வியாழன், 7 மே, 2020

கேள்வி : ஒருவர் என்னை ஏற்று கொள்ளாத போது அதை சகஜமாக கடந்து செல்வது எப்படி?

என் பதில் ...


மேலாண்மை  படிச்சவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். வேலை தேடி அலைந்த அனுபவம். அவங்களாம் நிறைய முறை இந்த ரிஜக்டட்ங்குற வார்த்தையை கேட்டுருப்பாங்க.


ஒருத்தன் பத்து கம்பெனி ஏறி இறங்கியிருப்பான். பத்து கம்பெனியிலயும் ரிஜக்ட் ஆகியிருப்பான். இருந்தாலும் பதினொராவது கம்பெனிக்கு அப்ளை பண்ணுவான். அவனை ஒரு கம்பெனில ரிஜெக்ட் பண்ணுனதால அவன் தன்னுடைய நம்பிக்கை, விடாமுயற்சி பண்ணுறத விட்டுடமாட்டான்.



அவன் தினமும் தன்னை ரிஜக்ட் பண்ணுன கம்பெனி வாசலில் போய் நின்னுக்கிட்டு, என்னை ஏன் ரிஜக்ட் பண்ணுனீங்க. நான் நல்லா வேலை செய்வேன் என்னை ஏத்துக்கோங்கன்னு கேட்க மாட்டான். ஒன்னு இல்லைன்னா இன்னொன்றுன்னு கடந்து வந்துடுவான்.


இப்படி சுலபமா முடிவெடுக்க தெரியறவங்களுக்கு காதல்லையோ/ வாழ்க்கையிலயோ யாராவது வேண்டாம்னு சொல்லிட்டா அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவங்ககிட்ட போய் ஏத்துக்க சொல்லி கெஞ்சறோம்.


ஏப்படி ஒரு கம்பெனில ரிஜக்ட் ஆனா அதை மறந்துட்டு அடுத்த கம்பெனிக்கு போறோமோ அதே மாதிரி தான் ஒருத்தவங்க நம்மளை ஏத்துக்கவில்லைன்னா அதை கடந்து வந்துடணும். நின்ன இடத்துலயே நின்னா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குபோகவே முடியாது.

நன்றி ,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக