இன்றைய ஞாயிறு ...அருமையான வாசிப்பை நேசிப்போம்...நிகழ்வு
வளரும் எதிர்கால குழந்தைசெல்வங்களுடன் ..இன்று
உடுமலை கிளை நூலகம் நூலகம் எண் இரண்டில் வழக்கறிஞர் அருள் மொழி அவர்கள் வாசிப்பைநேசிப்போம் என்ற தலைப்பில் 05.08.2018 ஞாயிறு மாலை 4 மணி அளவில் ...எதிர்கால குழந்தை செல்வங்களுடன் ..உடுமலையின் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினரராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் ..நன்றி ..வழக்கறிஞர் பற்றி ஒரு சிறு குறிப்பு ..
நம்பிக்கை மனிதர்கள் .....அ. அருள்மொழி!!!
அ. அருள்மொழி - A . Arulmozhi
சேலத்தில் பிறந்த இவர் , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான தன் தந்தையால் தமிழ் பற்றுடன், திராவிடப் பாரம்பரியத்தையும் கற்று வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர் பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு என்று இருந்த பிம்பத்தை உடைத்து பகுத்தறிவு , நாத்திகம் , பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு என்று மாறுபட்ட தளங்களில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .
தனது கல்லூரி காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் , திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் . சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி தொடர்ந்து மேடைகளில் , பொதுக்கூட்டங்களில் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி .
சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில் முறையாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .
நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை , ரசனை , அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல் முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக இருப்பது இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .
பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை....
இன்றைய குழந்தைகளுடன் அவர்களுடன் உரையாடி கொண்டே நிகழ்ச்சியில் பேசியது அருமை ..குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் ,அவர்கள்
அழகாக பதில் அளித்து விழாவை வெகு சிறப்பாக செய்தது மிக்க மகிழ்ச்சி ..அவரின் சேலம் சிறுவயதில் பள்ளியில் நடந்த பேச்சு போட்டிக்கு தலைப்பை ஆசிரியர்கள் கொடுத்து ..அவர் முதல் முறையாக சேலத்தில் நூலகம் சென்று படித்து பள்ளியில் நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்றது அழகாக வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது ..பேச்சு முடிந்தவுடன் ..உடுமலையின் முதல் இந்திய விடுதலைக்கு போரிட்ட தளி எத்தலப்ப மன்னரின் ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் என்ற நூலை பரிசாக வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தோம் ..இந்த விழாவை ஏற்பாடு செய்த அமராவதி இந்திய ராணுவ பயிற்சி பள்ளியின் ஆசிரியர் ..திரு இளமுருகு அவர்களுக்கும் ,உடுமலை கிளை நூலகம் 2-நூலகர் -திரு கணேசன் அவர்களுக்கும் ..மனமார்ந்த நன்றிகள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக