கேள்வி :உங்கள் வாழ்க்கையின் ஒரு மோசமான கட்டத்தில் இருந்து நீங்கள் எப்படி அந்த பக்கத்தைத் திருப்புவீர்கள்?
என் பதில் :..
சுமார் ஒரு 8 வருடம் முன்பு என் வாழ்க்கையின் சோதனை காலகட்டங்களில் நான் சிக்கிக் கொண்டிருந்தேன். கடன் வாங்கியவர்களுக்கு வட்டி கொடுக்க வேண்டும், வாகன தவணை கட்ட வேண்டும், இதுவரை எந்த பிரச்னை வந்தாலும் எனக்கு உதவும் என் பெற்றோரால் எனக்கு உதவ முடியாத சூழ்நிலை,
இரவுகளில் தூக்கத்திற்கு பதில் கண்ணீரும் கவலையும் வந்து ஒட்டிக்கொண்டது. என் செய்வது என்று தெரியவில்லை. எனக்கு உதவாத எல்லோரையும் மனதில் குறை கூறி கொண்டிருந்தேன் கடவுள் உட்பட. எதுவும் உதவவில்லை. மேலும் கவலை தான் அதிகரித்தது.
வழக்கம்போல் ஒரு இரவு தூங்குவதற்கு எவ்வளவு சிரமப்பட்டும் தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று எழுத தொடங்கினேன். அதில் சில நல்ல யோசனைகளும் பல மோசமான யோசனைகளும் இருந்தன. இது மாதிரி ஒரு வாரம் தினமும் எழுதியதில் என்னால் செயல்படுத்தக்கூடிய ஒரு 5 யோசனைகளை எடுத்து அதை செயல்படுத்த தொடங்கினேன்.
எனக்கு தெரிந்ததை நிதியியல் துறை சார்ந்து கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் என்னிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருந்தனர்.கட்டுரைகள் ..சிறு சிறு டிப்ஸ் தெரிந்தவர்களுக்கும் ,என் வாடிக்கையாளர்களுக்கும் ..நண்பர்களுக்கும் .சொந்தங்களுக்கும் தகவல்களாக சொல்லிக்கொண்டு இருந்தேன் ..நல்ல முன்னேற்றம் ..
.
மற்றவர்களுக்கு கற்று தர வேண்டுமெனில் நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதினால் நானும் மேலும் நிறைய துறை சார்ந்து கற்றுக்கொண்டேன் அது என் வளர்ச்சிக்கும் உதவியது.
அப்பொழுது சில வாழ்க்கையின் படிப்பினைகளை உணர்ந்தேன்
ஒவ்வொரு பிரச்னையும் அதற்க்கான தீர்வை தன்னுள் ரகிசியமாக மறைத்துவைத்துக்கொண்டு வந்துள்ளது. நாம் பிரச்னையை பார்க்கிறோம் அது கொண்டு வரும் தீர்வை விட்டு விடுகிறோம்.
ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் பொழுது அதன் தீர்வில் இருந்தும் கூட தப்பித்து விடுகிறோம்.
பிரச்சனைகள் மாறுவேடத்தில் உள்ள ஆசீர்வாதங்கள்.
பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்வதினால் ஒருபோதும் பிரச்னையை தீர்க்க முடியாது. அது கொண்டு வரும் ரகசிய வாய்ப்பை பார்க்க கற்றுக்கொள்வதினால் மட்டுமே அதை தீர்க்க முடியும்.
தளபதி விஜய் சொன்னமாதிரி, "வாய்ப்புகள்ல இருக்க கஷ்டத்த பாக்கறவங்க தோத்தராங்க, ஆனா அந்த கஷ்டத்துலயும் இருக்க வாய்ப்ப பாக்கறவங்க ஜெயிச்சர்ராங்க"
உங்க வாழ்க்கைல வர பிரச்னைய ரெண்டு வகைல நீங்க கையாளலாம்
அந்த பிரச்னைய உங்கள கட்டுப்படுத்த விடலாம்.
இல்லனா நீங்க அந்த பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.
இதுல எத தேர்வு செய்யறதுன்னு நம்ம தான் முடிவு பண்ணனும். நீங்க ஒரு பிரச்னையை பாத்து எழுந்து நீன்னு சண்ட கட்டலாம்னு முடிவு பண்ணிட்டா அதுக்கான சக்தியும், வழியையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
நன்றி ...தினம் தினம் கற்றுக்கொள்வோம் ...

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக