இது இப்போ அதிக குழந்தைகளும் சொல்லும் ஒரு மாதிரி உரையாடல் ..
நான் ஏழரைக்கு எழுந்திருப்பேன் . ..எட்டு மணிக்கு ஸ்கூல் போவேன்... அம்மா தான் வேன்லே ஏற்றி விடுவா ... தாத்தா கூட்டிட்டு வருவார் வேன் நிக்கிற இடத்திலேந்து.... அதுக்கப்புறம் .. பாட்டு, டேன்ஸ், டிராயிங், கீபோர்ட் க்ளாஸ்க்கு பாட்டி இல்லைன்னா தாத்தா கொண்டு போய் விடுவாங்க ... திரும்ப வீட்டுக்கு போய்ட்டு ஹோம்வர்க் செய்வேன்... டிவி சீரியல் பார்ப்பேன் பாட்டிகூட .... அப்புறம் தூங்கிடுவேன் .... (நான் பேசிய ஐந்து குழந்தைகளில் நால்வர் இதைத் தான் சொல்கின்றனர் .. சிறு சிறு மாறுதல்கள் மட்டும் )
"அம்மா எப்போ வருவாங்க.?."
"தெரியாது.... நான் தூங்கிடுவேன்... அவங்க வரதுக்குள்ளே"
"காலையிலே எப்போ போவாங்க அம்மா?"
"தெரியாது.... சாப்பாடு சாப்பிட்டுட்டு தான் போவாங்க.."
" அப்பா .. எப்போ போவாரு ?"
" அவரு நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாலேயே போய்டுவாரு"
" சாயந்திரம் எப்போ வருவாரு?"
"தெரிலே ... நான் தூங்கிடுவேன் "
" சண்டே அன்னைக்கு என்ன பண்ணுவீங்க "
"சொந்தக்காரங்க வீட்டுக்கு போவோம் .. இல்லேண்ணா ஏதாவது பங்க்ஷன் போவோம்... "
"தெரியாது.... நான் தூங்கிடுவேன்... அவங்க வரதுக்குள்ளே"
"காலையிலே எப்போ போவாங்க அம்மா?"
"தெரியாது.... சாப்பாடு சாப்பிட்டுட்டு தான் போவாங்க.."
" அப்பா .. எப்போ போவாரு ?"
" அவரு நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாலேயே போய்டுவாரு"
" சாயந்திரம் எப்போ வருவாரு?"
"தெரிலே ... நான் தூங்கிடுவேன் "
" சண்டே அன்னைக்கு என்ன பண்ணுவீங்க "
"சொந்தக்காரங்க வீட்டுக்கு போவோம் .. இல்லேண்ணா ஏதாவது பங்க்ஷன் போவோம்... "
இதிலே குழந்தைக்கு நல்லது .. கெட்டது சொல்லிக் கொடுக்க பெற்றோர்களுக்கு நேரமெங்கே .........???
பெற்றோர் வளர்ப்பதில்லை .. குழந்தைகளே வளர்றாங்க அப்படின்னு சொல்லிடுவோம் இனிமே ...!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக