திங்கள், 4 மே, 2020

கேள்வி :ஒரு குழந்தையிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?


என் பதில் :..

கள்ளம் கபடம் இல்லாத மனம். வெள்ளந்தி குணம் என்று கூறுவார்கள். நாம் வளர வளர இதன் நிறம் மாறிவிடும். ஆனால் குழந்தையிடம் இதை காணலாம்.

எதையுமே மனதில் வைத்து கொள்ளாதது. சண்டை, கோபம் அனைத்தையும் அடுத்த நொடியே மறந்துவிடுவது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது. அந்த பொக்கை பல் தெரிய சிரிக்கும் சிரிப்பு எதையோ உணர்த்துகிறது. வாழ்க்கை ரொம்ப சின்னது பல் இருக்கும் போதே சிரிச்சிடுங்க.

யார் என்னனு பார்க்காமல் பழகுவது. இந்த ஜாதி, இந்த மதம் இதெல்லாம் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது.

தனக்குன்னு எடுத்து வைத்துக்கொள்ளும் செல்பிஷ் குணம் குழந்தைகளுக்கு கிடையாது. கையில எது வைத்திருந்தாலும் மற்றவர்க்கும் பாகம் பிரித்து கொடுத்துவிடும்.

தவழுவது, பின்பு எதையாவது பிடித்து நடக்க முயற்சிப்பது, பின்பு யார் உதவியும் இல்லாமல் நடப்பது -- விடாமுயற்சி.

அழுது கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவது. எதாவது பிரச்சனை வந்தா படுத்து தூங்கிடு.

துய்மையான அன்பு காட்டுவது. நம்மை பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிப்பிடித்து கொள்வது.

அதனால் தான் வளர்ந்த பிறகு, அச்சோ! நம்ப குழந்தையாவே இருந்திருந்தா நல்லாருக்கும்லன்னு தோணுது.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக