என் எழுத்து .....
என் எழுத்து என்பது 25 வயதிற்குள் இருப்பவர்களைச் சென்று சேர வேண்டும் என்றே அதிகம் விரும்புவேன். 40 ப்ளஸ் எல்லாம் இருக்கிற எதார்த்த அவஸ்தைகளிலிருந்து விடுதலை பெறவே ஃபேஸ்புக், வாட்ஸாப்ப்,டெலிகிராம் ,இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள் என்பதனை ஆழமாக நம்புகிறேன்.
இது தான் உண்மையும் கூட. நட்புக்கோரிக்கையில் கதவைத் தட்டும் 25 வயதிற்குக் கீழே உள்ளவர்களைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுண்டு. எழுதாமல் இருந்தாலும் அவர்கள் நிச்சயம் படிக்க வாய்ப்புண்டு. இளைய தலைமுறையினர் சிறு கேள்வி பதில் கேட்பார்கள் ...அதும் நான் பதிவிடும் கேள்வி பதில்கள் அதிகம் விரும்பி படிக்கிறேன் என்பார்கள் ..மகிழ்ச்சி ..
கடந்த சில தினங்களாகக் கல்லூரி மாணவர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி ..தொடரும் நட்புகள் .சொந்தங்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக