புதன், 24 ஜூன், 2020

கேள்வி :...அடிக்கடி கம்பெனி மாறுவது நல்லதா?

பதில் :....

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி "A rolling stone gathers no moss" என்று. இதன் பொருள் நீரில் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு கல்லில் பாசி பிடிக்காது என்று. இந்த கேள்விக்கு அது மிகப் பொருத்தம்.

அடிக்கடி நிறுவனங்களை மாற்றும் போது அனுபவ காலம் என்பது பாதிக்கப்படும். அடுத்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால அவர்கள் எவ்வளவு காலம் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தார் என்பதைத்தான் முதலில் காண்பர். ஆறு மாதம், எட்டு மாதம் ஒருமுறை மாறி இருந்தால் அது அவரைப்பற்றி பல விஷயங்களை வெளிப்படுத்தும். அவர் நம்பகமானவரா, வேலை கற்று தங்குவாரா மாட்டாரா என்றும் அவர் எந்த வேலையையும் ஒழுங்காக கற்க ஆர்வம் உள்ளவரா அல்லது இங்கும் அதுபோல குறுகிய காலத்திலேயே பையை தூக்கிக்கொண்டு சென்று விடுவாரா என்று தான் பார்ப்பார்கள்.

இளம்வயதில் என் நண்பர்கள் சிலர் அதுபோல செய்வர். என் அறை நண்பன் அதிர்ஷ்டமானவன். மாலையில் வரும்போது நான் வேலையை விட்டு விட்டேன் என்று வருவான். மறுநாள் காலையில் வேலை தேடிப் போவான். மாலை வரும்போது வேலை கிடைத்து விட்டது என்பான். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று அப்படி எல்லாம் வேலை கிடைப்பதில்லை. அதுபோன்றவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக கஷ்டப்படுவார்கள். குடும்பம் அமைந்துவிடும் ஆனால் அவர்களின் மகிழ்ச்சியைவிட மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக