கேள்வி :..தனியாக வாழ்வதில் உள்ள கடினமான விஷயம் என்ன?
என் பதில் :..இதற்கு சமீபத்தில் படித்த பத்திரிகை செய்தி தான் ..
தனியாக வாழ்வதை பற்றி நினைத்தாலே இந்த கதை தான் நியாபகத்துக்கு வரும். இது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியான உண்மை சம்பவம்.
ரித்துராஜ்ன்னு ஒருத்தர், மும்பையை சேர்ந்தவர். அமெரிக்காவில் கணிப்பொறி துறையில் வேலை. 2013ல் தன் தந்தையை இழந்தார். அதனால் மனமுடைந்த தன் தாயை தன்னோடு அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார். அவருடைய தாய்க்கு அமெரிக்க வாழ்க்கையை விட இந்தியா பிடித்திருந்ததால் ஒரே வாரத்தில் திரும்பி விட்டார். இதற்கிடையில், ரித்துராஜின் திருமண வாழ்க்கை கசந்தது, விவாகரத்தில் போய் முடிந்தது. தனது 10 வயது மகனை தனது பராமரிப்பில் வளர்க்க அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் போராடி கொண்டிருந்தார். இந்தியா சென்ற தாயோ முதியோர் இல்லத்திற்கு சென்று வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர அமெரிக்கா வர மாட்டேன்னு ரித்துராஜுடன் மல்லு கட்டி கொண்டிருந்தார். இவர்களுக்கு இடையே இது மனக்கசப்பாய் மாறி, அந்த அம்மா இவருடைய தொலைபேசி அழைப்பு எதையும் ஏற்பதை நிறுத்தி விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு 2016ல் விவாகரத்து வழக்கு முடிந்த கையோடு தாயை சந்திக்க வந்தார் ரித்துராஜ்.
எவ்வளவு முறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. நகல் சாவி தயார் செய்து கதவை திறந்து தன் தாயை தேடியவருக்கு பேரதிர்ச்சி. இவர் வருவதை உணர்ந்து படுக்கை அறையில் இருந்த பத்து இருபது புறாக்கள் சிதறி பறந்தன. புறாக்கள் மொய்த்து கொண்டு இருந்த இடத்தில் தன் தாயின் புடவை அணிந்தவாறு ஒரு எலும்புக்கூடு இருந்தது.
காவலர்கள் அறிக்கையில் ரித்துராஜின் தாய் பல மாதங்களாக இறந்து கிடந்ததாகவும், வீடு பத்தாவது மாடியில் இருந்ததால் அடுக்கு மாடி குடியிருப்பின் சங்கத்தினர் ரித்துராஜ் கேட்டு கொண்டும் சென்று பார்க்கவில்லை என்றும், வேலையாட்களை அவர் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு வேலையை விட்டு நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தனியாக இருந்து அந்தம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்களோன்னு வருத்தப்படுவதா.. ஏம்மா, பையனோட போய் இருந்திருக்கலாம்ல என்று கடிந்து கொள்வதா.. தெரியவில்லை. எது என்னவோ, தன் தாய்க்கு இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டேனே என்று சாகும்வரை மனம் நோகப்போவது என்னமோ ரித்துராஜ் தான்.
ஏஜ்வெல் என்கிற NGO நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மட்டும் 23.4% முதியோர் தனியாக வாழ்கின்றனராம். தனியாக வாழ்வதில் அவர்களுடைய மனக்குறை என்ன தெரியுமா? தன் உடல்நலன் இல்லையாம். தன்னோடு தினசரி வாழ்க்கையை, சிரிப்பை கோபத்தை எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தனிமை உருவாக்கும் வெற்றிடம்.
வாழ்வு ஒருமுறை தான் ...அன்புடன் ..சகிப்புத்தன்மையுடன் ..வாழுங்கள்
நன்றி ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக