கேள்வி : பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன், புத்தகம் படித்துவிட்டீர்களா? இந்தப் புத்தகத்திலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?
என் பதில் :..இந்த விடுமுறை நாட்கள் (Work From Home)
இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ...படித்து பகிர்வதில்
எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி ...
தோல்விகள் தந்த ஒரு வரம் - வாசிப்பு
பொருளாதார சுதந்திரத்தின் பைபிள் என்றழைக்கப்படும் இப்புத்தகம் உண்மையிலேயே பணக்காரனாக சில நல்ல யுக்திகளை நமக்கு கற்று தரும். பெரும்பாலானோர்களுக்கு இந்த புத்தகம் புதியதாக எதுவும் சொல்லாதது போல் தோன்றினாலும் பணத்தை பற்றிய நாம் மறந்து போன சில அடிப்படை விதிகளை நினைவூட்டும் விதத்தில் அமையும்.
அர்கட் எனும் பணக்காரன் ராஜாவின் வேண்டுகோளுக்கிணங்கி தனது பணம் பண்ணும் ஏழு விதிகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதியிருப்பார் ஜார்ஜ்.
உங்களது பணப்பையை கணமாக்குங்கள்
நீங்கள் சம்பாதிப்பதில் 10-ல் ஒரு பகுதியை சேமித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பணப்பையில் போடும் ஒவ்வொரு பத்து நாணயத்திலும் ஒன்பது நாணயத்தை மட்டும் செலவு செய்யவும்.
இந்த பத்தில் ஒரு பகுதியை சேமிப்பதை எதற்காவும் நிறுத்தக்கூடாது.
செலவுகளை கட்டுப்படுத்துதல்
தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.
தேவைக்கு மட்டும் செலவு செய்யுங்கள். ஆசைகளை ஒதுக்கி விடுங்கள். ஆசைகளை நிறைவேற்ற ஏற்ற புது புது ஆசைகள் முளைத்துக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு பைசா செலவழிப்பதற்கும் அதற்கேற்ற நூறு மடங்கு பலன் இருக்க வேண்டும்.
உங்களுடைய செலவுகளுக்கு பட்ஜெட் போட வேண்டும். இது தேவை மற்றும் ஆசையை பிரித்துக்காட்ட உதவும்.
தங்கத்தை பல மடங்கு ஆக்குதல்
நாம் சேமித்து வைத்த பணத்தை அப்படியே தூங்க விட கூடாது. அதை வேலை செய்ய விட வேண்டும்.
நம்முடைய ஒவ்வொரு நாணயத்தையும் வேலை செய்ய விட வேண்டும். அது தன்னை போன்று மற்றொரு நாணயத்தை உருவாக்கும்.
அதாவது நாம் சேமித்த பணத்தை நல்ல முதலீடுகளில் இட்டு அதை வேலை செய்ய விட வேண்டும்.
செல்வத்தை நஷ்டமடையாமல் பாதுகாக்க வேண்டும்
முதலீடு செய்வதில் மிக முக்கியமான விதி - மூலதனத்திற்கு பாதுகாப்பு.
எங்கு மூலதனம் பாதுகாப்பாக திரும்பி வருமோ அதில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.
இதைப்பற்றி முதலீட்டை பாதுகாப்பாக கையாள்பவர்களின் ஆலோசனையை பெறலாம். அவர்களுடைய அறிவுரை பாதுகாப்பற்ற முதலீடுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
லாபகரமாக முதலீடு செய்தல்
ஒவ்வொரு மனிதனும் தனக்காக சொந்தமான வீடு வைத்திருக்க வேண்டும். வாடகைக்கு கொடுக்கும் பணத்தை வட்டி கட்ட பயன்படுத்தலாம்.
இதன் மூலம் சில நாட்களில் மொத்த கடனையும் அடைத்து விடலாம்.
அதுபோக வீடும் உங்களுக்கு சொந்தமாகி விடும்.
எதிர்கால வருமானத்திற்காக காப்பீடு செய்தல்
செல்வத்தின் விதிகளை அறிந்தவன், தன் எதிர்காலத்தை பற்றியும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பல வருடங்கள் பாதுகாப்புடன் இருக்கும் பல முதலீடுகளை அவன் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஒருவனது தொழில் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அவன் தன் முதுமையின் பாதுகாப்பிற்கும், தன் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் கண்டிப்பாக தனியாக முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும்.
சம்பாதிக்கும் திறனை அதிகரித்தல்
அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற வலுவான விருப்பம் இருக்க வேண்டும்.
நாம் எவ்வளவு அறிவை வளர்த்துக்கொள்கிறோமோ அவ்வளவு நிறைய தங்கத்தை சம்பாதிப்போம்.
பணத்தின் விதியை உணர்ந்தவனுக்கு தெரியும் பணம் என்பது ஒரு வற்றாத அமுத சுரபி என்று.
கூலி வேலை செய்பவரிடம் பணம் முதலீடு செய்வதை பற்றி அறிவுரை கேட்க கூடாது. அதைப்பற்றி தெரிந்த வல்லுனரிடம் தான் கேட்க வேண்டும்.
நன்றி ...நேரம் கிடைக்கும் பொழுது இந்த புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக