வெள்ளி, 8 மே, 2020

கேள்வி : வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள் யாவை?


என் பதில் :..

பணம் > குணம்.
அழகு > குணம்.
பணம் + குணம் = அழகு+ குணம்.
பணம் =அழகு.

ஸோ அக்கார்டிங் டூ த லா, இந்த உலகம் முதலில் உங்ககிட்ட எவ்வளவு பைசா இருக்குன்னு பார்க்கும். அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்க்கும். மத்த எதுவும் தேவையில்லை.

உங்க முதுகுல குத்துறவங்க எப்பவுமே நீங்க ரொம்ப நம்பிக்கை வைச்சவங்களா தான் இருக்கும். அதனால தான் அதன் வலி ரொம்ப அதிகமா இருக்கும்.

இன்னைக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்றவங்க தான். நாளைக்கு நீங்க யாருனே தெரியாத மாதிரி போவாங்க.

வாழ்க்கையில நமக்கு எல்லாமே கிடைச்சிட்டா ரொம்ப போர் அடிச்சிடும். நல்ல வேலை, வீடு, மனைவி, குழந்தை, பணம், நிம்மதி. ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்குல. பிரச்சனைகள் இல்லைன்னா வாழ்க்கையில சுவாரசியமே இல்லாம போய்டும்.

நாம எப்பவும் கைக்கு கிடைக்காத பொருள் மேல தான் ரொம்ப ஆசை படுவோம். நம்ப கையில வைரமே இருந்தாலும் அதை கண்டுக்க மாட்டோம் ஈஸியா கிடைச்சிட்டா.

நாம வாழ எப்பவுமே ஒரு காரணம் தேடிக்கிட்டே இருக்கோம். நான் என் கணவனுக்காகஅல்லது மனைவிக்காக , குழந்தைகளுக்காக வாழறேன், நான் பணம் சம்பாதிக்க வாழறேன். காரணம் இல்லன்னா வாழ்க்கை வெருமையாயிடுது. யாரும் தனக்காக வாழறதா சொல்றதே இல்லை.

மத்தவங்க தப்பை சுட்டிக்காட்டும் போது அதை அவங்க புரிஞ்சிக்கணும். நம்மோட தப்பை யாராவது சுட்டிக்காட்டிட்டா நமக்கு கோவம் வந்துடும்.

நம்ப அருமை புரிஞ்சி நம்ம தான் வேணும்னு சொல்றவங்களை மதிக்க மாட்டோம். நம்பளை மதிக்காம போறவங்ககிட்ட தான் நம்ம யாருன்னு புரிய வைக்க முயற்சி பண்ணுவோம்.

உங்களை பத்தி எதுவுமே தெரியாத வரைக்கும் தான் மத்தவங்களுக்கு உங்கள் மேல ஆர்வம் இருக்கும்.

வாழ்க்கையில எல்லாமே லேட்டா தான் புரியும். அதுக்குள்ள எல்லாம் கைமீறி போய்டும்.

நன்றி ..வாழ்க்கையை  புரிஞ்சுவங்களுக்கு ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக