வெள்ளி, 5 ஜூன், 2020

கேள்வி :..வாழ்க்கையில் யாரையும் புண்படுத்தாமல் அனைவரையும் திருப்திபடுத்தி ஒரு செயலை நம்மால் செய்ய முடியுமா?



என் பதில் :..என் பாடாக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது  நடந்த உரையாடல் ...

அப்படித்தானே எல்லோரும் வேலை பார்க்கிறோம்…

யார் புண்படுவார் யார் திருப்தி அடைவார் என்று மனதைக்கேட்டால் சொல்லிவிடும்.



பக்தி யாரையும் புண்படுத்தாது. அதற்காக ஒலிப்பெருக்கி வைத்து காலங்காலையில் ஐந்து மணிக்கு கூவினால் எதிர்வீட்டில் பரிட்சைக்குப் படித்துவிட்டு மூன்று மணிக்கு தூங்கப்போனவன் புண்படுவான். அதே உங்கள் அறையில் மட்டும் விளக்கேற்றி வழிபட்டால் உங்களுக்கும் திருப்தி அடுத்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.

ஒரு பாடகர் ஒரு நிகழ்ச்சியில் அருமையாக பாடுகிறார். தேனினும் இனிய குரல். பாடிமுடித்து பசியோடு வீடு திரும்புகிறார். நிகழ்ச்சிக்கு வர இயலாதவர் ஏ நீ ரொம்ப நல்லா பாடினியாமே என்ன பாடினாய் எங்கே பாடேன் ப்ளீஸ் ப்ளீஸ் என்று போட்டுத்தள்ளினால் என்றால் பாடகர் மனம் புகழையும் மீறி புண்படும். பசிக்கு சாப்பிடக்கூட விடாமல் நொச்சி எடுத்தால்..?

உங்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உங்களை திருப்தி படுத்தும் செயல்கள் செய்தால் அடுத்தவர்களை அது எல்லோரையும் திருப்திப் படுத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. யாருக்கு எதில் திருப்தி என எண்ணிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை...

இந்தப்பாடல் ...கேளுங்களேன் ...
https://youtu.be/sac2kEhQoNg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக