கேள்வி :.நிறைய பேர் சொந்தக்காரர்களை வெறுப்பது ஏன்? இனி வரும் காலங்களில் கூட்டுக்குடும்பம் சாத்தியமா?
என் பதில் :.
காலங்கள் மாறிக்கொண்டே இருப்பதை நாம் கண்ணால் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த நாற்பது வருடங்களில் உண்டாகிய சமூக மாற்றங்களை நாம் கனவில்கூட காணவில்லை. கல்வி பெருகி, பல துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து படித்தவர்கள் நகரவாழ்க்கைக்கு நகர்ந்து விட்டனர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் செழிப்பாக இருந்த கிராமங்களிலிருந்து இன்று இளைஞர்கள் நகர்ந்து விட்டார்கள். சொந்த நிலபுலன் உள்ளவர்கள், படிக்காதவர்கள் மட்டுமே இப்போது அங்கு உள்ளனர். என் ஊர் என்று சொல்லிக்கொள்வது இப்போது வயதான தாய் தந்தை இருந்தால் மட்டுமே. உறவினர்கள் வீடுகளுக்கு போய் தங்குவது குறைந்து விட்டது. ஏன் என்றால் அவர்களுக்கு நகரங்களில் பதில் மரியாதை செய்வது இடநெருக்கடி, விலைவாசி காரணமாக இயலாத காரியம் ஆகிவிட்டது. இதனால் பழைய கூட்டுக்குடும்பங்கள் இனி சாத்தியப்படாது.
சொந்தக்காரர்களை வெறுக்கிறார்கள் என்று கிடையாது. அவரவர்கள் பாட்டை பார்த்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வளவு தான். பிற்காலத்தில் சொந்தங்களை காண எல்லோரும் ஒரு இடத்திற்கு பிக்னிக் போவதுபோல காலையில் சென்று கண்டுகளித்து மாலையில் வீடு திரும்ப வேண்டியதுதான். இன்றைய நிலையில் இதுவே சிறந்தது.
நன்றி ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக