செவ்வாய், 9 ஜூன், 2020

 கேள்வி :..நமது வாழ்க்கையின் அங்கமான ஒருவர், நம்மை விட்டு எவ்வளவு தூரம் விலகி போனாலும் , மீண்டும் ஈர்க்கப்பட்டு கட்டாயம் வந்து சேருவார் என்ற நம்பிக்கை உண்மையா அல்லது கானல் நீரா ?

என் பதில் :..


" நாளை ன்னு ஒன்னு இல்லாத போது, கைல எஞ்சி இருக்கது கடந்த காலம் மட்டும் தான்..


தனிமையில் இருக்கும் போது இப்படி பிரிந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்களா??


கிட்டத்தட்ட ஏழு கடல் ஏழு மலை தாண்டி, நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட ஒருவர் நம்மை சந்திக்க வருவது போன்ற காட்சி மணிரத்னம் அவர்களின் படத்தில் வேண்டுமானால் இடம்பெறலாம்..


நிஜவாழ்க்கையில் அதே போல எதிர்பார்த்தால், "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.." என்று சோகப் பாடல் பாட வேண்டியது தான்.. ஒருவரும் திரும்பி வர மாட்டார்..(நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் முக்கால்வாசி அப்படி தான்.)


நிஜமாக நடந்த ஒரு கதை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆங்கில வார இதழில் வாசித்தேன். 6 வருட காதல், 9 வருட நட்பு.. பிரிந்துவிட்டது. காரணம் செக்ஸ் பெஃபோர் மேரெஜ்.


அந்த ஆணுக்கு, தன் காதலிக்கு தன் மீது நம்பிக்கையில்லை என்ற எண்ணம். காதலிக்கு, காதலன் தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வில்லை என்ற எண்ணம்.பிரிந்துவிட்டனர்.


சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து அவருக்கு ஒரு மடல் வருகிறது..


என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் எனக்கு காதல். அவர் என்னை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். எதற்காகவும் என்னை கட்டாயப்படுத்துவதில்லை. என் உணர்வுகளுக்கு அவரிடம் மதிப்பு உள்ளது..
அவ்வளவு தான்..


காதலும் சுயமரியாதையும் எதிரிகள் என்று நான் படித்திருக்கிறேன்.. காதல் இருக்கும் இடத்தில் சுயமரியாதை இருக்காது. அப்படி இருந்தால் அந்த உறவு நீண்ட நாள் நிலைத்திருக்காது..


பிரிந்து போன ஒருவர் சுயமரியாதை பார்த்துக்கொண்டு இருந்தால் திரும்பி வர நினைக்க மாட்டார்.. ரெண்டு பேருமே அப்படி இருந்தால் அந்த உறவின் ஆயுட்காலம் அவ்வளவு தான்..


நமக்கு தெரியும், பள்ளிக் கூடம் படிக்கும் போதே காதல் வயப்படுவது இந்த காலத்தில் அதிகமாகிவிட்டது. இந்த காலத்தில் எந்த பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறார்கள்.??


அன்பு பாசம், அக்கைறை, முன்னுரிமை, ஆறுதல், பாதுகாப்பு உணர்வு இதெல்லாம் ஒருவரிடம் இருந்து கிடைத்தால், மனித மனம் அதை விரும்பும்..


இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பிரிந்து சென்றவர்களுக்கு வேறு ஒரு புது உலகம் உருவாகி இருக்கலாம். 'தே தே ப்யார் தே' என்று ஒரு படம் உள்ளது. அதில் அஜய் தேவ்கன் தான் லீட்.. 50 வயது. ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு 25 வயதில் ஒரு பெண்ணும் 20 வயதில் ஒரு ஆணும் இருக்கையில், தன் மகளின் வயதுடைய ஒரு பெண்ணிடம் காதல் வரும்..


Human heart is like WiFi.. if it goes away from its dear one, it catches another network..


இதையெல்லாம் நான் தவறு என்றோ சரி என்றோ சொல்லவில்லை..


அன்போ, காதலோ அல்லது ஒரு உறவோ நம்மிடம் இருக்கும் வரை தான் நமக்கு சொந்தம்.. நம்மை விட்டு பிரிந்து விட்டால், பிரிவின் வலி, தனிமை போன்றவை ஏற்கனவே கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும். இந்த சமயத்தில் ஆறுதலான ஒரு நட்போ ஏதோ ஒன்று அந்த வலியை மறக்க செய்தால், நமது மனம் அவரது துணையை விரும்ப ஆரம்பித்துவிடும்.


திரும்பி வந்தால் வரட்டும். வருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம். எதையும் எதிர்பார்க்காமல் நாம் நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது..

நன்றி ...வாழ்க்கை வாழ்வதற்கு ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக