வெள்ளி, 5 ஜூன், 2020


கேள்வி :..ஒரு மனிதனை சீரழிக்கும் பழக்கங்கள் என்னென்ன?

என் பதில் :...


அட நிறைய பழக்கம் இருக்குங்க. ஆனா மனுஷன சீரழிக்கிற மிக முக்கியமான பழக்கம் என்னன்னா.

தன்னிலை மறைத்து பிறரிடம் தன்னை வேற்று ஆளாக காட்டிக்கெள்வது.

இதுதான் எனக்குத் தெரிந்து மனிதனை சீரழிக்கும் மிகப்பெரிய தீய பழக்கம்… இதன் காரணமாகவே நாம் எதுவாக இல்லையோ அதுவாக இருக்க முயற்சிக்கிறோம். பிறரிடம் நன்மதிப்பைப் பெற நம் உண்மை வெளிப்பாடுகளை மறைக்கின்றோம்.

இதன் காரணமாகத் தான் நாம் ஒருவரை காதலிக்கும் போது வராத பிரச்சனை, அவரை மணமுடித்த பிறகு வருகிறது. காதலிக்கும் போது நம் துணைக்கு பிடித்த வாறு நம்மை எப்படியெல்லாம் காண்பிக்க முடியுமோ அப்படி எல்லாம் காட்டி கொள்கிறோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நம்முடைய உண்மை முகம் வெளிவரும் பொழுது, பிறரால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அதுவே பல பிரச்சினைகளுக்கு தொடக்கமாக இருக்கிறது. முதலிலிருந்தே நாம் நாமாகவே இருத்தல் தான், நமக்கான உண்மையான இன்ப துன்பங்களை உணரச் செய்யும். பிறரிடம் உங்களை எப்போதும் நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருந்தால், எப்போதாவது சிறு தவறு செய்தால் கூட "உன்னை எப்படியல்லாமோ நினைத்திருந்தேன். நீ இப்படி செய்வாய் என்று நினைக்கவில்லை" என்று பிறர் எளிதாக கூறிவிடுவார்கள்.


எனவே உங்களுடைய இருள் பகுதியையும் பிறரிடம் அவ்வப்போது காட்டிக்கொள்ளுங்கள். அது உங்களை தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால் நாம் யாருமே நல்லவர்களே கிடையாது. நமக்கு தேவையாக இருப்பது தீமையாகவே இருந்தாலும், அதற்கான நற்காரணங்களை மேற்கோள்காட்டி, அவற்றை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்.

எடுத்துக்காட்டாக இரண்டு நாட்கள் முன்பு நடந்த அந்த யானை சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். மனிதன் கர்ப்பமாக இருந்த யானையை வெடி வைத்து கொன்றுவிட்டான். உடனே மனிதாபிமானம் கொண்டவனைப் போல் நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஒரு கண்டெண்ட் கிடைத்துவிட்டது.

அவர்கள் அரக்க குணம் கொண்டவர்கள்
யானைக்கு இப்படி செய்ய எப்படி மனது வந்தது.
அதற்கு எவ்வளவு வலித்திருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் யானையை இப்படி செய்யலாமா.
தன்னை நம்பிய யானைக்கு இப்படி துரோகம் இழைத்து விட்டார்களே என்று பல குரல்கள் ஒலித்தன, வாயில் சிக்கனையும், மட்டனையும் மீனையும், திணித்துக் கொண்டே…

கர்ப்பமாக இருக்கும் யானை பாவம் என்றால், கர்ப்பமாக இருக்கும் மீன் ஆடு மாடு, பொதுவாக பிற உயிரைக் கொல்வது என்றாலே பாவம் தானே. நம் தேவை என்பதற்காக பாவபுண்ணியம் பார்ப்பதில் இவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து விடுவதா. நாம் வளர்த்த ஆட்டையும், மாட்டையும், கோழியையுமே அடித்து சாப்பிடுகிறோம். இதிலிருந்து எங்கு காட்டில் வாழும் யானை மீது நமக்கு உண்மையான இரக்க குணம் வரப்போகிறது.

நம் வாழ்வில் நாம் பார்க்கும் அனைத்துமே ஒரு கண்டெண்ட்.

சென்ற வாரம் வெட்டுக்கிளி.

அதற்கு முன்னர் கொரோனா.

இன்று யானை.

நாளை நிச்சயம் மனிதர்களாகத்தான் இருப்போம்.

(தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முற்படுவது தான், மனிதனை சீரழிக்கும் கொடிய பழக்கம்)

நன்றி .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக