மேடை பேச்சு ....
அலுவுலகம் என்றால் பேசி தான் ஆகவேண்டும் ..பேச்சு தானாக வந்துவிடும் .
பொதுவெளியில் ...விழாக்கள் .சமுதாய கூட்டங்கள் ..மனது கொஞ்சம் ஜெர்க் ஆகிவிடுகிறது ..என்ன மாயமோ ..மந்திரமோ தெரியவில்லை ...
எழுதுவது என்றால் பக்கம் பக்கமாக எழுதி விடலாம் ...
இன்று நண்பர்கள் அழைத்து போல் வீடியோகால் ...பேசுவது முதல் முறை ..
எனக்கே தெரியாம எழுபது நிமிஷம் பேசிருக்கேன். அதுக்கு மொதல்ல ஒரு மன்னிப்பு. பேசும் ஆர்வத்தில நேரம் போனது தெரியல 😷
மொதல்ல முருகேஷ் என்கிட்ட சொன்னப்போ ஒரு ஐஞ்சு பத்து நிமிஷம் இருக்கும்ன்னு நினைச்சு, அதுக்கே முடியாதுன்னு சொன்னேம். மனசாட்சியே இல்லாம முப்பது நிமிஷம்ன்னு சொன்னார். எனக்கு ஒரு பயம் பொதுவெளியில பேசுவதற்கு. டீம் மீட்டிங்ன்னு நினைச்சிகோங்க தலைவரேன்னு சொன்னார்.
நானும் அப்டிதான் ஒரு பிரசண்டேஷன்லாம் பிரிபேர் பண்ணி உக்காந்தா, உள்ளுக்குள்ள இருக்கிற படபடப்புல எப்டி அத பார்த்து பேசுறதுன்னு தெரியல. ஒரேயொரு நல்ல விஷயம், என்னால எளிதில் மறக்க முடியாத டாபிக்.
ரொம்ப தயக்கத்தோடதான் ஆரம்பிச்சேன். அப்றம் என்ன சுத்தி இருக்க நண்பர்கள் உறவினர்களுக்குதான் நன்றி சொல்லனும்.
நான் நல்லா எழுதுவேன்னு தெரியறதுக்கு முன்னாடியே, நீ நல்லா பேசுற அதையே எழுதிப்பாருன்னு சொன்ன நண்பர்கள் அவங்க. எப்போதும் அவங்களுக்கு கதை சொல்லியே பழக்கப்பட்டவன். ஆனா எப்போ கல்லூரி முடிஞ்சதோ அப்போவே பேச்ச கொறைச்சிச்டேன்.அதுவும் கோவையில் தம்பி பிரபாகரன் அவங்க மேலாண்மை துறைக்கு ஒருமுறையும் ....பள்ளிகளில் ..நான்கு முறையும் பேசி பழக்கம் ..
ஆனாலும் அந்த பழைய தைரியத்தில பேசவே ஆரம்பிச்சேன். அங்கங்க பதட்டம் இருந்தாலும் ஓரளவுக்கு இழுத்துட்டேன் (நல்லாவே 😷)
நன்றி ..நமக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக