செவ்வாய், 30 ஜூன், 2020


நம் கம்பள சமுதாயத்தில் பெண் மருத்துவர்கள் ..

National Doctors Day July 01.....2020....
கொரோன காலத்தில் கடவுளாக வந்து மக்களை  காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ..
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
கரு முதல்
கல்லறைவரை
சேவை செய்தவரின் களைப்பை போக்க
ஏன்
இப்படி களைத்து போனாய்.....?
உலக சக்கரமே
என்ன பார்க்கிறாய் ...?
உனக்கு இணையாய் பயணம் செய்ய
இங்கேயும் ஆட்கள் உண்டு ..
ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
,தேனி மாவட்டம் தர்மலிங்கபுரம்  Dr .அபிநயா முருகன்  ,என் அக்கா மகள் Dr .சொர்ணமால்யா முருகராஜ் , அவர்களுக்கும்  என் இனிய  மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681..

National Doctors Day July 01.....2020....
கொரோன காலத்தில் கடவுளாக வந்து மக்களை  காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ..
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
கரு முதல்
கல்லறைவரை
சேவை செய்தவரின் களைப்பை போக்க
ஏன்
இப்படி களைத்து போனாய்.....?
உலக சக்கரமே
என்ன பார்க்கிறாய் ...?
உனக்கு இணையாய் பயணம் செய்ய
இங்கேயும் ஆட்கள் உண்டு ..
ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
உடுமலைப்பேட்டை ...எங்கள் குடும்ப டாக்டர்..கோமதி கஜலட்சுமி ,மற்றும் என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ்(RV) ,ஜெயபிரகாஷ்(JP ) அவர்களுக்கும் ,தேனி மாவட்டம் தர்மலிங்கபுரம்  Dr .அபிநயா முருகன் ,என் அக்கா மகள் Dr .சொர்ணமால்யா முருகராஜ் , அவர்களுக்கும்  என் இனிய  மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681..


இன்று திருப்பூரில் விருது பெற்ற தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள் 

தொடர் ரத்தக் கொடையாளர் விருதாளர்🥰
சகோதரர் உடுமலை டிஜிட்டல்போட்டோ ராஜேந்திரன் (எம்.சி.சி)🥰
தம்பிடிஜிட்டல் போட்டோ ராஜேந்திரன் அவர்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் . சகோதரருக்கு விருதினை அறிவித்த தேசம் காப்போம் அறக்கட்டளைக்கும்,அவேர்ணஸ் அப்பா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
.உலகளாவிய ரீதியில் எத்தனை வகையான தானங்கள் காணப்பட்டாலும் உயிர்காக்கும் தானமாக இரத்ததானத்தினை குறிப்பிட்டால் மிகையாகாது. பிறருக்கு கொடுப்பதிலே அதியுயர் உயிர் காக்கும் சொத்தாக இரத்ததானம் விளங்குகிறது."அவ்வகையில் இவ்வாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் வாழ்வளித்தோருக்கு நன்றி தெரிவிப்போம்"
வாழ்த்துக்கள் ....👍✍️✍️📚📚🥰🥰🥰

திங்கள், 29 ஜூன், 2020

அன்புடன் 7598691583(29.06.2020)அனாதை
🇮🇳அவேர்ணஸ்அப்பா
அழகியதிருப்பூர்🇮🇳நிறுவனத்தலைவர் தேசம்காப்போம் அறக்கட்டளை
பதிவு எண் 3115/2011,திருப்பூர்...

அணைவருக்கும் வணக்கம்...

மாதம்தோறும்

தேசம்காப்போம் அறக்கட்டளையின் சார்பாக அவேர்ணஸ் அம்மா ஜானகி அவர்களின் நினைவு

தொடர் இரத்ததானக்
கொடையாளர் விருதுகளை ஐந்து கொடையாளர்களுக்கு வழங்கிவருகிறோம்

அதன் படியாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த தொடர் இரத்ததானக்
கொடையாளர்கள்

(01) திரு.சக்ஷம் ஜீ பி தமிழ்ச்செல்வம் அவர்களுக்கும்...

(02) திரு.நாகராஜ்  அவர்கள்
வெள்ளகோவில்

(03) திரு.இராஜேந்திரன் அவர்கள் உடுமலைப்பேட்டை...

(04) திரு.அரவிந்த்
காவலர்
சிலம்பகுரு அவர்கள் திருச்சி அவர்களுக்கும்...

(திருச்சியைச்சேர்ந்த இவரின் கௌரவகங்கள் போக்குவரத்துகள் சகஜ நிலைக்கு வந்தபிறகு வழங்கப்படும்)

(05) திரு.சந்தோஷ்குமார் அவர்கள் சர்வேஷ்வரா சமையல் சங்கமம் அவர்கள் திருப்பூர்...

திருப்பூர் அங்கேரிபாளையம் பிரதானசாலையில்
கொங்கு பள்ளிக்கு அருகில் உள்ள

சர்வேஷ்வரா சமையல் சங்கமம் உணவகத்தில்

கொரோணா தடுப்பு பாதுகாப்புடன்

இந்த ஐந்து தொடர் இரத்ததானக்
கொடையாளர்களுக்கும்
ஆடம்பரமின்றி

விருதுகள்,

கெளரவ பொன்னாடைகள்,

பாராட்டு நற்சான்றிதழ்கள்,

உதிரதானம் வழங்கி இன்னொரு உயிர்காத்தமைக்கு நன்றிப்பதக்கங்கள்

நகரின் வி ஐ பி

அவர்களால்

வழங்கப்படுகின்றன...

ஆகவே விருதாளர்கள் தங்களுடன் ஒருவரைமட்டும் அழைத்துவரலாம்

முகக்கவசம் அணிந்துதான் வரவேண்டும்

கையுறைகளையும் அணிந்து வரலாம்

விருதாளர்களுக்கு மூன்று அடி இடைவெளியில் கௌரவகங்கள் வழங்கப்படும்

நாளை காலை உணவு சர்வேஷ்வரா சமையல் சங்கமத்தினரால் வழங்கப்படவள்ளது

இது ஒரு மணிநேர நிகழ்வு மட்டுமே

சரியாக 11,மணிக்கு நிகழ்வு நிறைவு...

தேசம்காப்போம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் அணைத்தும்

மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாகவே அமையும் நன்றி

வெல்க இந்தியா...
கேள்வி : பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?

என் பதில் :.

அதற்கு சீன கெர்மன் என்பவர் அளித்த பதிலை, அது வெகு ஜன பாராட்டை பெற்றதால், அதனை இங்கே மொழிபெயர்த்துள்ளேன்.

இந்த பூமியின் மிக புத்திசாலி நபராக அறியப்பட்ட கிம் உங் யாங் தன ஐந்து வயதிற்குள் ஐந்து மொழிகளைப் பேசவும் கால்குலஸ் போடும் திறனும் கொண்டவராக இருந்தார்.

எட்டு வயதில் நாசாவில் கணிதம் போடும் ஆற்றல் கொண்டிருந்தார். பதினைந்து வயதிற்குள்ளாகவே பி. எச் டி முடித்து விட்டார். இவை அனைத்தும் அவர் சொந்த முடிவு கிடையாது. அவருடைய ஐ க்யு 2௦௦ககு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டவுடன், அவர் வாழ்க்கைக்காக ஏற்பாடு செய்ப்பட்ட ஒரு அதிவேக சிறப்பு திட்டத்தின்படி, அவர் மனது நிரம்பிவழியும் அளவிற்கு கல்வி போதனைகள் ஏற்றப்பட்டது. எதுவுமே அவர் முடிவுக்கு விடப்படவில்லை. கல்வியை முடித்து அவர் நாசாவில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.

உலகத்திலேயே அதீத புத்திசாலியான மனிதன், ஹார்வர்ட் பல்கலை மாணவர்களே வியக்கும் அளவிற்கு திறன் படைத்தவர், இவை அனைத்தும் வேண்டாம் என ஒதுக்கி தள்ளி விலகி சென்று விட்டார். ஏன்?

அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னை ஒரு இயந்திரம் போல உணரத் தொடங்கியதால், அவருக்கு இயல்பானவைகலே தேவைப்பட்டது. தற்போது ஒரு சாதரணமான பல்கலைகழகத்தில் பேராசிரியாராக வேலை செய்கிறார். நாசாவில் வேலை என்பது கவுரவமானது என்று பலர் நினைக்கும்போது, அவருக்கு அப்படி இல்லை. இன்றும் கொரிய பத்திரிக்கைகள், அவரை ஒரு தோற்றுப்போன புத்திசாலி' என்று கிண்டல் செய்கிறது.

அவருக்கு உள்ள அறிய திறன் கொண்டு அவர் உலகையே மாற்றக்கூடிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அவர் அப்படி இல்லை.

அவ்வாறு உலகை மாற்றுவார் என்று யார் முடிவு செய்தது? நிச்சயமாக அவர் இல்லை.

நம்மில் பெரும்பான்மையோர் தொடர்புபடுத்தும் நபர் நிச்சயமாக கிம் இல்லை. ஒருவர் புத்திசாலியாக, கற்பனைத்திறனுடன் இருந்தால், அவர் இந்த உலகின் அரசனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள், சில சாதாரன பணிகளிலேயே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

மகிழ்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சமன் செய்வதாகும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்முடைய எந்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்காது.

1.கோட்டமங்கலம்
2. சோமவாரப்பட்டி

3.பல்லடம் ஜல்லிபட்டி

4.ஜே .கிருஷ்ணாபுரம் (முக்கூடல் )

5.வெனசபட்டி
6.ஜல்லிபட்டி ஜக்கம்மாள் கோவில்
7.கரட்டுபெருமாள்  ஜல்லிபட்டி
8.உடுக்கம்பாளையம் நடுகல் ..
9.உப்பிலியனூர் நடுகல்  (தொண்டாமுத்தூர் ஜல்லிபட்டி )
10.கொங்கலக்குறிச்சி கோவில் (பழனிச்சாமி )
11. சிஞ்சுவடி நடுகல் (வீரக்கம்பம் )
12.பன்னக்கினறு
13.அந்தியூர்
14.சீலக்காம்பட்டி(கெடிமேடு வழி வலதுபுறம் )
15.நல்லாம்பள்ளி
16. ஆவலப்பம்பட்டி
17.நெகமம்
18.ஜிலோப்பநாயக்கன் பாளையம் (நெகமம்)
19.ரமேகவுண்டன்புதூர்
20.JN பாளையம் (தீபலாப்பட்டி )


ஞாயிறு, 28 ஜூன், 2020

DTCP அப்ரூவல் என்றால் என்ன?

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP)அனுமதி தேவைப்படும். 

இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது. 

சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.

 எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியேமிக மிக முக்கியமானது.

 அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. 

இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால்சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமைஅலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக்கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றுஅவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும். 

அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மாவட்டடீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.

 டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதிகொடுப்பார்கள். 

சில சமயங்களில் அவர்களே ஒருபிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.

அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்துஇருப்பார்கள்.

 அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லதுஉரிமையாளர் பின்பற்ற வேண்டும். 

பின்பற்றுவதோடுமட்டு மல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது. 

அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் (Plot)களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியைதனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாயத்துஅனுமதி தேவைப்படும்.

 அந்த 24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல்மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும்அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமேகிடையாது.

 அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே, பஞ்சாயத்துஅனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியைவாங்குவது நல்ல விசயம் அல்ல.

விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி  /தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைகுடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.

 சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றதிட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan),நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதுதவிர,குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தைஎந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும்தெரிவித்து விட வேண்டும்.

டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தைஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றியதகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும்கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால், உடனடியாகZone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள்அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங் களாகக்கருதப்படுகின்றன.

 இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம்,ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.

சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம்கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும்.

 இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்குஅனுமதி மறுக்கப்படும்.

சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681


DTCP அப்ரூவல் என்றால் என்ன?

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP)அனுமதி தேவைப்படும். 

இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது. 

சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.

 எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியேமிக மிக முக்கியமானது.

 அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. 

இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால்சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமைஅலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக்கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றுஅவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும். 

அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மாவட்டடீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.

 டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதிகொடுப்பார்கள். 

சில சமயங்களில் அவர்களே ஒருபிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.

அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்துஇருப்பார்கள்.

 அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லதுஉரிமையாளர் பின்பற்ற வேண்டும். 

பின்பற்றுவதோடுமட்டு மல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது. 

அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் (Plot)களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியைதனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாயத்துஅனுமதி தேவைப்படும்.

 அந்த 24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல்மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும்அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமேகிடையாது.

 அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே, பஞ்சாயத்துஅனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியைவாங்குவது நல்ல விசயம் அல்ல.

விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி  /தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைகுடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.

 சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றதிட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan),நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதுதவிர,குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தைஎந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும்தெரிவித்து விட வேண்டும்.

டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தைஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றியதகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும்கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால், உடனடியாகZone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள்அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங் களாகக்கருதப்படுகின்றன.

 இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம்,ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.

சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம்கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும்.

 இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்குஅனுமதி மறுக்கப்படும்.

சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

சனி, 27 ஜூன், 2020

கேள்வி : குழந்தைகள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வது எவ்வாறு இருக்கும்?

என் பதில் :..

மிகவும் வெறுமையா இருக்கும். மனசு ஏங்கித்தவிக்கும். எல்லாமே இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல தோனும். தனக்காக யாருமே இல்லாத மாதிரி இருக்கும். இன்னும் ஆயிரம் எண்ணங்கள் வந்து அலைமோதும்.

எத்தனை குழந்தை என்று யாராவது கேட்றுவாங்களோனு ? பயந்து பயந்தே வீட்டுக்குள்ள முடங்க வைக்கும் .

எது எப்படி இருந்தாலும் இது நம்ம கைல இல்லையே குழந்தை இல்லை அப்டிங்கிறது வலி தரக்கூடிய ஒன்றுதான். இதையே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் ஓரளவு பக்குவப்பட்ட நம்ம மனசே இவ்வளவு காயப்படுதுனா பிறந்தவுடனேயே பெற்றோர்களை இழந்த குழந்தைகள் எவ்வளவு பாவம்?

அந்த மாதிரி குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கலாமே அதில் விருப்பம் இல்லனா இப்ப எவ்வளவோ புதிய புதிய வழிமுறைகள் வந்துருச்சு அதுல எதையாவது ஒன்ன முயற்சி பண்ணி பார்க்கலாம் அந்த முயற்சியிலும் தோல்வி அடைந்தா நம்மள சுத்தி எத்தனையோ குழந்தை இருக்கு அது நம்ம கூடவே இருக்க மாதிரி நினைச்சிக்கிட்டே வாழலாம். கணவன் மனைவிக்கு குழந்தையாகவும் மனைவி கணவனுக்கு குழந்தையாகவும் சந்தோஷமா வாழலாம்.

இது எல்லாத்தையும் மீறி அப்பப்பநினைவு வநந்துட்டு போய்ட்டுதான் இருக்கும் அதையும் தாண்டி வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு சந்தோஷம்

நம்ம கிட்ட இருக்க தனித்திறமைகளை வளர்த்துக்கலாம் நம்மளோட தரத்தை உயர்த்திக்கலாம் புதுசு புதுசா யோசிக்கலாம் அதற்கு செயல் வடிவம் கொடுக்கலாம் எத்தனையோ ஆதரவற்றவங்க குழந்தையிலிருந்து வயசானவங்க வரை இருக்காங்க அவங்கள நம்ம குழந்தையா நினைத்து ஒரு வேளை சாப்பாடு கொடுக்கலாம்.

இப்படி எதையாவது ஒன்றை செஞ்சு உயிரோட்டத்தோடு வாழலாம் அடுத்தங்களுடைய கேலி கிண்டல் விசாரணை எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு எங்களுக்கு எந்த குறையும் இல்லை நாங்க நல்லாதான் இருக்கோம்னு வாழ்ந்து காட்டலாம்

ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன்.

ஆனா ஒண்ணு இல்லாத ஒன்ன நெனச்சு ஏங்கி ஏங்கி தவிக்கிறத விட நாலுபேருக்கு உந்துசக்தியா மாறுற அளவுக்கு நம்முடைய இலட்சியத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.


நமக்கான எதுவும் நம்மை விட்டு போகாது. நமக்கு என்று விதிக்கப்பட்டிருந்தால் குழந்தையும் சரியான நேரத்தில் பிறக்கும் நம்பிக்கை மட்டும் இழக்காமல் வாழ்ந்தால் போதும்.

வெள்ளி, 26 ஜூன், 2020

கேள்வி :..குடும்ப உறவுகளில் அப்பா-மகள் உறவு இன்றளவும் சிறந்த ஒன்றாக பேசப்படுவதற்கான காரணங்களைப் பட்டியலிட முடியுமா?


என் பதில் :..

சொல் பேச்சு கேட்பது தான் முக்கியம். மகன் சிறு வயதிலேயே தனியாக பல இடங்களுக்கும் செல்கிறான். ஆனால் மகளுக்கு அப்பாக்கள் தான் முன்னின்று அனைத்தையும் செய்ய வேண்டும். அப்படியே, அப்பா நமக்காக எவ்வளவு செய்கிறார் என்ற பாசம் பொங்குகின்றது. மகள் சொன்ன பேச்சைக் கேட்பாள். மகன் கேட்பது குறைவு.

திருமணம் ஆகி கணவனுடன் செல்லப் போகிறாள், இப்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாசத்தையும் கொடுத்து விடலாம் என்ற நிலை கூட இருக்கலாம். தாயின் பாசத்தை விட, தாரத்தின் பாசத்தை விட, மகள் அப்பாவின் மேல் வைக்கும் பாசம் அதிகம். வீட்டில் யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பது மகளே. ஆனாலும் அதிலும் ஒரு அன்பு உண்டு. எப்படிப் பார்த்தாலும் அப்பா மகள் உறவு மிகச் சிறந்தது.

நன்றி ...
வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....

ஆம்!

வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.

போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!

அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்!

அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.

அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்!

அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.

அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்!

அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.

அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது.

சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது.

அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.

அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!

முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது.

இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது.

மேலும் பலவலுவான காரணங்கள் : 

அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு)

அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..

வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்!

வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!

அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.

ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...

அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும்.

அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..






பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....

சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.

அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும்.


அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.......

தளி ஜல்லிபட்டி ..தினைக்குளம் ...தூக்குமர தோட்டம் ..தென்னைமர தோப்பு  (தேவராஜ் )

வியாழன், 25 ஜூன், 2020

பதிவு செய்த நாள்( Dinamalar)
25ஜூன்
2020

உடுமலை:உடுமலை அரசு மருத்துவனை செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து, 'சீல்' வைக்கப்பட்டது.உடுமலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து வந்த முதியவர், கரட்டுமடத்தை சேர்ந்த பெண், திருச்சியை சேர்ந்த ரயில்வே துறை அதிகாரி, எகிப்திலிருந்து வந்த அந்தியூர் ஊராட்சியை சேர்ந்த பெண் என, நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து அடைக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 வயதான அவர், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது சகோதரரை பார்க்க, கடந்த, 15ம் தேதி சென்றுள்ளார். அங்கிருந்து, 20ம் தேதி, மதுரையிலிருந்து பழநிக்கு தனியார் பஸ்சிலும், பழநியிலிருந்து உடுமலைக்கு அரசு பஸ்சிலும் வந்துள்ளார்.21ம் தேதி, சளி, காய்ச்சல் ஏற்பட்டதால், 23ம் தேதி, கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து, செவிலியர் வீடு உள்ள, தளி ரோடு, காந்திசவுக், பஷீர் அகமது லே- அவுட் பகுதியில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது கணவர், இரு மகன்கள் மற்றும் சுற்றிலும் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.தொற்று பாதிப்பு காரணமாக, பஷீர் அகமது லே-அவுட் பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து, குடியிருப்பு 'சீல்' வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பணியில் இருந்ததால், அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருவோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசியம் இல்லாமல், வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளி பராமரித்தல் என, தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும், என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.📚📚✍️✍️
இது நம்ம வீட்டு கல்யாணம் ....ஜூலை 5...2018
A .ஆதித்ய வெங்கடேஷ் .B .E ..Weds ...T .தனநந்தினி ..B .E
ஸ்ரீ முருகன் திருமண மண்டபம் ...கோவை ரோடு ..பொள்ளாச்சி ..
கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..
A .ஆதித்ய வெங்கடேஷ்ன் தந்தை ..S அசோகன் (அபுதாபி )அவர்களை பற்றி சிறு குறிப்பு
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர் ..எனக்கு தெரிந்து 10 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...தற்பொழுதும் தொடர்கிறது ..முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு நமது அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ... வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...

கேள்வி :..சொந்தங்கள் யாரும் தேவையில்லை என்று கூறிவிட்டு தனியாக நமது குடும்பம் மட்டும் போதும் என்று வாழ்வது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா?

 பதில் :...


வத்திப்பெட்டி போல உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில்,

கணவனும்,நிறைமாத கர்ப்பிணி மனைவியும்

பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் சூட்ட ,

இருவரும் இணைந்து இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்த...

பத்தாம் மாதத்தில் பிறந்தது பிஞ்சுக்குழந்தை ...

பன்னிரண்டு திங்கள் கழித்து மகப்பேறு விடுப்பு முடிந்த தாய் ,

தன் பணிக்கு திரும்பவேண்டிய கட்டாயம்.

மறுபடியும் தொடங்கியது தேடுதல் வேட்டை..

இம்முறை,சிறந்த குழந்தைகள் காப்பகம் தேடும் வேட்டை !!

சின்னஞ்சிறு குழந்தை சிறையில்(காப்பகம்) அடைக்கப்பட்டது ...

நாட்கள் ஓடின ,மாதங்கள் ஓடின,வருடங்கள் ஓடின,

குழந்தை பள்ளிக்கு சென்றது ,பெற்றோர்கள் பணிக்கு சென்றனர்..

நாளொன்றுக்கு மூவரும் ஒன்றாய் இருந்தது மாலைபொழுதில் மட்டுமே

மாலைப்பொழுதையும் கைப்பேசி கடன் வாங்கியதால் ,

பெற்றோர்கள் இருந்தும் தனிமரம் ஆனது அக்குழந்தை

நாட்கள் ஓடின ,மாதங்கள் ஓடின,வருடங்கள் ஓடின,

குழந்தை பருவத்தை கடந்தது,

பள்ளி படிப்பை முடித்தான் ,கல்லூரி படிப்பை முடித்தான்,கல்யாணமும் நடந்தது,

அயல்நாடு சென்றான் தன் மனைவியுடன் ,

வயதான நிலையில், தள்ளாடும் பெற்றோர்கள் ..

அம்மாவுக்கு மூட்டு வலி ,அப்பாவுக்கு சக்கரை நோய் ..

டாலர்களில் பணம் பறந்து வந்தது பெற்றோர்களின் வங்கி கணக்கில்,

எங்களால் தனியாக இருக்க முடியவில்லை என்றார் அப்பா

கவலைப்படாதீங்கப்பா என்ற மகன் ,

தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தான்,

இம்முறை ,சிறந்த முதியோர் இல்லம் தேடும் வேட்டை !!

நான் இதுவரை சொன்னது,நம் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸ்.

இந்த வைரஸ், கடந்த 20 வருடங்களாக ,நமக்கே தெரியாமல் நம் வாழ்வை சீரழித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸுக்கு கூட தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் ,ஆனால் இந்த வைரஸுக்கு மருந்தே இல்லை.

இந்த கொடிய வைரஸின் பெயர் Nuclear Family .தமிழ்ல சொல்லனும்னா தனி குடும்ப வாழ்வுமுறை.

இன்றைய கல்வி வளர்ச்சியும் ,தொழில்நுட்ப வளர்ச்சியும் ,வேலைவாய்ப்பும் ,மக்களை நகரங்களை நோக்கி நகர்த்தி,உறவுகளை உடைத்து விட்டது.

இன்று உச்ச நடிகர் சொல்லப்போகும் குட்டிக்கதைக்கு காத்திருக்கும் நாம், நம் தாத்தா சொன்ன குட்டி கதைகளை மறந்து விட்டோம்.

இன்று குருஜிகளின் ஆன்மீக சொற்பொழிவை காசு குடுத்தும் காணொளிமூலமாகவும் கேட்கும் நாம் ,நம் பாட்டி சொன்ன சாமிக்கதைகளை மறந்து விட்டோம்.

அக்கறையுடன் அதட்டி திருத்தும் பெரியப்பா, அன்பு காட்டும் அத்தை , செல்லம் குடுக்கும் சித்தப்பா, கேட்டதை வாங்கி தரும் மாமா,சித்தி,அண்ணி போன்ற உறவுகள் உடைந்து, இன்று வாட்சப் குரூப்பில் மட்டுமே பெயருக்கென உள்ளது.

இன்றைய சமுதாயத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க ,தனி குடும்ப வாழ்வு முறையும் காரணம்.

சென்னையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது காதுகேளா சிறுமியை 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்து சிதைத்துள்ளனர்.

அந்த 17 பேரின், வயது 22 முதல் 60 வரை.லிப்ட் ஆபரேட்டர் ,தோட்டக்காரர் என அனைவரும் அந்த குடியிருப்பில் இருந்தவர்களே.

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர்,தன் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததையும் நாம் செய்திகளில் படித்திருப்போம்.

இது போன்ற பல குற்ற செயல்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் ,நம் வாழ்வியல் முறையில் வந்த மாற்றமே.

வீட்டு வாசலில் தாத்தா ,பாட்டி இருந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்ப்பட்டிருக்கும்.

சொந்தக்கார்கள், தொல்லை தருபவர்கள்,நாம் முன்னேறினால் பொறாமை படுபவர்கள் என பல குற்றசாட்டுகள் வைக்கப்படுகிறது.உறவுகளை தவறாக சித்தரிப்பதில், தொலைக்காட்சி தொடர்களின் பங்கும் பெரிது.

என் கேள்வி,இங்கே குறை இல்லாத மனிதன் யார் ?? எல்லாரிடமும் ஏதாவது குறை இருக்கும் தானே ??

நாம் பணிபுரியும் இடத்தில்,அக்கம்பக்க வீடுகளில்,நாம் அன்றாடம் கடந்து வரும் எத்தனையோ பேர் நமக்கு தொல்லைகளும்,பொறாமையுடனும் இருக்க தான் செய்கின்றனர் .

அவர்களிடமிருந்து நாம் சகித்து வாழவில்லையா ??

அவர்களை விடவா, நம் சொந்தங்கள் நமக்கு தொல்லை தரப்போகிறார்கள் ??? கண்டிப்பாக இல்லை

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ....

நாம் கீழே விழும் பொது நம்மை தூக்கி நிறுத்துவது நம் சொந்தங்களே .

ஹும் நண்பர்களும் வருவார்கள் ,ஆனால் அவர்களுக்கேன்று ஓர் எல்லை இருக்கும்.

அக்காள் மகளை மடியில் வைத்து காது குத்துவது ,தாய் மாமனின் உரிமை.

பெற்றோர்களின் பாத பூஜை ,மைத்துனன் பொறி அள்ளி போடுவது,நாற்றனார் அண்ணன் மனைவியாக வர போகும் அண்ணி வாயில் சக்கரை குடுத்து வீட்டுக்கு அழைப்பது போன்ற நம் ஒவ்வொரு சடங்குகளிலும் ஒவ்வொரு சொந்தத்தின் பங்கு உள்ளது.

ஆக ,உறவில்லா இல்லா வாழ்க்கை என்பது

உப்பில்லா உணவு

சிறகில்லா பறவை

ஒளியில்லா சூரியன்

நிலவில்லா வானம்

மையில்லா கண்கள்

சுவரில்லா சித்திரம்

பூவில்லா பூஞ்செடி

கூட்டு குடும்பமும் ,சொந்த பந்தங்களும் தான் உலகம் போற்றும் நம் நாட்டின் கலாச்சாரம்.இது தான் நம் அடையாளம்.

நம் அடையாளம் இல்லாத வாழ்க்கை ,வாழ்க்கையே இல்லை ..

நன்றி

புதன், 24 ஜூன், 2020

 கேள்வி :வாழ்க்கையில் நாம் அதிகம் புறக்கணிக்கும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் எது?

என் பதில் :..

நாம் பெற்றோரின் கருத்துகளை மதிக்காமல் பின்னர் வருத்துவது
ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் அருமை நமக்கு தெரியாது. அதுவே அவர்கள் இந்த மண்ணை விட்டு செல்லும்போது நாம் மனம் வருந்துவோம்.

ஒரு விஷயம்/அல்லது நீங்க ஆசைபட்ட ஒன்று கிடைக்காமல் போகும் பொழுது. அந்த நபரையே பார்க்காமல், பேசாமல் இருப்பது.

நமது உடல் நிலை, குறிப்பாக இந்தியாவில் பெண்கள் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் மற்றும் மருத்துவமனை சென்று பார்க்காமல் புறக்கணிக்கின்றோம். அதுவே நம்மை அறியாமலே பெரிய நோயாக மாற வாய்ப்பு உள்ளது.

ஒரு ஆண்/பெண்ணின் விருப்பத்தை கேட்காமல் திருமணம்/படிக்கும் துறை முடிவு எடுப்பது.

ஒரு மிடில் வர்த்தக குடும்பத்தினர் தொழிலில் லாபம் பார்த்து திடீர் என்று ஒரு உயர்ந்த இடத்துக்கு செல்லும் போது மற்றவர்களை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு உதவியவர்களை மறப்பார்கள்

நன்றி ....


கேள்வி :தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்வது எதிர் காலத்தில் லாபம் தருமா?

என் பதில் :


100% நிச்சயமாக! கண்டிப்பாக! ஆனால் இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!

தற்போது உள்ள பங்குச்சந்தையின் சூழல் மற்றும் சர்வதேச சந்தைகளின் நிலவரம் எல்லோரும் அறிந்திருக்க கூடிய ஒரு விஷயம் என்று நம்புகின்றேன்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் COVID-19 வைரஸ் காரணமாக பொருளாதாரம் அனைத்தும் சீர்குலைந்து பங்குச் சந்தை பெரிய அளவிலான சரிவைக் கண்டுள்ளது.மேலும் சரிய வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தையில் உள்ள இந்த நிலைமை கட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.

ஏன் தெரியுமா?

ஊரடங்கு உத்தரவு காரணமாக நம்மில் எத்தனை பேர் தொழில்களை இழந்திருக்கிறோம், நமது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள தேசிய குறியீட்டின் முக்கிய 50 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இது தற்காலிக சரிவு அல்ல, தற்போது நிலவி வரும் உலக நாடுகளில் முடங்கியுள்ள தொழில்கள் மற்றும் உற்பத்திகள் காரணமாக இது மேலும் வலுவான சரிவை காண உள்ளது.

COVID-19 வைரஸின் இந்தத் தாக்கம் நீடித்தால் இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் பெருமளவு சரிவை சந்திக்க நேரிடும்.

இப்போது பங்குச்சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபே அவர்கள் கூறிய மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மற்றவர்கள் பேராசைப் படும்பொழுது நீங்கள் பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும் பொழுது நீங்கள் பேராசைப் படுங்கள்.[1]

நீண்ட காலத்திற்கு முன்பு யாரோ ஒரு மரத்தை நட்டதால் யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார்.

எங்களுக்கு பிடித்த ஹோல்டிங் காலம் என்றென்றும் இருக்கும்.

நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

விதி எண் 1 ஒருபோதும் பணத்தை இழக்காது. விதி எண் 2 ஒருபோதும் விதி எண் 1 ஐ மறக்க முடியாது.

விலை நீங்கள் செலுத்துவதே. மதிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கும்.

நீங்கள் நன்றாக முதலீடு செய்ய ஒரு மேதை இருக்க வேண்டியதில்லை.

நாங்கள் அத்தகைய முதலீடுகளை நீண்ட கால அடிப்படையில் தேர்வு செய்கிறோம், இயக்க வணிகத்தின் 100% வாங்குவதில் ஈடுபடும் அதே காரணிகளை எடைபோடுகிறோம்.

வாரன் பஃபே அவர்கள் கூறியது போல இப்பொழுது உலகமே பயத்தில் உள்ளது முதலீடு செய்ய நினைக்கும் நாம் கண்டிப்பாக பேராசை பட வேண்டும்.

தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தியாவில் உள்ள நல்ல நிறுவனத்தின் பங்குகளை ஆராய்ந்து. அதன் விலை மலிவாக கிடைக்கின்றது என்றால், நம்மால் ஈடுகட்ட முடிந்த பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பங்குச்சந்தை நன்றாக இறங்கும் நேரத்தில் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் பங்குகளை வாங்கலாம்.

முக்கியமாக  நண்பர்களுக்கு பரிந்துரைப்பது என்னவென்றால்..

நமது கல்லூரி வயதில் முதலீடு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நமக்கு கிடைக்கக் கூடிய சிறிய தொகையை கண்டிப்பாக நீங்கள் SIP முறையில் முதலீடு செய்ய வேண்டும், அது பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த பதில் உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.


நன்றி..

சிவக்குமார் .
நிதி ஆலோசனைக்கு ..9944066681


கேள்வி : புதுமண தம்பதிகள் வாழ்க்கை நிலை உயர (செய்ய வேண்டியவை) எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் பற்றி தயவு செய்து கூற முடியுமா?

என் பதில் :..

புதுமண தம்பதிகள் வாழ்க்கை நிலை உயர -(செய்ய வேண்டியவை-?) எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் பற்றி தயவு செய்து கூறவும்.

ஒன்றை மட்டும் சரியாக செய்வோம் என்று முடிவெடுக்க வேண்டும், அது " எது நடந்தாலும், காமம் காதல், கோப தாபம், நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் வந்தாலும் அதை தங்களுக்குள் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டும், தீர்வு காண வேண்டும்" என்பதுதான். No whatsapp, no messenger, no third party. Only sit together alone and explain and communicate each other.


ஏனென்றால் தம்பதிகளுக்குள் நடக்கும் "miscommunication" தான் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. இதை பயணப்படுத்தி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் மூன்றாம் மனிதர்கள் தலையிட்டு பெரிதாக்கி விடுகிறார்கள்.


Miscommunication தம்பதிகளுக்கிடையே இடைவெளியை உருவாக்கி விடும், இந்த இடைவெளியை மூன்றாம் மனிதர்கள் ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள். இது நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற நிலையை உருவாக்கிவிடும்.


சிலர் நினைக்கலாம் கோப தாபம், நல்லது கெட்டது என்பதற்குள் பிரச்சினைகள் வரலாம், எதற்கு காமம் காதல் பற்றி சொல்லியிருக்கிறான் என்று. 90 சதவீத தாம்பத்ய பிரச்சனைகள் படுக்கையறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.


"Explain your anger, don't react or express to it and open the door to solutions instead of arguments".

—Balayoga

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ..

கேள்வி :.என்னுடன் chat செய்வதை ஒரு தோழி  விரும்பவில்லை என்பதை எவ்வாறு அறியலாம்/ உணரலாம்?

என் பதில் :..

ரொம்ப சிம்பில்…

வெகு நேரம் கழித்து உங்கள் குறுஞ்செய்திக்கு பதில் அளிப்பார்.
சில நேரம் அந்த பதில் கூட வராது.

எவ்வளவு வெட்டியாக இருந்தாலும் "எனக்கு நிறைய வேல இருக்கு .நான் ரொம்ப busy" என்றே நடந்துக்கொள்வால்.

நீங்கள் என்ன தான் "உன் Dp செம…, உன் status mass… " என்று பல அப்பிலிகேஷன் போட்டாலும், பெரிதாக ரியாக்ட் பன்ன மாட்டார்கள் .
நீங்கள் பேச ஆரம்பித்த சில நிமிடத்தில் …. அம்மா கூப்பிடுராங்க, ஆட்டு குட்டி கூப்பிடுராங்க என்று னைசாக நழுவிடுவார்.


***இவை மட்டுமின்றி சில பெண்களுக்கு தனித்துவம் ஆன வெறுக்கும் திறமைகள் உண்டு*** .

மேலும் ஒரு free advice:


ஒரு பெண்ணிடம் பேசும் போது…. வள வள என பேசி மொக்கை போடாதீர்கள்…

வெளிபடையாக பேசும் ஆண்களையே பெண்கள் நம்புவார்கள்.

நன்றி ....
கேள்வி :.ஆண் எந்த எந்த விஷயங்களில் பெண்ணை சார்ந்து வாழ்கிறான்?


என் பதில் :..

ஆயிரம் தான் சமத்துவம் பேசினாலும், ஆணுக்குப் பெண் நிகர் என்றாலும், பெண்ணால் வெளியுலகத்தில் சாதிக்கமுடியாதது ஏதுமில்லை என்று ஆண்களே ஒத்துக்கொண்டாலும், சில பல விஷயங்களில் ஆண் ஒரு நாளும் பெண்ணுக்குச் சமம் இல்லை.

அவன் அப்படிப்பட்ட சில விஷயங்களில் பெண்ணைத் தான் மிகவும் சார்ந்திருக்கிறான்; அவற்றில் அவன் ஆதி கால ஆணைப் போலத்தான் இருப்பான்; செயல் படுவான். அவை:

வீட்டு நிர்வாகம், குடும்ப நிர்வாகம், சமையல் நிர்வாகம். ஒரு பெண் எவ்வளவுதான் வெளியுலகத்தில் போய் ஆணுக்கு நிகராகக் கொடி நாட்ட ஆண் ஆதரவும் ஊக்கமும் அளித்தாலும், வீடு என்று வரும்போது, ஆண் பெருமளவில் பெண்ணின் நிர்வாகத்தைத் தான் சார்ந்து இருக்கிறான்.

இது மாற்ற முடியாமல், ஆணின் மரபணுக்களில் எழுதப் பட்டு விட்ட ஒரு விஷயம் என்பதே என் கருத்து.

உற்றார், உறவுகளைப் பேணல், விருந்தோம்பல் (அதாவது இந்த விருந்தோம்பல் கலாசாரம் இன்னும் உயிரோடு இருக்கும் குடும்பங்களில்)
பிள்ளை வளர்ப்பின் மிக மிகப் பெரும் பங்கு, குறிப்பாகப் பிள்ளைகள் 3 வயதேனும் எட்டும் வரை.

தன் பெண் பருவம் அடையும் சமயத்தில்

தான் நோய்வாய்ப் படும் போது.

தன்னை ஒரு ஒழுக்க நியதிகளுக்குள் கட்டுப் படுத்தி வைத்துத் தான் தறிகெட்டு வாழ்க்கையில் பிறழ்ந்து போய்விடாமல் இருக்கத் தன் துணைவி தன் மீது செலுத்தும் அன்பின் ஆதிக்கத்தைச் சார்ந்திருத்தல் (கவனிக்க: ஒரு பெண் அதிகார தோரணை, சமத்துவப் போராட்ட மனப்பான்மையைக் கைக்கொண்டல்ல).

வயதாக ஆக, மேலும் மேலும் மனைவியின் கவனிப்பு, அக்கறை இவற்றைச் சார்ந்திருப்பது; அதை பெறுவதற்காகவே தன் ஆணாதிக்கத் திமிர், ஆதிகால அடக்குமுறைகள், அலட்சியம் இவற்றைக் கைவிட்டு/ பெருமளவில் குறைத்துக்கொண்டு மனைவியின் அதிகாரத்துக்கும், இழுப்புக்கும் கூடுதல் வணங்கிப் போவது.


இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ள பெண்கள் ஆணை அன்பினால் கட்டித் தன் வழிக்குக் கொண்டு வருவார்கள். அது Win-Win முறை. அது புரியாத, புரிய விருப்பம் இல்லாத புதுமைப் பெண்கள் எல்லாவற்றுக்கும் சமத்துவம் பேசி, மல்லுக்கு நின்று குடும்பத்தை Lose-Lose நிலைக்கு இட்டுச் செல்வார்கள்.

நன்றி ....

கேள்வி :...அடிக்கடி கம்பெனி மாறுவது நல்லதா?

பதில் :....

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி "A rolling stone gathers no moss" என்று. இதன் பொருள் நீரில் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு கல்லில் பாசி பிடிக்காது என்று. இந்த கேள்விக்கு அது மிகப் பொருத்தம்.

அடிக்கடி நிறுவனங்களை மாற்றும் போது அனுபவ காலம் என்பது பாதிக்கப்படும். அடுத்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால அவர்கள் எவ்வளவு காலம் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தார் என்பதைத்தான் முதலில் காண்பர். ஆறு மாதம், எட்டு மாதம் ஒருமுறை மாறி இருந்தால் அது அவரைப்பற்றி பல விஷயங்களை வெளிப்படுத்தும். அவர் நம்பகமானவரா, வேலை கற்று தங்குவாரா மாட்டாரா என்றும் அவர் எந்த வேலையையும் ஒழுங்காக கற்க ஆர்வம் உள்ளவரா அல்லது இங்கும் அதுபோல குறுகிய காலத்திலேயே பையை தூக்கிக்கொண்டு சென்று விடுவாரா என்று தான் பார்ப்பார்கள்.

இளம்வயதில் என் நண்பர்கள் சிலர் அதுபோல செய்வர். என் அறை நண்பன் அதிர்ஷ்டமானவன். மாலையில் வரும்போது நான் வேலையை விட்டு விட்டேன் என்று வருவான். மறுநாள் காலையில் வேலை தேடிப் போவான். மாலை வரும்போது வேலை கிடைத்து விட்டது என்பான். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று அப்படி எல்லாம் வேலை கிடைப்பதில்லை. அதுபோன்றவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக கஷ்டப்படுவார்கள். குடும்பம் அமைந்துவிடும் ஆனால் அவர்களின் மகிழ்ச்சியைவிட மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

திங்கள், 22 ஜூன், 2020

கேள்வி :.ஒரு மனைவி கணவனின் அன்பை எப்படி எப்படி உணருகிறாள் . (காமத்தை தவிர)?

என் பதில் :.

இந்த கேள்வி எனக்கு அவுட் ஆப் சிலபஸ் தான்…இருந்தாலும் கேள்வி படிச்சு வச்சுக்கிட்டு ஆன்செர் பண்ணுவோம்.…..

எப்படி அன்பை உணருக்கிறாள்…?

ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தில்….!

காலையில பெட்ல இருந்து எழுந்த உடனே மனைவியின் கன்னத்தில்,அவளுக்கு தெரியாமல் ஒரு முத்தம் கொடுக்கும்போது…..
குளிச்சு முடிச்சிட்டு சாப்பிடும்போது…நீ சாப்பிடியானு கேக்கும் போது…!
ஆபிஸ் போகும்போது போட்டுவறேன்மா னு சொல்லி நெத்தியில ஒரு முத்தம் கொடுக்கும்போது…

ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர அப்போ மனைவிக்கு பிடிச்ச மல்லி பூ வாங்கிக்கிட்டு வந்த உடனே…அதை தன் கையாலே வச்சு விடுற அப்போ…!
பிறந்தநாளுக்கு தீடீர்னு சர்ப்ரைஸ் பண்ணுற அப்போ..
வீட்ல எல்லாரும் இருக்கிற அப்போ அவள பார்த்து ஓர கண்ணால கண் அடிக்கிற அப்போ..

மனைவி தூங்கும்போது குழந்தை தனமான மூஞ்சி வச்சிக்கிட்டு தூங்கிற அப்போ…என் செல்லம்னு கொஞ்சுகிற அப்போ…

உடம்புக்கு முடியாத நேரத்தில் பிள்ளை போல பார்த்து கொள்ளும் போது…
அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கும் போது…

மொட்டை மாடியில்…அந்த நிலா வெளிச்சத்தில் அவள் மடியில் தலை வைத்து இருக்கும்போது..

மொபைல் காண்டாக்ட்ல…மனைவினு சேவ் பண்ணாம…மை பெட்டர் ஹாப்னு சேவ் பண்ணும் போது….

சொல்லாமல் தீடீர்னு அவுங்க (பிறந்த)வீட்டுக்கு அழைச்சு கிட்டு போற அப்போ…

என்னதான் கொலம்புல உப்பு இல்லைனாலும் காரம் இல்லைனாலும் …அதை சொல்லாம சிரிச்சிட்டே சாப்பிட்டு போற அப்போ…

வெளியில கூட்டி போற அப்போ..1 நிமிஷம் சொல்லி ஒன்றரை மணி மேக் அப் போட்டு வந்து …உங்களால தான் சீக்கிறம் அரை குறையா மேக் அப் போட்டு கிட்டு வந்தேன் சொல்லற அப்போ…கோவமே வந்தாலும் சிரிச்சிட்டே பல்ல காமிக்கிற போது…

உங்களுக்காக கவிதை எழுத்துறேன் சொல்லி 100 பேப்பரை கசக்கி போடுற அப்போ…

மனைவிக்கு பிடிக்காது என தெரிந்தும் தனக்கு பிடித்ததை விட்டு பிட்டு…அவளுக்கு பிடித்ததை தனக்கு பிடித்ததாக மாற்றி கொள்ளும் கணவனிடம் உள்ள அன்பு எல்லை அற்றது…. …

உங்கள் மேல் அவர் வைத்து உள்ள அன்பை நீங்கள் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு வடிவிலும் பார்க்கலாம்….

கனவன்மார்களின் அன்பு கடல் போன்றது…அதை கைக்குள் அடக்க முடியாது…கணக்கு இட முடியாது….

நன்றி ..வாழ்க்கை ஒருமுறை தான் ..வாழுந்துதான் பார்ப்போமே ...

கேள்வி :..தவறு செய்பவர்கள், அவர்களும் குடும்பத்தினரும் கடைசி வரை நன்றாகத்தானே வாழ்கிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்பதன் அர்த்தம் என்ன?

பதில் :...

பாவம், புண்ணியம், முற்பிறவி, மறுபிறப்பு என்பது எல்லாமே பொய். இல்லாத கடவுளின் பெயரால் அச்சுறுத்தல் செய்து மக்களை சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக நடக்கத் தூண்டுவதற்காகத்தான் இப்படிப்பட்ட பழமொழிகளெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அரசினால் இயற்றப்பட்ட சட்டங்களை மீறும்போது தண்டனைகள் உண்டெனத் தெரிந்தாலும் சட்டத்தை மீறி வாழ்வோர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சட்டத்தை மீறி வாழ்பவர்கள் அனைவருமே கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்களா? இல்லையே. பொதுச் சமூகத்தின் நலனைக் காக்க, எப்படி வாழவேண்டும் என்று மதங்களும், அதற்கு அப்பாற்பட்டு மனிதன் வகுத்த சட்டங்களும், இருக்கின்றன என்றாலும் எதற்கும் கட்டுப்படாதவர்கள் என்று கண்டறியப்படாத மக்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்; இன்னும் இருப்பார்கள். ஒருவன் குற்ற உணர்ச்சிகூட இல்லாமல் குற்றம் இழைத்தும், சட்டத்திலிருந்து சாமர்த்தியமாக தப்பித்தும், வாழ்பவனாக இருந்தால் அவனுக்கு எந்தக் கேடும் வந்துவிடாது என்பதுதான் உண்மை.

“அநியாயமாக வசதியற்றவனைக் கொலை செய்துவிட்டு, பணத்தைக் கொண்டு சட்டத்திலிருந்தும் தப்பித்துவிட்டான். இவனை இறந்தவன் ஆவி சும்மாவிடாது” என்பதுபோன்ற வசனங்களைக் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வரும். நம்மைச் சுற்றி நடபாடுபவர்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று கூறமுடியாது; சாமர்த்தியமாக சட்டத்திலிருந்து தப்பித்து வாழும் எத்தர்கள் பலர்  இருக்கிறார்களே! எனவே தெய்வம் நின்றுகொல்லும் என்பது கையாலாகதவர்களின் புலம்பல்தான் !

தொடர் ரத்தக் கொடையாளர் விருதாளர்

சகோதரர் உடுமலை டிஜிட்டல்போட்டோ ராஜேந்திரன் (எம்.சி.சி)


தம்பிடிஜிட்டல் போட்டோ ராஜேந்திரன் அவர்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் . சகோதரருக்கு விருதினை அறிவித்த தேசம் காப்போம் அறக்கட்டளைக்கும்,அவேர்ணஸ் அப்பா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

.உலகளாவிய ரீதியில் எத்தனை வகையான தானங்கள் காணப்பட்டாலும் உயிர்காக்கும் தானமாக இரத்ததானத்தினை குறிப்பிட்டால் மிகையாகாது. பிறருக்கு கொடுப்பதிலே அதியுயர் உயிர் காக்கும் சொத்தாக இரத்ததானம் விளங்குகிறது."அவ்வகையில் இவ்வாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம்  வாழ்வளித்தோருக்கு நன்றி தெரிவிப்போம்" 


வாழ்த்துக்கள் ....





ஞாயிறு, 21 ஜூன், 2020

கேள்வியும்,நானே .....
.பதிலும்,நானே ! 
ஆண்களுக்கு நாற்பதாவது வயதில் நாய்க் குணம் வரும் என்பது சரியா ?......

.தப்போ தப்பு ! ஒரு ஆண் தன் 25 வது வயதிலிருந்து 30 வயதுக்குள் திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு கணவனாகி வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.35 வயதுக்குள் இரண்டுகுழந்தைகளுக்கு அப்பாவாகிறான்.அவன் தன்னுடைய நாற்பதாவது வயதைத் தொடும்போது குழந்தைகளுக்கு பத்து வயது நிரம்பியிருக்கும்.முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு அடிமனதில் ஒரு பயம் தோன்றும்.பெண் இன்னும் இரண்டு வருடத்தில் வயதுக்கு வந்துவிடுவாள்.அடுத்த சில வருடங்களுக்குள் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் காரணமாக அவனுக்குள் ஒரு பொறுப்பும்,நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும் முதல்குழந்தை ஆணாக இருந்தால் நன்றாக படிக்க வைக்கவேண்டுமே என்கிற கவலையும் எழும்..எது நல்லது எது கெட்டது என்று எண்ணிப் பார்க்கின்ற நியாமான குணங்கள் தோன்றுவது என்பது ஒருஆணின் நாற்பதாவது வயதில்தான்.இந்த நியாய குணம் என்பது நமது பாமர மக்களின் உபயத்தால் நாய் குணமாக மாறிவிட்டது