழுதும் முக்கிய முடிவுகளை அவர்கள் தான் எடுப்பார்கள்.

அவர்களிடம் இருந்து நிதி மேலாண்மை பற்றி நிறைய கற்று கொண்டேன். அத்தனையும் அனுபவ படிப்பு தான்.

அவர்களிடம் மிகவும் பிடித்தது கடன் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது.

இது வரையில் தேவை இல்லாமல் எதற்காகவும் செலவு செய்தது கிடையாது. படிப்பிற்கு கூட கடன் வாங்கியது கிடையாது.

சிறுக சிறுக சேமித்து சரியான திட்டமிடல் மூலம் கடன் வாங்காமல் எங்களை வழி நடத்தி சென்றார்கள்.

 அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் சேமிப்பின் மூலம் தான் வாங்கினோம்.

அதோடு எனது அப்பாவும் டீ மட்டும் நண்பர்களுடன் சாப்பிடுவார்  சம்பாதிக்கும் அனைத்தையும் என் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார். அப்படி சிக்கனமாக இருப்போம் நாங்கள்.

நாம் வாழ்வதற்கு நாம் சம்பாதிக்கும் பணம் போதும். அடுத்தவர்கள் போல வாழ்வதற்கு மட்டுமே பணம் அதிகம் தேவைப்படுகிறது.

அப்படி வாழ ஆசைப்பட்டு கடனாளி ஆனவர்கள் அதிகம். இன்னும் நான் டெபிட்  கார்டு மட்டும் தான் .

வரும் வருமானத்தை கொண்டு சேர்த்து வைக்கும் பணத்தில் தேவையானவற்றை வாங்கலாம்.

இது தனி நபர் மற்றும் குடும்பம் என எல்லோருக்கும் பொருந்தும். வீண் செலவு குறைத்து கொண்டாலே கடனின்றி வாழலாம்.

அவசிய தேவைக்காக கடன் வாங்கலாம் ஆனால் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக தேவைகளை ஏற்படுத்தி கொள்வது வீண்.

ஆசைபட்டதை வாங்க காசு இல்லை என்று வருத்தப்படுவதை விட இருக்கும் காசிற்கு எதை வாங்கலாம் என்று யோசிக்கலாம்.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக