கேள்வி :..ஓரிரு நாட்களுக்குப் பிறகு மக்கள் மறக்கும் போதிலும் மக்கள் ஏன் நிறைய புத்தகங்களைப் படிக்கிறார்கள்?
என் பதில் :...
உங்கள் கேள்வியை பார்த்தவுடன் நான் எப்போதோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒருவர் தினசரி கதாகாலட்சேபதிர்க்கு மாலை ஆனால் போய்் விடுவார்.
மனைவிக்கு கோபமான கோபம். தினசரி இப்படி போகிறாரே இவருக்கு என்ன புரியப்போகிறது என்று நினைத்து ஒரு பத்து நாள் போனபிறகு கேட்டே விட்டார்.
"ஏங்க இன்னைக்கு கதாகாலட்சேபத்திலே என்ன கதை சொன்னாங்க?/
' எனக்கு அந்த கதை சரியா புரியலே.'
அப்ப, நேத்திக்கு சொன்னது?'
'அதுவும் தான்.'
'இதுவரைக்கும் போய் கேட்டதிலேயே உங்களுக்கு புரிஞ்ச கதை எது?
'எதுவும் புரியலை'
அப்புறம் எதுக்கு தினமும் போய் வாரீங்க?' கேட்டுகொண்டே, மனைவி ராத்திரி சாப்பாட்டிற்கு பிறகு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அவர் கழுவிக் கொண்டிருந்த சல்லடையைக் காட்டி கணவர் இப்படி சொன்னார்:
அந்த வடிகட்டியில் நீ ஊத்தின தண்ணி எதுவும் நிக்கலை. ஆனால் சல்லடை சுத்தமாச்சு பாரு. அது போலதான் கதை புரியலைனாலும் கேட்கும்போது மனசு சுத்தமாகுது'
அது போலதான் புத்தகங்கள் படிக்க படிக்க , அது 2,3, நாளில் மறந்தாலும் சரி மனசில் ஏற்படும் எண்ணத்தில் சிறிது சிறிதாக மாற்றம் கொண்டு வருவதை பார்க்கலாம்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. இதோ இப்ப நீங்க கேட்ட கேள்விக்குகூட என்னைக்கோ நான் படித்தது ஞாபகத்துக்கு வருது பாருங்க. படிக்க படிக்க அப்படி நமக்கு தேவையான சமயத்தில் வந்து, உதவிக்கரம் நீட்டும்.
புத்தகம் வாசிப்பது என்பது சுவாசிப்பது போலாகும்.
வாசிப்பை ...நேசிப்போம் ...நன்றி ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக