மருத்துவக்காப்பீட்டின் அவசியம் ...
நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு (health Insurance) எடுக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட காப்பீடு எடுப்பது நல்லது? எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்வது நல்லது? மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு நாள் மருத்துவம் செய்ய முடியுமா?
மருத்துவகாப்பீடு அவசியம்.
குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர்களின் வயதுக்கு ஏற்றபடி சரியான திட்டங்களை தேர்வு செய்யலாம்.
உதாரணமாக ஒருவர் தனக்கும் தனது மனைவிக்கும் மற்றும் இரு குழந்தைகள், பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கும் சேர்த்து floater policy எடுப்பது நல்லது. இதில் பிரீமியம் குறைவு.
ஒரே காப்பீட்டுதொகைக்கு அனைவருக்கும் சேர்த்து பாலிசி தரப்படும்.
ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனிதனியாக 5 லட்சம் வரை தனிநபர் பாலிசி எடுக்கலாம் . குடும்பமாக செய்து கொண்டால் அதற்கான தள்ளுபடி உண்டு. மற்றபடி இதில் பிரிமியம் கொஞ்சம் அதிகம்.
உங்களுடைய வயது மற்றும் செலவழிக்கக் கூடிய தொகையைப் பொறுத்து நீங்களே உங்களுக்கான பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
வரிச் சலுகைகள் உண்டு. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனது மற்ற பதில்களில் ஏற்கனவே கூறியுள்ளபடி IRDA அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திலும் காப்புறுதி செய்து கொள்ளலாம்.
ஒருநாள் மருத்துவம் என்பதைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட மருத்துவத்திற்கு மட்டும் அனுமதி உண்டு.
பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து , மருத்துவம் செய்து கொண்டால் மட்டுமே அதற்கான இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.
அதைவிடக் குறைந்த நேரத்தில் பெறப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் காப்பீட்டு பத்திரம் அனுமதிக்கும். உதாரணமாக, கண் அறுவை சிகிச்சை, பல் சம்பந்தமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியான கருச்சிதைவு (உயிரை காப்பாற்ற செய்யக்கூடியது)எதிர்பாராத விபத்துக்கள் ,கருச்சிதைவு போன்றவற்றிற்கு ஒரு நாளை விடக் குறைவான நேரமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டியிருக்கும். அவற்றிற்குக் காப்பீடு உண்டு.
Day care treatment இதில் அடங்கும்.
இதன் விவரங்களை நீங்கள் காப்பீட்டுப் படிவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
சுந்தரம் பைனான்ஸ் லிமிட்
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ்
மொபைல் -9944066681...
முக்கிய குறிப்பு.:
முதன்முறையாக் காப்பீடு செய்வதற்கு முன்பு ,ஏற்கனவே ஏதாவது உடல்நலக் கோளாறு இருப்பின் ,முதல் இரண்டு வருடங்களுக்கும்,சில கோளாறுகளுக்கு முதல் நான்கு வருடங்களுக்கும் செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னரே காப்பீட்டு நிறுவனம் உங்கள் செலவை ஏற்றுக்கொள்ளும். இவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் காப்பீடு செய்துகொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக