கேள்வி :தங்கள் துறையில் வெற்றியின் உச்சத்தை தொட்ட மனிதர்களிடம் நீங்கள் ஏதேனும் ஒற்றுமையை கண்டுள்ளீர்களா? அப்படியெனில் அது என்ன?
என் பதில் :.
பில் கேட்ஸ்
சச்சின்
வாரன் பபட்
மொசார்ட்
ரபேல் நடால்
கமல்ஹாசன்
எலோன் மஸ்க்
இவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை உள்ளது. அந்த குணம் தான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. அது என்னவென்று சில துப்புகள் கொடுக்கின்றேன். கண்டு பிடிக்க முடியாவிட்டால் கவலை வேண்டாம் பதிலின் இறுதியில் அதை சொல்லி விடுகிறேன்.
பில் கேட்ஸ்
சிறு வயதிலிருந்தே புத்தகப்புழு.
13-வது வயதில் முதல் முறை கணினி முன் அறிமுகப்படுத்தப் படுகிறார்.
நாள் ஒன்றிற்கு 8–10 மணி நேரம் கோடிங் செய்வதில் ஈடுபடுத்திக் கொள்கிறார்.
தனது 20-வது வயதில் மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை தன் நண்பன் பால் ஆலன் உடன் நிறுவுகிறார்.
அதற்கு பின் நடந்தது சரித்திரம்.
சச்சின்
சிறு வயதிலிருந்தே படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
11-வது வயதில் கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்.
நாள் ஒன்றிற்கு 12 மணி நேர பயிற்சி.
16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்கிறார்.
பின்பு என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வாரன் பபட்
சிறு வயதிலேயே பணம் ஈட்டுவதின் மீது ஆர்வம்.
6 வயதில் முதல் சம்பாத்தியம்.
11-வது வயதில் முதல் முதலீடு.
தனது சராசரி நாளில் 80 % நேரத்தை வாசிப்பதில் செலவளிக்கிறார்.
அதன் பிறகு செய்த அனைத்து முதலீடும் இவரை முதலீட்டின் கடவுள் என்று அழைக்குமளவிற்கு திறமையான முதலீடு.
மொசார்ட்
3-வது வயதில் இசைப்பயணம் தொடுங்குகிறது.
5-வது வயதில் முதல் சுயமாக இசையை இயற்ற தொடங்குகிறார்.
6 - 20-வது வயது வரை தன் தந்தையால் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்.
20-வது வயதில் தனது தலை சிறந்த படைப்பை படைக்கிறார்.
அதன் பிறகு படைத்த ஒவ்வொரு படைப்பும் இன்றளவும் தலை சிறந்த இசையாக கருதப்பட்டு வருகிறது.
ரபேல் நடால்
3-வது வயதில் டென்னிஸ் மட்டையை கையில் எடுக்கிறார்.
16-வது வயதில் டென்னிஸ் வீரர்கள் மிக பெரும் விடயமாக கருதும் விம்பிள்டன் இறுதி சுற்று வரை செல்கிறார்.
19 வயதில் இளமையான ஃபிரென்சு ஓப்பன் பட்டம் பெரும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
தனது மாமா(பயிற்சியாளரும் கூட) டோனியால் மிகவும் தீவிரமான பயிற்சியில் அதுவும் தன்னை விட வயது அதிகமுள்ள வீரர்களுடன் பயிற்சி செய்கிறார்.
அதன் பின் தன் திறமையால் "கிங் ஆப் க்லே" என்று ரசிர்களால் அன்பாக அழைக்கும் அளவிற்கு அபார திறமையை வெளிப்படுத்தி டென்னிஸ் ஜாம்பவான்கள் எனும் இடத்தை பிடித்தார்.
கமல்ஹாசன்
5-வது வயதில் முதல் திரைப்படம். அதுவும் விருது பெற்ற திரைப்படம்.
பின்னர் தன்னை முழுவதுமாக சினிமாவிற்கு அர்பணித்துக்கொள்கிரார்.
நடிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என தான் செய்யாத வேலைகளே கிடையாது என்று சொல்லலாம்.
உள்ளூர் விருதுகள், உள்நாட்டு விருதுகள், வெளிநாட்டு விருதுகள் என வாங்கிய விருதுகள் ஏராளம்.
இன்று உலக நாயகனாக நம்மை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.
எலோன் மஸ்க்
சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசகர்.
தங்கள் ஊரில் இருக்கும் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வேறு புத்தகங்களை கேட்டவர்.
12-வது வயதில் ஒரு கணினி விளையாட்டை ப்ரோக்ராம் செய்து முதல் விற்பனையை செய்கிறார்.
பின்னர் தன் சகோதரருடன் சேர்ந்து இரவு பகலாக உழைத்து முதல் கம்பெனியை நிறுவுகிறார்.
அதன் பின் அவர் நிறுவிய அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இன்று தன் ரசிர்களால் நிஜ வாழ்க்கை ஐயன் மேன் என்று செல்லமாக கூப்பிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
அனேகமாக அந்த ஒற்றுமை என்ன என்பதை பெரும்பாலனோர் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கண்டுபிடிக்கவில்லையா கவலை வேண்டாம். இதோ
வெற்றியின் உச்சத்தை அடைந்த நபர்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையான குணம் என்னவென்றால் அவர்கள் அனைவரும்
சிறு வயதிலே துவங்கி விட்டார்கள்.
பிடித்த துறையை தேர்ந்தெடுத்தார்கள்.
கடின உழைப்பை போட்டார்கள்.
பின்னர் நம் லட்சிய மனிதர்களாக மாறினார்கள்.
நன்றி ...வாசித்தமைக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக