World Elephant Day...Augest-12(உலக யானைகள் தினம் )
World Elephant Day...Augest-12
உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது நமது ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCOவின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.
2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்
இந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.
உங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.
இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.
இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.
இங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.
இங்கு எப்படி செல்வது?
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.
2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்
3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.
கோவை வழியாக செல்லும் ரயில்கள்:
1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381
1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381
கட்டணம்:
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10
நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.
உணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:
The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001,
Tamil Nadu.
Ph - 04259 225356
The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001,
Tamil Nadu.
Ph - 04259 225356
உங்கள் நேரத்தைக் கழிக்க நல்ல இடம். சென்று வாருங்களேன்.
நம்மளுக்கும் கொஞ்சம் யானை பலம் வேணும்...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...
ஆகஸ்ட் 12- சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம்...!யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்?
பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும்
காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.
சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம்,
குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை.
உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த
ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா,
இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில்
50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு.
தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும்
யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள்,
சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள்
மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள்
கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா,
மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை.
கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை (15)
அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும்.
இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.
வயதான பெண் யானைதான் மற்ற
யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன்
வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை,
வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும்.
யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது.
உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம்
குடும்பமாக சந்தித்துக் கொண்டால்
ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண்
யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின்
வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத
யானைகளை "மக்னா' என்கின்றனர். யானையின் வால்
அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண்
யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண்
யானையாகவும் எளிதில் அடையாளம்
கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல்
போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக
ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.
இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால்,
யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை.
சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும்
ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை.
பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும்,
படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல்,
உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும்.
மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில்
"எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன்
போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது.
ஞாபகசக்தி அதிகம்.
மதம் பிடிப்பது ஏன்?
காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில்
மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும்.
இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள்
வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும்.
அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண்
யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும்.
யானைகள் சந்திக்கும் சவால்கள் :
பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல்
ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன்
ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம்
சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க
வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி,
இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக்
கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில்
அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம்
பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.
இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக்
பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும்
சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள்,
பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக்
கொண்டு செல்லாமல்,
அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும்
யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும்
நடக்கிறது.
யானையை பாதுகாப்பது முக்கியம் :
யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள
செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள்,
மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான்
வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன.
காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற
விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.
யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி,
கொடிகளை, பின்தொடர்ந்து வரும்
காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும்.
மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால்,
வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள்
ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற
சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள்
வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக
இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம்
இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து,
அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம்
செய்யும் பேருதவி.
ஆதார உயிரினம் யானை (KEY STONE SPECIES)
யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார
உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற
இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ
அதை அப்படி அழைப்பது வழக்கம்.
அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும்,
புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில
வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன.
இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற
இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும்
பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி,
செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன.
இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின்
சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள்
அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும்
உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம்
தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின்
தாகத்தை தணிக்கிறது.
நம்மளுக்கும் கொஞ்சம் யானை பலம் வேணும்...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக