கேள்வி :..ஒரே நேரத்தில் ஒருவர் அறிவியலையும் மதத்தையும் எவ்வாறு நம்ப முடியும்?
என் பதில் :....
இப்போது லேட்டஸ்டாக குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம் பல கல்யாண விருந்து மற்றும் பார்ட்டிகளில் வழங்கப்படுகிறது. முதலில் ஒரு கண்ணாடி பௌலில் ஐஸ்கிரீம் வைத்து (நல்ல கூலாக தான்) உடனடியாக மேலேயே சுடச்சுட குலோப் ஜாமுன் ஜீராவுடன் ஊற்றி தருவார்கள்.
முதன் முதலில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது.. சாப்பிட்டு ருசி கண்ட பிறகு முக்கியமான நண்பர்கள் வழங்கும் விருந்துகளின் மெனுவில் இந்த ஐட்டத்தை சேர்த்து கொள்ள பரிந்துரை செய்யும் அளவுக்கு இந்த இனிப்புக்கு ரசிகன் ஆகி விட்டேன்..
கொஞ்சமும் சேராத வெப்பமும், குளிர்ச்சியும் இனிப்பு என்ற புள்ளியில் ஒன்றிணைவது போல
ஒரே நேரத்தில் அறிவியலும், மதமும் வாழ்க்கை என்ற புள்ளியில் ஒன்றிணைய முடியும் தேவை திறந்த மனது மட்டும் தான்.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
தமிழ் வாழ்க
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக