வெள்ளி, 8 மே, 2020

இன்றைய நமது ஃபேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் கொங்குநாடு அதிலும் குறிப்பாக உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து வழக்கறிஞர் திருமதி சத்தியவாணி பாலாஜி யின் உரை இடம்பெற்றது.

இப்பகுதியில் இருக்கும் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி பெருவாரியாக அதிகம் பேசப்படாத சூழல் இருக்கின்றது. வரலாற்று சிறப்புகளை அதிகம் பேசுவோர் மதுரை திருநெல்வேலி யோடு நிறுத்திக்கொள்வது பொதுவான ஒரு விஷயமாக நான் காண்கிறேன்.

 கொங்குநாட்டு பகுதி கடலூர் சென்னை செஞ்சி விழுப்புரம் சோழமண்டலக் கடற்கரை பகுதிகள் என்பன போன்ற பகுதிகள் எல்லாம் ஆய்வாளர்கள் கவனத்தை பெற வேண்டும் அதற்கு இது தகுந்த கால கட்டம்.

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு மையம் தொடர்ச்சியாக உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல வரலாற்று சின்னங்களை அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தி அதனை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் குழுவினரை பிரதிநிதித்து இன்றைய உரையை வழங்கிய திருமதி சத்தியவாணி பாலாஜி அவர்கள் ஏராளமான வரலாற்று சின்னங்கள் பற்றிய தகவல்களை இன்று வழங்கினார். கொங்குநாட்டு ஆய்வில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இப்பகுதியில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வரலாற்று சின்னங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய உரையை வழங்கிய திருமதி சத்தியவாணி பாலாஜி அவர்களுக்கும் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.💐☀️🌼

Dr .சுபாஷினி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக