கேள்வி :.வங்கி கடன் வாங்கும்போது இன்சூரன்ஸ் ஏன் போடுகிறார்கள்? அந்த இன்சூரன்ஸ் என்பது என்ன? அதை பற்றி விளக்க முடியுமா?
என் பதில் :..
வங்கியில் கல்விக்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றை விண்ணப்பித்தால் கடன் விண்ணப்பித்தவருக்கு ஒரு காப்பீடு போடுமாறு அன்புடன் சொல்லுவார்கள். குறுக்கு விற்பனை (cross selling) என்பதை தாண்டி, அதன் பின்னால் உள்ள விஷயத்தையும் பார்க்கலாம்.
இந்த இரண்டு கடன்களும் நீண்ட கால கடன்கள். கடன் வாங்கியவர் ஒருவேளை காலனிடம் தவணை வாங்கிவிட்டால் கடன் திருப்பி வராமல் போக வாய்ப்புண்டு.
அதிலும் கல்விக்கடனுக்கு பிணையாக சொத்து எதுவும் தரப்பட்டிருக்காது. இதனால் கல்வி கடனாளரை, காப்பீட்டு எடுக்க சொல்லி வங்கி மேலாளர் வற்புறுத்துவார்.
மருத்துவ படிப்பு போன்ற பெரிய செலவு பிடித்த கல்வி பயில்பவர்கள், அதற்கான கல்வி கடன்களுக்கு அவர்களே காப்பீடு செய்து கொள்ளுகிறார்கள்.
தனிநபர் காப்பீடுகளுக்கு செலுத்திய கட்டணத்தை (80C) வரிச் சலுகையாக பெறலாம்.
வீட்டுக்கடனை பொறுத்தவரை கடன் விண்ணப்பிப்பவர்கள் காப்பீடும் வாங்கிகொள்ளுவது நல்லது.
45 இலட்சம் ரூபாய் பெறுமான வீட்டை பிணையாகக் கொடுத்துதான் 30 இலட்சம் ரூபாய் கடன் வாங்க பட்டிருக்கும்.
முப்பது வருடங்கள் வரை தவணைக்காலம் உள்ள வீட்டுக்கடனில், பத்து வருடங்கள் தவணைக்கட்டிய பின்னர், துரதிர்ஷ்ட வசமாக கடனாளர் மரிக்க நேரிட்டால் அது பெரிய துயரம்.
அவரது குடும்பம் மீதிக்கடனை கட்ட முடியாமல் போகலாம். அதனால் குடும்பத்தலைவரை இழந்த துயரத்தோடு வசிக்கும் வீட்டையும் அந்த குடும்பம் பறிகொடுக்க நேரிடும். இந்த கஷ்டத்தை பலமுறை பார்க்க நேரிட்டிருக்கிறது.
சரக்கை பிணையாக (hypothecation) வைத்து வாங்கும் வணிக கடன்களுக்கு அந்த சரக்குக்கு முழுமையாக காப்பீடு செய்ய வேண்டியிருக்கும். வாகன கடனுக்கும் காப்பீட்டை தவிர்க்க முடியாது.
நன்றி ...
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக