லவ் U ....CD DAWN (2004-மாடல் )....பைக் ...
வழக்கமாக கச்சேரி வீதியில் இருக்கும் பாலாஜி காஃபி ஷாப்பிற்கு நேற்று பைக்கில் சென்று அந்த ஷாப் வாசல் அருகே அனாயசமாக பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே, காபி ஸ்டாலில் இரண்டு மாஸ்டர்கள் (ஒருவர் டியூட்டி முடிந்து போகிறார், இன்னொருவர் டியூட்டிக்கு ரெடியாக நிற்கின்றார்) என்னைப்பார்த்து சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டேன்.
கேஷ்கவுன்ட்டரில் பணம் கொடுத்து காஃபிக்கான பில்லை வாங்கிக்கொண்டு அந்த கவுன்ட்டருக்கு சென்று, மாஸ்டர் நீங்க என்னை பார்த்து ஏதோ சொல்லி இரண்டு பேரும் சிரிச்சுகிட்டீங்களே என்னென்னு கேட்டேன். ஒண்ணுமில்லே சார், நிறைய பேர் கொஞ்சம் நடுத்தர வயசாயிட்டாலே கியர் இல்லாத வண்டிக்கு மாறி ஓட்ட ஆரம்பிக்கறாங்க. அப்படியும் இல்லேன்னா பைக்கை விரும்பறவங்க 100 சிசி பைக் வாங்கி ஓட்றாங்க.
நீங்க என்னடான்னா ஹைஸ்பீடு என்ஜின் லேட்டஸ்ட் மாடல்(2004-மாடல் ) CD DAWN வாங்கி வச்சுகிட்டு, ஸ்பீடா வந்து கடைவாசல்ல அசால்ட்டா ஸ்டான்ட்போட்டு உள்ளே வர்றீங்க. அதைத்தான் சொல்லி பேசிகிட்டு இருந்தோம். இன்னைாரு மாஸ்டர் தொடர்ந்தார். பொதுவா இப்போ நிறைய பேரு 30 ஐ தாண்டிட்டாலே ப்ளெய்ன் ஷர்ட் போடறாங்க. நீங்க என்னடான்னா சின்ன வயசு பசங்களைப்போல ஸ்லிம்ஃபிட் பேன்ட்டும் ஸ்லிம் ஃபிட் கேஷ்வல் ஷர்ட்டும் போட்டுகிட்டு வரும்போதே ஸ்பீடா நடந்து வர்றீங்க, உங்களைப்பார்த்தா ரொம்ப ஆச்சர்யாமா இருக்கு சார் என்றார்.
இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு. வயசை நான் எப்பவும் எண்ணிக்கையாதான் வச்சுருக்கேன். அது வருஷா வருஷம் கூடிகிட்டேதான் போகும். ஆனா உள்ள இருக்கற மனசு இருக்கே. அதை நான் எப்பவும் இளமையாவே வச்சிருக்கேன். அதுக்கு நான் எப்பவும் எனக்கு வயசாயிடுச்சுன்னு நியாகப் படுத்தறது இல்லே. அதுவும் இந்த பைக் பிடித்ததற்கு காரணம் ...ஆசை ..ஆசையாக .என் திருமணம் முடிந்து அடுத்த நாள் வாங்கிய முதல் முத்தான சொத்து ...இந்த பைக் ...என் மனைவிக்கு பிடித்த பைக் ..எனக்கும் பிடித்த பைக் ..கோவையில் இதன் கால் சக்கரங்கள் படாத இடங்கள் இல்லை ..கோவை ..பொள்ளாச்சி ..உடுமலை சுற்றி இருக்கும் கிராமங்கள் ..திருமூர்த்தி மலை ..கோவில்கள் ..சேலம் ..நாமக்கல் ...மேச்சேரி ..ஓமலூர் ..என ....என் குடும்பத்தை வெயில் ..மலையென்றும் பாராமல் சுமந்த ஜீவன் இந்த CD Dawn ....என் செல்ல ஷ்யாமுக்கும் இந்த பைக் மீது உயிர் ....40 ஐ தொட்டுட்டாலோ இல்லே பிள்ளைங்களுக்கு திருணம் செஞ்சுவச்சுட்டாலே, இனி என்ன இருக்கு நமக்கு வயசாயிடுச்சுன்னு, வயசுக்கேத்த மாதிரி நாம நம்மளை மாத்திக்கனும்கிற மைன்ட் செட்டுக்கு நிறைய பேரு வந்துடறதால, இயல்பாவே அவங்களோட உடலும் தளர்ந்துபோய் மனசும் வயாசாகிப்போச்சுங்கிறத அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சுடுது. நான் எப்பவும் இளமையாக இருக்க ஆசைப்படறேன்னு நமக்கு நாமே சொல்லிகிட்டு இருந்தா, இளமையானவர் களுக்கே உண்டான செயல்களை அன்றாடம் செஞ்சுகிட்டு இருந்தா உடம்பு தானாகவே சுறுசுறுப்பாயிடுது.
இது மட்டுமில்லே நடந்து போன விஷயங்களைப்பற்றியே எப்போதும் சிந்திசுகிட்டே இல்லாம வரப்போகும் பிரச்சனைகளைப்பற்றிய கவலையில் ஆழ்ந்துவிடாமல் எது நடந்தாலும் அதனை சமமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் அடைந்துவிட்டால் என்றுமே நாம் மனதளவில் இளமையானவர் கள்தான். நீங்களும் முயற்சித்துப்பாருங்க மாஸ்டர் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.
மனதிற்கு என்றுமே வயதாவதில்லை...அதே போல் ..என் cd dawn பைக்குக்கும் வயதானதில்லை ..நிறம் மாறும் மனிதர்களுக்கு மத்தியில் ..இந்த இயந்திர ஜீவன் என்றும் விசுவாசகமாக வாழ்க்கையில் எத்தனை கஷ்டம் வந்தாலும் சுமந்து செல்லும் ஜீவன் ....லவ் யு dawn ....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக