கேள்வி :..இளையராஜாவின் இசையில் நீங்கள் மிகவும் இரசித்த பாடல் எது?
என் பதில் :...
பொதுவாகவே இளையராஜா சார் அவர்களின் மெலடி மெட்டுக்கள் எல்லாருக்கும் பிடித்தமானது.ஆனால் அதிலேயும் சில அதீதமான , நமது மனதை ஏதோ செய்யும் சில பாடல்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விடுகிறது .அதை எப்பொழுதும் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாது.
அதுமட்டுமில்லாது ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையின் காலகட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டிருப்போம்; நம்மை அந்தப் பாடல் மறுபடியும் அதே கால கட்டத்திற்கு கொண்டு செல்லும்- நமக்கு மனதில் தோன்றும். இளையராஜா பாடல்கலின் special இதுதான்.
எனக்கு பிடித்த பாடல் நிறைய இருக்கிறது ..எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது. நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன்;
இசையில் தொடங்குதம்மா என்ற ஹேராம் படத்தின் வரும் பாடல்.
இந்தப் பாடலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம். அஜய் சக்கரவர்த்தி மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் ஆலாப் மிகவும் சிறப்பு. பாடல் நெடுக வரும் interlude மியூசிக் அருமை. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!
https://youtu.be/ztBl-6TaBw8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக