கேள்வி : எந்த மாநிலம் கொரோனாவை சிறப்பாக கையாள்வதாக நினைக்கிறீர்கள்?
என் பதில் :..
ஒரிசா
ஒரிசாவின் முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், கேரளாவில் போலவே தனது மாநிலத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த உண்மையாகப் போராடும் இன்றைய ஹீரோ.
இவர் தொடர்ந்து 20 வருடங்களாக ஒரிசாவின் முதல்வர்.
அவரது அப்பா திருவாளர். பிஜு பட்நாயக் ஒரு மூத்த அரசியல்வாதி.
பிஜு பட்நாயக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தனது மனத்துக்குப் பிடித்ததை செய்த தனித்தன்மை படைத்தவர். இந்திராகாந்தியோடு கோபித்துக்கொண்டு தனி கட்சி ஆரம்பித்தார். பல கூட்டணிகளை அமைத்தார். ஆட்சியை பிடித்தார்.
சமீபத்தில் அவரை நமது பிரதமர்கூட வெகுவாக பாரட்டிப் பேசினார். இவர் ஒருமுறை தலைமறைவாக இருந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவை டெல்லியில் இருந்து விமானத்தைத் தனியாளாக ஓட்டி கொல்கத்தாவில் ரகசியமாக கொண்டு போய் விட்டதாக செய்திகள் உள்ளன.
இவர் 1997 ஆம் ஆண்டு காலமானார்.
அப்போது நவீன், உலகப்புகழ் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டு பல்வேறு நாடுகளுக்கு பயணம், வேலை என்று ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். நல்ல கவிஞர். அவருக்கு ஒரு சகோதிரி இருந்தார். அவரும் கவிதாயினி தான்.
ஒரிசா என்பது நவீனுக்கு 'ஒரு நடை வந்து பார்த்துட்டு போப்பா' என்று அப்பா கூப்பிட்டால் வந்து செல்லும் இடம். அட, ஒரிய மொழி கூட சரியாக பேசத்தெரியாது. அப்பாவின் மரணத்துக்காக ஊர் திரும்பியவர் நவீன்.
அடுத்த முதல்வர் யார் என்று உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்கள் ஊர் கூவாகத்தில் ஒன்று கூடி தங்களது அடுத்த முதல்வர், பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் தான் என்று சொல்லி தீக்குளிக்கத் தயாரானார்கள்.
அவர்களும் தங்கள் தலைவனின் பெண் குழந்தையை மதிக்கவில்லை பாருங்கள். கவிதாயினி என்பதற்காகவாவது கூப்பிட்டிருக்கலாம்.
இப்படியாகத்தான் சூழ்நிலை காரணமாக நவீன் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம்.
வாரிசு அரசியலில் மாட்டி நம்மைப்போல ஒரிசாவும் சிக்கி சீரழியும் என்று உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தால். எல்லாம் தலைகீழாய் போய் விட்டது. நவீன் நமது எண்ணத்தில் மண்ணள்ளி போட்டுவிட்டார்.
அரசியலில் குதித்த பின்பு நவீனுக்கு சிந்தனை மக்களுக்கு என்ன செய்வது என்பதில் மட்டுமே இருந்தது. அரசியல் சுத்தமாக தெரியாதல்லவா?
இவர் ஆட்சிக்கு வருவதற்கு முந்திய வருடம் தான் (1999) இயற்கையின் கோரப்பிடியில் ஒடிசா சின்னா பின்னம் ஆனது. பேயாய் சீரிய புயல் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியது.
பல லட்சம் மக்கள் வீடற்ற அகதிகள் ஆகினர். நாட்டின் எந்த மாநிலமும் சந்தித்திடாத கொடூரம். (அன்பே சிவம் படத்தில் புயலில் கமல் சிக்குவது ஒரிசா மாநிலத்தில்தான்)
வருடம் 2000. முதல்வராக பொறுப்பேற்கிறார் நவீன்.
இனி ஒரு புயல் வரட்டும், 'செவுலை திருப்பி விடுகிறேன்' என சபதம் ஏற்கிறார்.
ஒன்றல்ல, இரண்டல்ல... 2014, 2017, 2018, கடைசியாக 2019ல் பானி புயல் என பண்டிகை விருந்தாளி போல தொடர்ந்து ஒரிசாவைத் தாக்குகிறது புயல். ஒவ்வொன்றிலும் உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா?
10க்கும் கீழே.
உலக நாடுகள் அசந்து போயின. பேரிடர் மேலாண்மையில் மிகச் சிறந்த தென்கிழக்கு ஆசிய மாநில விருதை நவீனுக்கு தந்து பாராட்டியது ஐ.நா.சபை. இந்த விருதை வென்ற ஒரே இந்திய மாநிலம் ஒடிசா மட்டுமே.
கஜாப் புயலில் இந்த விருது நமது துணை முதல்வருக்கு கிடைக்க வேண்டியது. நவீனால்தான் கெட்டுப்போனது என்று கழக செயல் புயல்கள் சொல்லுகிறார்கள்.
மக்களின் அபிமான நாயகன் ஆகிப்போனார் நவீன். 2000 முதல் 2024 வரை தங்களை 24 வருடங்கள் தொடர்ந்து ஆளும் அதிகாரத்தை தந்திருக்கிறார்கள் ஒடிசா வாசிகள்.
தொடர்ந்து ஐந்துமுறை முதல்வர். இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் செய்யாத பல தேர்தல் சாதனைகள்.
'இந்த 2020 வருசம் புயல் எந்த மாசம் வருதாம்?' என்று கேட்டு அதன் ஜோலியை முடிக்க நவீன் காத்திருக்க, அதற்கு முன்பாக மாநில எல்லையில் நம்பியார் மாதிரி 'நவீன் சாப்... மே ஐ கம் இன்' என கைகளை தேய்த்துக் கொண்டு நின்றது கொரோனா.
நவீன் மெதுவாக தனது செயலாளரை அழைத்தார். முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே. பாண்டியன், தமிழர்.
தமிழர்களில் செயல்பாடானவர்கள் தமிழகத்துக்கு வெளியேதான் இருக்கிறார்கள். நமது ராசி அப்படி.
மந்திரிசபையை கூட்டினார்கள். செயல்பட ஆரம்பித்தார்கள். எப்படி?
மார்ச் இறுதியில் இந்தியா 'விழித்து'க்கொண்டு லாக் டவுன் போட்டது அல்லவா?
ஆனால் மார்ச் முதல் வாரத்திலேயே நவீனுக்கு செய்தி எப்படியோ 'லீக்அவுட்' ஆகிவிட்டது.
ஒரிசா உடனே அலர்ட் ஆகிவிட்டது. ஆங்காங்கே வார்டு அளவுக்கு லாக் டவுன் போடப்படுகிறது.
உடனடியாக ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்த மூன்று வாரத்தில் மட்டும் 72,000 கால்கள். போன் கால்கள் அடிப்படையில் எங்கே யாருக்கு என்ன பிரச்னை என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
இங்கே தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லைனுக்கு இரண்டு லட்சம் கால்கள் வந்ததெப்படி என்று இன்னும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது
மார்ச் 3 ஆம் தேதி கோவிட்டுக்கு என்று தனியாக ஒரு வெப்சைட் தயார். வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஒடிசா வரும் அனைவரும் இதில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவேண்டும்.
நோய் அறிகுறி இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய பரிசுத் தொகையை அரசு வழங்கும். ஆயிரக்கணக்கான மக்கள் அரசு சொன்னதை செய்தார்கள். முதல் கட்ட வெற்றி.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த இதர ஊழியர்கள் அனைவருக்கும் மாத சம்பளத்தை முன்பணமாக மாதத் துவக்கத்திலேயே அவர்களது வங்கிக்கணக்கில் போட்டு விடுகிறார் நவீன்.
பொருளாதார மன அழுத்தம் இன்றி அவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்கள்.
நமக்கோ, 2021 ஏப்ரலில் தேர்தல் சமயத்தில்தான் பணமுடிப்பு கிடைக்கும் என்பதால் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது.
உள்ளூரில் இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும்போதே 'வெளி மாநிலங்களில் தவிக்கும் ஒரிசா தொழிலார்களுக்கு என்ன செய்யலாம்?' என யோசிக்கிறார்.
உடனடியாக இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு 'ஒடிசாவை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவம் அனைத்தையும் சிறப்பாக செய்யுங்கள். மொத்த செலவையும் எனது அரசாங்கம் தந்து விடும்' என உறுதி அளிக்கிறார்.
நவீனின் அடுத்த முக்கிய குறி தனது மாநிலத்தின் சிறுநகரங்களும், கிராமங்களும்.
புயல் வந்த ஆண்டுகளில் குக்கிராமம் வரை எப்படி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கிற அனுபவம் பக்காவாக இருந்ததால் நேர்த்தியாக செயல்பட தொடங்குகிறது அரசு எந்திரம்.
84,000 பேர் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அனைத்து பஞ்சாயத்து வார்டுகளிலும் போதுமான மருத்துவ வசதிகள் ரெடி.
கீழே உள்ள பட்டியல் நாமெல்லாம் பார்த்து பரவசமடைய..
இந்திய வரலாற்றில் மார்ச் 22 முதல் 40% க்கும் மேற்பட்ட இடங்களை லாக் டவுன் அமல்படுத்திய முதல் மாநிலம் ஒரிசா
ஏப்ரல் 14ல் லாக் டவுன் 2.0 ஐ ஆரம்பித்த முதல் மாநிலம் ஒரிசா
தொழில்முறை மருத்துவமனைகளால் நடத்தப்படும் கோவிட் மருத்துவமனைகளைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா.
தனது அனைத்து மாவட்டங்களிலும் COVID மருத்துவமனைகளை உருவாக்கிய முதல் மாநிலம் ஒரிசா
மாநிலத்திற்கு வெளியில் இருந்து திரும்பியவர்களின் ஆன்லைன் பதிவைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா
அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வீட்டிலிருந்து வெளியே வர ஆன்லைன் பாஸ் வழங்கும் முதல் மாநிலம் ஒரிசா
மாநிலத்தில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்னாலேயே, ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் கடல் துறைமுகங்களில் திறமையான, தேவையான கட்டுப்பாடுகள் கொண்டுவந்த மாநிலம் ஒரிசா.
வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை சமூக கண்காணிப்பில் கொண்டு வந்த முதல் மாநிலம் ஒரிசா
பயண வரலாற்றை அறிவிக்க ரூ.15,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்கி, சுய அறிவிப்பை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிய ஒரே மாநிலம் ஒரிசா.
வெளியில் இருந்து வரும் மக்களுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் மற்றும் வாட்ஸ்அப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா
டெலிமெடிசின் ஹெல்ப்லைனைத் தொடங்கிய ஒரே மாநிலம் ஒரிசா
தெருவில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு உணவளிக்க சிறப்பு நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் ஒரிசா. உலகில் வேறெங்கும் இந்த முயற்சி இல்லை என்கிறார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பித்த ஒரே மாநிலம் ஒரிசா
சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் ஒரிசா.
சில சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு செய்திகளை ஒடுக்கி, கொரோனோவின் மத்தியில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய மாநிலம் ஒரிசா
அனைத்து பஞ்சாயத்துகளிலும் வறியவர்களுக்கு சமைத்த உணவை வழங்கிய முதல் மாநிலம் ஒரிசா
மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் அடுத்த மாநிலத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஹெல்ப்லைனைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா
அவர்களுக்கு போதுமான உணவு, நீர், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முதல் மாநிலம் ஒரிசா
மூன்று மாதங்களுக்கு தேவையான ரேஷன் உணவுகள் ஒரே நாளில் முன்கூட்டியே வழங்கிய ஒரே மாநிலம் ஒரிசா
மகளிர் சுய உதவிக்குழுக்களை நேரடியாக தொற்றுநோய் நிர்வாகத்தில் ஈடுபடுத்தும் முதல் மாநிலம் ஒரிசா
COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடும் ஒரே மாநிலம் ஒரிசா
விளைவு...
இன்றைக்கு, இந்த மே தினத்தில், 01.05.2020 நிலவரப்படி ஒரிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 128.
இறந்தவர் 1. இதில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
கேரளாவிற்கு மேலாக, உலகத்தரத்தில் கொரோனாவை வீழ்த்திய மாநிலம் ஒரிசா.
காரணம் என்ன?
தலைவன் சிறந்த கல்வியாளர். படித்தவர். பக்கத்தில் உள்ளவர் படித்துப் பார்த்து, மொழி பெயர்த்துச் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சேவை மனப்பான்மை கொண்டவர். ஒப்பற்ற நிர்வாகி.
ஒரு நாள் இவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றுகிறதா?
ஒரு நாளும் வர மாட்டார்.......
நன்றி ....வாசித்தமைக்கு ....
எனது நண்பர் கல்லூரி பேராசிரியர் ...ஒருமுறை ..பல்கலைக்கழக விழாவிற்கு சென்று வந்து என்னிடம் இந்த நிகழ்வை பகிர்ந்தார் மகிழ்ச்சியாக இருந்தது ..இப்படியும் ஒரு முதல்வர் இருக்கிறார் என்று ....
உத்கல் பல்கலை கழகத்தில் உலகளாவிய அறிஞர் கூட்ட மொன்றுக்கு சென்றிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன்.மதிப்பிற்குரிய நவீன் பட்நாய்க் அவர்கள் துவக்கவுரை. நம்ம ஊர் கூட்ட அரங்கு( auditorum) போல் அல்லாமல் பெரிய வகுப்பறை போன்ற இடத்தில் கூட்டம். மிக எளிமையாக வந்து என் எதிர் நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் ஒரே ஒரு காவல் அதிகாரி மட்டும் வந்தார்.மிக சிறப்பாக பேசினார். வேற்று நாட்டவர்களும் அவரரது பேச்சால் கவரபட்டனர். அவரளவு படிக்காத நம்ம ஊர் அரசியல் வாதிகள் சாலையில் சென்றாலே போக்குவரத்து நிறுத்தும் வெட்டி பந்தா என் மனதில் நிழலாடியது. என் மனதில் இடம் பிடித்த இந்தியாவின் ஒப்பற்ற அரசியல்வாதி. அன்றிலிருந்து அவர் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் கவனித்து வருகிறேன்.அவர் ஒருநாள் பிரதமராக வரவேண்டும். இந்த ஆட்டு மந்தை போல் ஓட்டளிக்கும் கூட்டம் அவரை போன்ற சிந்தனை திறமும் நாட்டுபற்றும் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்குமா என்பது கேள்விக்குறியே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக