ஞாயிறு, 31 மே, 2020

விளாத்திகுளம் நல்லப்பர் சுவாமிகள்!

இயற்கை அவரின் குருபீடம். கண்மாய்க் கரையும் ஆற்றங்கரையுமே அவர் சாதகம் செய்த குருபீடங்கள்

ஒருமுறை மைசூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் அரண்மனைக்குள் நுழைகிறார் அந்த இசை மேதை. அப்போது மகாராஜா முன்னிலையில் ஒரு இசை வித்துவான் ஒரே ராகத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலாபனை செய்து சாதனை படைத்தார்.

அதிசய சாதனை புரிந்த வித்துவானுக்கு மகாராஜா பண முடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான், என்னைப் போல் யாராவது ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்து பாடினால், அவருக்குத் தான் பெற்ற பரிசுகளைத் திருப்பி அளித்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா’ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாடினார். சவால்விட்ட வித்துவான் மெய்ம்மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி, தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் தங்கப் பதக்கமும் அணிவித்துச் சிறப்பித்தார்.
பாரதியும் சுவாமியின் ரசிகர்
பாரதியாருக்கும் சுவாமிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. சுவாமியின் பாட்டை ரசிப்பதற்காக “பாடு.. பாண்டியா பாடு” என்பாராம் பாரதி. எல்லோரும் எட்டயபுரம் அரண்மனை சென்று கவிமாலைகளும் இசைச் சரங்களும் சூடியபோது, அரண்மனைப் பக்கமே எட்டிப்பார்க்காதவர் நல்லப்பர். எட்டயபுரம் சென்றால் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் மண்டபம் சென்று இசைத்துக் களிப்புற்றுத் திரும்புவார்.
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒருமுறை பரமக்குடியில் நாடகம் முடித்துவிட்டு காரில் விளாத்திகுளம் வழியே வந்திருக்கிறார். விளாத்திகுளம் எல்லை தொட்டதும் காரை நிறுத்தச்சொல்லி, “இது விளாத்திகுளம் சுவாமி இருக்கிற இடம். இந்தப் பூமியில் நம் பாதம் பட்டாலே பெருமை. நான் நடந்தே வருகிறேன்” என்றாராம்.
இயற்கையுடன் இசைந்த வாழ்வு
விளாத்திகுளம் சுவாமிகள், காடல்குடி ஜமீன்தார். காடல்குடியில் இருந்து பத்துக் கல் தொலைவுள்ள விளாத்திகுளத்துக்கு குடிபெயர்ந்து வந்தவர். சுவாமிகள் என்ற பட்டமும் தொண்டைக்குழியில் இசையும் மட்டுமே அவர் கொண்டுவந்தவை. தாளக் கருவிகளாய் இரு கைகள்; இசைப் பிரவாகமெடுக்கும் ஒரு தொண்டைக் குழி. இசை கற்கக் குருபீடம் இல்லை: இயற்கை அவரின் குருபீடம். கண்மாய்க் கரையும் ஆற்றங்கரையுமே அவர் சாதகம் செய்த குருபீடங்கள். காலை இளங்காற்றில் காது மடலடியில் கனியும் குயில் கீதம், மரத்தின் தாட்டிக் கொப்புகளில் பறவைகளின் ‘கெச் சட்டம்’, நீர்நிலைகளின் அலைத் தாவல், விலங்குகளின் கத்தல் என்று பிரபஞ்ச ஓசைகளிலிருந்தே தன் இசையை அவர் உருவாக்கிக்கொண்டார். கண்மாய்க் கரை மரத்தடியில் பாட்டுக் குரலும் தாளக் கைகளுமாய் நல்லப்ப சுவாமிகள் ஆலாபனை செய்துகொண்டிருப்பார். அங்குதான் ராகங்களைப் பிரித்துப் பிரித்துப் பின்னுவார்.
“கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசல் இல்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்
பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊதல் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப்போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும். ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பதுபோல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தானே கீழிறங்குவதுபோல், மெதுமெதுவாக வழுக்கிக்கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடகயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்டவெளியில் நின்று சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’மென்று உச்சியில் நிறுத்திக் கீழே கொண்டுவருவார்” என பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
மற்றவருக்கு மழை இரைச்சல்; நல்லப் பருக்கு அது இசை. இடி, மின்னல் ஒலி - ஒளிக் காட்சியோடு இசையாகக் கொட்டுகிறது மழை. ஏற்ற இறக்கங்களுடன் ‘பிர்க்காவை’ மழை நடத்திக்கொண்டு போகிறது. அவரும் மழையுடன் சரிக்குச் சரியாய் பிர்க்காக்களைப் போட்டுக்கொண்டு கலந்தார்.
மேதைகள் வியந்த இசைத் திறம்!
மழை ஓய்ந்ததும் முன்னிரவில் அவர் தாமசிப்பது கண்மாய்ப் பக்கம். நீர்நிலைகளில் தவளைக் கச்சேரி. ‘வித்தெடு, விதையெடு - வித்தெடு, விதையெடு’ என்று ஒழுங்கான ஓசைக் கோர்வையாய் தாளம் பிசகாமல் தவளைகள் தொடங்கும். நல்லப்பர் அதை இசையாகக் கொண்டார். நீர்நிலையின் வாகரையில் நின்று சுவாமிகள் கைத்தாளமும் நாக்கை உள்மடித்துக் கிளப்பும் ஓசையுமாய் தவளைக் கும்மாளத்துக்கு ஈடாய் இசைத்துக்கொண்டிருப்பார். பின்னொரு காலத்தில் தன் முன்னால் அமர்ந்து கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.எம்.மாரியப்பா, காருகுருச்சி அருணாசலம், மதுர கவி பாஸ்கரதாஸ் போன்ற இசை மேதைகள் எல்லோரும் கண் சொருக, சொக்கட்டம் போட்டு தலையாட்டிக் கொண்டிருக்குமாறு ஆக்கியது இந்தத் தன் பயிற்சிதான்.
ஆதித் தமிழனின் கலைகளில் இசை முதன்மை கொண்டதெனில், அதனைச் செப்பம் செய்து வளர்த்த பெருமக்கள் வரலாற்றில் நினைக்கப்பட வேண்டிய சிலர் - நல்லப்பர் போல!
இசை ஆர்வலரான என்.ஏ.எஸ்.சிவகுமார், விளாத்திகுளம் சுவாமிகள் என்றழைக்கப்படும் நல்லப்பர் பற்றி ஏராளமான தரவுகளை, தகவல்களை உள்ளடக்கி ஒரு நூலையும் ஆவணப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். அது இன்று (26.04.2017) விளாத்திகுளத்தில் வெளியிடப்படுகின்றன.
- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்
தொடர்புக்கு: jpirakasam@gmail.com
நன்றி :இந்து தமிழ் திசை
பெயர் சிவா ..(47)தனியார் நிறுவன பணி கடந்த 22 வருடங்கள் ..வீட்டு கடன்

வழங்குவது ...

95 கல்லூரி படிப்பு முடிந்து ..ஆடிட்டர் ஆபீஸ் ..6 மாதம் ..பின் 1997 கோவையில் பணி தனியார் நிறுவன வேலை 2 வருடம் ...2000 இருந்து டிவிஎஸ் குழுமத்தில் சேர்ந்து தற்பொழுது முடிய பணிபுரிகிறேன் கோவை ..சென்னை ..சேலம் ..தற்பொழுது உடுமலை பணி ஓய்வு முடிய 12 வருடம் ...

மனைவி(38) ..ஒரு குழந்தை( 13)கோவையில் இருக்கிறார்கள் ..நேரம் கிடைக்கும்பொழுது வருடம் ஒருமுறை வந்து என்னை பார்ப்பார்கள் ..

நான் எனது அம்மாவுடன் (70)..தந்தை மறைந்து 3 வருடம் ஆகிவிட்டது ..தற்பொழுது பெற்றோர்கள் கடைசி காலத்தில் நானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ..என் நிறுவனத்தில் சொந்த ஊர் மாற்றல் வாங்கி வந்து விட்டேன் ...இனி பதவி உயர்வு ..சில அளவன்சகள் வேண்டாம் ..என்று உடுமலையில் வசிப்பது ...

பொழுது போக்கு ...
சிறு எழுத்தாளர் ..
.நூலக வாசகர் வட்ட துணை தலைவர் ..
உடுமலை வரலாற்று நடுவம் -செயலாளர்
நிதி ஆலோசகர்
இயற்கை ஆர்வலர் ..



கேள்வி :..நீங்கள் கண்டு வியந்த மனிதர் யார்? ஏன்?


பதில் :...நண்பர் மதிவாணன் அவர்களின் பகிர்வு ..பொருத்தமானதாக இருக்கும் ...


மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே அமர்க்களமாக இருக்கும். தொழிலதிபர் விஜயசாந்தியை, விமான நிலையத்தில் சந்தித்து மோதிக்கொள்ளும் ரஜினி, பெண்களை மட்டம்தட்டி ஒரு வசனம் பேசுவார்.

ஆம்பளைங்கன்னா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கம்பீரமாக கையை வீசி நடக்கணும்,

பொம்பளைங்கன்னா அவங்க முன்னால தலையை குனிஞ்சிகிட்டு கைய கட்டி நிக்கணும்

சமுதாயத்தின் மனக்குரலும் அதுதான் என்பதை தியேட்டரில் அதிரும் விசில் சத்தம் உறுதி செய்யும்.

இந்த சமூகத்தில் குழந்தை திருமணத்திற்கு பலியான ஒரு இளம்தாய், தான் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நிற்க வேண்டும், தனக்கு முன்னே ஆண்கள் கைவீசி நடந்து அணிவகுப்பு மரியாதை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் என்னாகும்? அந்த கனவுக்கு கணவனையே உதவி செய்யக் கேட்டால் என்ன நடக்கும்?

எங்கள் வத்தலகுண்டு கிராமத்தின் பக்கத்தில், திண்டுக்கல் நகரில் பேசப்படும் இந்த கணவன் மனைவி காவலர் ஜோடியின் கதையை, ஒரு பிரமிக்க வைக்கும் வாழ்க்கையை, பலரும் அறிந்திருக்கமாட்டோம். சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளியை பார்த்துதான் தெரிய வந்தது.

திருமதி. என்.அம்பிகா ஐ.பி.எஸ். தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இன்று வடக்கு மும்பை காவல் துறையின் மதிப்புமிக்க டி.சி.பி. Deputy Commissioner of Police. மகாஹாராஷ்டிர அரசாங்கத்திலும், காவல்துறை உயர் மட்டத்திலும் பெண் சிங்கம் என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படுகிறார்.

திண்டுக்கல்லில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மணம் செய்விக்கப்பட்டு புகுந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அம்பிகாவுக்கு பதினாலே வயது.

தனது பதினெட்டாவது வயதில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாய்.

தமிழக கிராமத்து பின்தங்கிய சமூக குடும்பங்களில், குழந்தை திருமணத்திற்கு பலியான எத்தனையோ குழந்தைகளில் அம்பிகாவும் ஒரு சிறுமி. வாழ்க்கையின் அழகிய தருணங்களை கனவில் மட்டும் காணும் பாக்கியம் பெற்றவள்.

அம்பிகாவின் கணவர் தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தார். ஏழ்மையான சூழ்நிலை. சிறிய வாடகை வீடு. அந்த குடும்பம் எளிய வாழ்க்கையில் நாட்களை கடத்தியது.

ஒரு நாள் அம்பிகாவின் கணவர், காவலர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக அதிகாலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி க்கு வழங்கப்பட்ட தடபுடலான அணிவகுப்பு மரியாதையை அறிந்து அம்பிகா திகைத்து போனார்.

வீட்டிற்கு வந்ததும் டி.ஜி மற்றும் டி.ஐ.ஜி பற்றி கணவரிடம் கேட்டார். துறையின் மிக மூத்த அதிகாரிகள், ஐ.பி.எஸ் படித்து நேரடியாக உயர்பதவியை பெற்றவர்கள் என்று தெரிய வந்தது.

அந்த குழந்தைத் தாய், தானும் ஐ.பி.எஸ் படித்து ஒரு காவல்துறை உயர் அதிகாரியாகி அந்த நிலைக்கு உயர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவுலகுக்கு போனார்.

ஆனால் அம்பிகா குழந்தை வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கூட எழுதியிருக்கவில்லை.

அம்பிகா தனது கனவை சொன்னபோது கணவர் யோசிக்கவில்லை. தான் வேண்டுமானால் ஐ.பி.எஸ் ஆக முயற்சிப்பதாக சொல்லி மனைவியின் கனவை தட்டிக்கழிக்கவில்லை. முதல் படியாக எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு தனித்தேர்வராக படித்து தேறுமாறு மனைவிக்கு வழிகாட்டினார்.

அம்பிகா படிப்பில் சுட்டி.

தனித்தேர்வராக தன்னுடைய எஸ்.எஸ்.எல்.சி தேர்வை முடித்தார். பிளஸ் 2 தேர்வையும் முடித்தார். டிகிரி தேர்வுகளையும் தனித்தேர்வராகவே முடித்தார்.

குழந்தைகளும் அம்மாவோடு இரவில் படித்து, அவர் உறங்கும் போது உறங்கி, காலையில் எழுந்து அவருக்கு வேலைகளில் உதவி செய்து, பகலில் பள்ளிக்கூடம் சென்று வந்தன.

இவரது கனவான ஐ.பி.எஸ் பயிற்சிக்கு சென்னை செல்ல வேண்டும். தம்பதியினர் இருவரும் இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டினர்.

கணவர் பலரது உதவியை வேண்டி பெற்று தன் மனைவி ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகளில் சேர ஏற்பாடுகளை செய்தார்.

கணவரின் முழு ஒத்துழைப்புடன் அம்பிகா தனியாக சென்னை வந்து சேர்ந்தார். விடுதியில் தங்கி தன்னுடைய வாழ் நாள் கனவை நினைவாக்கும் முயற்சியை ஆரம்பித்தார்.


ஆனால் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும், ஐ.பி.எஸ் தேர்வில் அம்பிகாவால் தேர்ச்சிபெற முடியவில்லை. குடிமை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல .

கணவர் சோகமடைந்த மனைவிக்கு ஆறுதல் சொல்லி அம்பிகாவை ஊருக்கு திரும்பி வரச் சொன்னார். பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தவிர அரசாங்க தயவால் இப்போது அவர்களுக்கு தங்குமிட வசதியும் கிடைத்திருந்தது.

ஒரு வேளை தான் ஓய்வு பெறும்நாளில் தனது தோளில் ஓரிரு நட்சத்திரங்கள் இருக்கலாம், கவலைப்படாதே என்று மனைவியை சிரித்துத் தேற்றினார். பிள்ளைகளும் கவலைப்படாதே அம்மா நாங்கள் அதிகாரிகளாகி பெருமை சேர்ப்போம் என்று உறுதியளித்தனர்.

ஆனால் மறுநாள் காலையில் எழுந்து அமர்ந்த அம்பிகா தனக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் வழங்குமாறு குடும்பத்தினர் முன்னர் விண்ணப்பம் வைத்தார்.

“இந்த ஆண்டு வெற்றிபெறவில்லை என்றால் நான் திரும்பி வருவேன். இந்த அனுபவத்தினால், படித்த படிப்பினால் தன்னால் குறைந்த பட்சம் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து குடும்பத்தை ஆதரிக்க முடியும்" என்று சொன்னார்.

கணவர் அவரைத் தேற்றி, மனைவியை மறுபடியும் சென்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை வந்து சேர்ந்தார் அம்பிகா. தன்னை பிரிந்து தவிக்கும் குழந்தைகளை எண்ணி கலங்கினார். குலதெய்வத்தை வணங்கினார். இந்த முறை அவர் எடுத்தது காளி அவதாரம்.

முயற்சியென்றால் அசுர முயற்சி. எடுத்ததை முடிக்க வேண்டும் என்கிற வெறி.

அம்பிகா தனது நான்காவது முயற்சியில் தனது ஐபிஎஸ் முதல் நிலைத்தேர்வு (Preliminary Exam), தலைமை தேர்வு, நேர்காணல் மூன்றையும் நொறுக்கித் தள்ளினார்!

2008 இல் ஐ.பி.எஸ்ஸை முடித்த பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். மிகவும் கவனத்துடன் அரசு நெறி முறைகளை பழகினார்.

அவரது பயிற்சியில் உடன் பயின்ற பேட்ச் மேட்கள் அவர் ஒரு துடிதுடிப்பான, துணிச்சலான பெண் என்று அப்போதே தெரிந்தது என்று சொல்லுகிறார்கள்.

அம்பிகா இப்போது மும்பையில் காவல்துறை வடக்கு 4வது பிரிவில் டிசிபி-யாக பணிபுரிகிறார். அவரது மனித நேய செயல்பாட்டிற்காக பத்திரிகைகளால் புகழப் படுகிறார். அவரது தீரத்திற்காக பெண் சிங்கம் என்று துறையினரால் பெருமையுடன் அழைக்கப்பட்டு விருதுகளை அள்ளிக் குவிக்கிறார்.

திண்டுக்கல்லின் இந்த பெண்மணி கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவின் மாமனிதர் பட்டம் வென்றார். பட்டமேற்கும் போது அவரது கம்பீர பேச்சை கேளுங்கள்.

குழந்தை திருமணத்திற்கு அம்பிகா தனது பெற்றோரை குறை கூறியிருந்தால், தன்னுடைய தலைவிதியை சபித்திருந்தால், அவர் இன்று ஒரு டி.சி.பி. ஆகியிருக்க முடியாது.

அவர் தனது கடந்த காலத்துக்கு சிஸ்டத்தை குறை கூறவில்லை.

பதிலாக, தனது எதிர்காலத்தை மாற்ற, கடின உழைப்பு, கணவரின் ஆதரவின் மூலம் அவர் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார். தம்பதியினர் தங்கள் கனவில் வெற்றி பெற்றார்கள்.

இன்று அம்பிகா பலருக்கு முன்மாதிரியாக மாறிவிட்டார். தனது துறையில் முதன்மை இடத்தை பிடித்தார். கண்டு வியக்கத்தக்க மனிதர்களில் ஒருவரானார். தனது கனவை நனவாகிவிட்டார்.


நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அந்த குடும்பத்தின் தலைவி நிற்க, அவர் முன்னே காவலர் படை கைவீசி நடத்தும் அணிவகுப்பு மரியாதை அவருக்கு மட்டுமல்ல. அந்த கனவை முதன்மை படுத்திய ஒவ்வொருக்குமானது.

நன்றி ...மனைவியின் வெற்றிக்கு பின்னால் தியாக கணவனும் இருக்கிறார் ..

சனி, 30 மே, 2020

கேள்வி :..சேமிப்புகளில் பெரும்பாலான தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருப்பது நல்லதா?

என் பதில் :..


பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என கருதினால் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு கணக்கில் சேர்க்கலாம். பண வீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் உங்கள் பணம் அதிக மதிப்பை ஈட்டாது.

எதிர் காலத்திற்கு பயன் தரத்தக்க வகையில் உங்கள் பணத்தை சேமிக்க வேண்டுமெனில் மீதமாகும் தொகையை நான்காக பிரித்து கீழ் கண்டவாறு சேர்க்கலாம.

முதல் 25% பணமாக அல்லது வங்கி கணக்கில் போட்டு வைக்கலாம். இது உங்கள் அவசர தேவைகளுக்கோ அல்லது பின்னாளில் மதிப்பு கூடும் என கருதும் பொருளை வாங்கி இருப்பு வைக்கவோ உதவும்.

இரண்டாவது 25% வீடு அல்லது நிலம் வங்கி கடனாகபெற்று அதற்கு மாதாந்திர தவணை செலுத்த பயன் படுத்தலாம். அவ்வகையில் உங்களுக்கு குடியிருக்க வீடு கிடைப்பதோடு அதற்கு வரிசலுகையும் கிடைக்கும்.

மூன்றாவது 25% ஏதாவது ஓய்வூதிய திட்டம், ஆயுள் மருத்துவ காப்பீடு, நல்ல பரஸ்பர நிதிதிட்டம் நல்ல பங்கு முதலீடு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இவை வரிசலுகைகளோடு ஒரு குடும்ப பாதுகாப்பையும் அளிக்கும்.

நான்காவது 25% தங்கம் மற்றும் வெள்ளி யில் நகைகளாகவோ காசுகளாகவோ சேர்த்து வைக்கலாம். இது மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதோடு அவசர ஆபத்து காலஙகளில் கை தூக்கி விடும்..

சேமிப்புகளோடு நின்று விடாமல் மன நிறைவோடு வாழ சுற்றுலா பொழுது போக்குகளுக்கும் சிறிது சேர்த்து வைத்து செலவு செய்யுங்கள்.

இனிய வாழ்த்துக்கள்…

நன்றி ...

சிவக்குமார்

நிதி ஆலோசகர்

99440 66681
கேள்வி : வட்டிக்கு விடுவது பாவமா?

பதில் :...

வட்டிக்கு பணம் தருவது பாவமா புண்ணியமா? ஏன் இது பாவம் என்று சொல்லப்படுகிறது? இது எந்த உழைப்பும் இல்லாமல் வருவாய் வருவது அதனாலா? ஆனால் அந்த முதலீடு பணம் என்னுடைய உழைப்பில் வந்த பணம் தானே? என்னுடைய பணத்தை வாங்கியவன் அதை வைத்து லாபம் சம்பாதிக்கிறான் அதில் சிறிது எனக்கு வட்டியாகத் தருகிறான். இதில் என்ன தவறு? அவனுக்கு கையில் பணம் வந்தால் அவன் தேவைகள் பூர்த்தி ஆகும் என்கிற நிலையில் நான் பணம் கொடுத்து உதவுகின்றேன். , அதற்கு வட்டி வாங்குகின்றேன். இதில் என்ன பாவம் கண்டீர்கள்? Blah blah blah.

இதில் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது. நடைமுறையில் என்ன நடக்கிறது? வட்டி தருகிறேன் என்று கை நீட்டி பணம் வாங்குகின்றான் ஒருவன். பல சத்தியங்களை செய்து தான் பணம் கடன் வாங்குகிறான். அவன் கெட்ட நேரம். பணத்தை நான் கேட்கும் போதோ அல்லது அவன் தருகிறேன் என்று நாளிலோ அவனால் தர முடியவில்லை. அவனே அவனுடைய சத்தியத்தை மீறிய பாவி ஆகின்றான். நான் கடுமையாக பேசினால் அதை பொறுக்க முடியாமல் ஏதோ ஒன்று செய்து பணம் தயார் செய்து தருகின்றான். இங்கு கடுமையான வார்த்தைகளை நான் பேசி பாவி ஆகின்றேன்.

ஆகவே நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க நாம் பாவங்கள் செய்ய வேண்டி இருக்கிறது அதனால் இதை தவறு என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.

இதில் திருப்பதி சாமிக்கு குபேரன் கடன் கொடுத்து, ஆயிரக்கணக்கான வருடங்களாக வட்டி மட்டுமே வாங்கிக் கொண்டு தானே இருக்கிறான் என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.

வட்டிக்கு பணம் கொடுத்தால் பாவமா என்று கேள்வி. இதைவிட இன்னொன்று நான் கேட்க விரும்புகின்றேன், இந்த கலி காலத்தில் கொடுத்த பணத்தையே முழுவதும் ஸ்வாஹா செய்கிறார்களே அவர்களை பற்றி சாத்திரங்கள் எதுவும் சொல்லவில்லையா? பணத்தை வாங்குவதற்காக மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் தெரியுமா? வட்டியை விடுங்கள். அசல் பணமே திரும்ப வருவது இல்லை. இதனாலேயே பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்களும் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி ....
கேள்வி :..15000 சம்பளம் வாங்கும் நான் எந்த வழியில் சேமிப்பை துவங்கலாம்? தகுந்த ஆலோசனைகள் வேண்டும்.

என் பதில் ...


சேமிக்கும் பழக்கம் இருப்பது எப்போதும் நம்மை பாதுகாக்கும்.

தேவையற்ற செலவு செய்யாமல் இருந்தாலே நிறையே சேமிக்கலாம்.

நீங்கள் குறைந்தது 3000 சேமிக்க பாருங்கள். நல்ல பரஸ்பர நிதியில் மாதம் 1000 (அ) 2000, வீதம் SIP முறையில் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள்.(முதலீடு செய்யும் முன்பு நன்கு ஆய்வு செய்யுங்கள்). இது உங்களுக்கு நல்ல லாபம் ஈட்டி தரும்.

நல்ல வட்டி தரும் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்யுங்கள்.

முடிந்தவரை ஆரோக்கிய உணவுகள் சாப்பிட்டு மருத்துவ செலவுகளை குறையுங்கள்.

இன்சூரன்ஸ் எடுத்து கொள்ளுங்கள்.

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி.

சிவக்குமார் ...
நிதி ஆலோசாகர்
9944066681..
கேள்வி :..நிஜ வாழ்க்கையில் ஒரு ஆண் தங்களை பின்தொடர்வதை கண்டு பயப்படும் பெண்கள்    முகநூலில் ..வாட்ஸாப்பில் ..இன்ஸ்டாகிராம் ..வலைத்தொடர் ... வில் ஆண்கள் தங்களைப் பின்தொடர்வதை எவ்வாறு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றனர்?

என் பதில் :...


நீங்கள் கேட்பது சரி தான்.

ஸோசியல் மீடியாவிலோ யார் நம்மை பின்தொடர்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்கள், பெண்கள் என்றெல்லாம் இல்லை.

இது ஆண்களுக்கும் பொருந்தும். ஏதாவது சண்டைன்னா, வாடா! என் ஏரியா பக்கம் வந்து பாருங்குற ரேஞ்சிக்கு சீன் போடுவாங்க. ஆனால் உண்மையிலயே ஒரு மனுஷன் பேச்சுக்கு சொன்னா வீடு வரைக்குமா வருவீங்க. நாம யார் வம்புக்கும் போறதில்லை. நம்ப உண்டு நம்ப சொலி உண்டுன்னு இருந்துட வேண்டியதுன்னு சொல்லுவாங்க.


ஏன்னா, விர்சுவல் வேர்ல்டுல இருக்குற உங்களை யாருக்குமே தெரிய போறதில்லை. இதில் நீங்க வைச்சிருக்குற பேர், புகைப்படம் கூட யாருடையதா வேணும்னாலும் இருக்கலாம். அதனால உங்களுக்கு ஒரு குருட்டுத்தனமான தைரியம் இருக்கும். நீங்க இங்க வேறு ஒரு நபரா வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்பீங்க.

சில பேரிடம் நம்மலே கூட போய் பேசுவோம்.நம்மல ரொம்ப ஜாலியான பர்சனா காட்டிப்போம்.நமக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிப்போம்.

ஆனால் நிஜ வாழ்க்கையில நமக்கு பக்கத்துவீட்டு காரங்க பேருக்கூட தெரியாது.

சில தம்பதிகள் சந்தோஷமா இருக்குற மாதிரி புகைப்படம் போடுவாங்க. ஆனால் வீட்டுல எப்பவும் சண்டை போட்டுக்கிட்டிருப்பாங்க.

இதுல இன்னொரு காமெடி என்னனா இதையெல்லாம் பார்த்து நம்மளால இப்படி வாழ முடியலையேன்னு பொறாமை படுற கூட்டம் வேற இருக்கும்.

என்ன கேட்டீங்கன்னா நான் இதை ஒரு மாய உலகம்னு தான் சொல்லுவேன்.

நாம நிஜ உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கு வாழ்ந்துக்கலாம்.

நிஜ வாழ்கை வேற, அங்க உங்களை யாராவது பின்தொடர்ந்தா ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயம். என்ன பின்தொடராதீங்கன்னு அங்க சொன்னா கேட்க மாட்டாங்க. ஆனால் இங்க நமக்கு யாரையாவது பிடிக்கலைன்னா அவங்களை பிளாக் பண்ணிடலாம். அதனால் தான் பெண்கள் இதை ஒரு பெரிய பிரச்சனையா எடுத்துக்குறதில்லை....

நன்றி ...

வெள்ளி, 29 மே, 2020

கேள்வி :..நான் ஒரு திருமணமான பெண், வேறொரு ஆண் மூலம் கர்ப்பமாகிவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?

என் பதில் :...


இந்த பதிவை முடிந்தால் பெண்கள் அனைவரும் படியுங்கள், வயது வித்தியாசம் இன்றி, யாருக்கு தெரியும் வாழ்வில் நாமும் சில தருணங்களில் சில சிக்கலான முடிவை எடுக்க நேரம் வரலாம்!

கர்பமாகிவிட்டீர்களா?

நல்லது வாழ்த்துக்கள்…💐💐💐

இங்கு அனைவருக்கும் கர்ப்பம் தரிக்க வரன் கிடைப்பதில்லை என்பதை முதலில் உணருங்கள்… சிலருக்கு அது மறுமுறை என்பது நடக்க வாய்ப்பு இல்லாமலும் போலாம், குழந்தையில்லாதவர்களை கேட்டால் தெரியும் அதன் அருமை.

இது ஒருவேளை சித்தரிக்கப்பட்ட கேள்வி என்றாலும், இன்றைய சமூகத்தில் இதுபோன்ற தவறான கர்ப்பம் தரிப்பு நடந்து கொண்டுதான் உள்ளதல்லவா.

இறுதியில் என் தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன், முதலில் தவறு யார்பக்கம் என்று பார்ப்போம்.

இப்படி பெண் தவறான வழியில் கர்ப்பம் தரிக்க காரணம் என்ன? யார்?

ஆண்கள் தான், மணமுடித்த பெண்ணை மதிக்காது..பணத்தின் பின்னே திரியும் சில வேடிக்கையான மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.திருமணமான மனைவியோ தமிழ்நாட்டில், கணவனின் வேலையோ வெளிநாட்டில் என்றிருந்தால் சில பெண்கள் இத்தகைய சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்…பாவம் அவளும் பெண்ணல்லவா! அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் அல்லவா!

சரி…இல்லை இல்லை தவறுக்கு பெண் தான் காரணம்! எப்படி?

முதலில் பெண்கள் விருப்பமற்ற ஆணை கட்டாய திருமணத்தால் மணந்துகொள்வது, பிறகு விரும்பியவனான காதலனுக்கு குழந்தை பெற்று விடுவோமே என்று தவறான அன்பால் தடம் புரள்கிறார்கள்.சிலர் தாம்பத்திய உறவு சரியான சுகம் தரவில்லை என்று…வேறொரு தலைவனை தேடுகிறார்கள்..

ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, இந்த சமூகம் தான் காரணம்:

பெண்கள் கேட்கலாம், ஏன் ஆண்கள் இது போல தவறு செய்வதில்லையா?திருமணம் ஒரு பெண்ணோடு, தேனிலவு வேறு பெண்ணோடு என்று இருக்கிறார்கள்? இதில் நாங்கள் செய்தால் என்ன தவறு என்று? இது ஆண்கள் ஆளும் சமூகம் அம்மா(patriarchial society)என்ன செய்வது.. இந்த சமுதாயம் ஆண் குழந்தை பெற்காவிட்டால் இவள் தேர மாட்டாள் என்று இன்னொரு திருமணம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

இந்த ஆண் சமூகம் பெண்ணையே குறை கூறும். அதனாலேயே என்னவோ , ஆணின் இயலாமையை அவர்களின் பெற்றோர்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள், இவளுக்கு தான் எதோ குறை என்று சொல்வார்கள்.பெண்கள் குழந்தை தான் பெற்கவில்லை என்றால், மலடி என்கிறீர்கள் இந்த சமூகத்தில், அதே வேறு ஒருவனுக்கு பெற்றால் தாசி என்கிறார்கள், என்று, இத்தகைய சமூக சூழ்நிலைக்கு ஆளாகாமல் இருக்க தகாத முறையிலும் சிலர் பெற்று தகப்பன் இவன் தான் என்று வாய் கூசாமல் கணவனை கை காட்டிவிடுகிறார்கள்.

ஏனென்றால், அம்மா வந்து சொன்னா தான் அப்பாவின் பெயர் தெரியுமடா, அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாக தான் போகுமடா, என்பதுபோல் தான் பெண்கள் நினைத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் குழந்தையை பெற்று கொள்ளலாம்.

இதில் ஆணும் பெண்ணும் தவறு இழைத்தவர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை.

நீங்கள் உங்கள் சுகத்திற்காக வேறு ஒருவருக்கு பெறாமல், சூழ்நிலையால் சமூக பிடியில் இருந்து தப்பிக்க அப்படி செய்துவிட்டேன், என்று உங்கள் தவறை உணர்ந்தால், தெரிந்துகொள்ளுங்கள் குழந்தை பெற மருத்துவ பரிந்துரைகளும், வாடகைத்தாய்,தொழில்நுட்ப முறை என்று பல வழிகள் உள்ளது அதில் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படி தவறான முறையில் தான் பெற வேண்டும் என்பது, நீங்கள் செய்த மன்னிக்க முடியாத தவறு தான்.

ஒருவேளை உங்கள் கணவர் குழந்தை பெற்றுதர இயலாதவர், அதனால் அவருக்கு அவப்பெயர் கிடைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் கணவரின் குழந்தை தான், கடவுள் அருளால் கிடைத்தது என்று, சமூகத்தின் பிடியில் உங்களுக்கு கிடைக்கும் மலடி என்ற பட்டத்தில் இருந்தும், உங்கள் கணவருக்கு கிடைக்கும் ஆண் மகன் இல்லை என்ற பெயரில் இருந்தும் தப்பித்து கொள்ளுங்கள், ஏனென்றால் குழந்தை பெற இயலவில்லை என்றால் அது பெண்ணுக்கு மட்டும் அழுக்கு அல்ல, இங்கு ஆண்களும் ஆண்மையற்றவராகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கணவனுக்கு துரோகம் இழைத்தவள் என்ற பெயர் உங்கள் மனதில் அழியாத வடு தான்…நீங்கள் செய்த தவறுக்காக, வாழ்நாள் முழுக்க அனுபவியுங்கள். உறவு கொண்டவனிடம் இல்லை நான் தவறு செய்து விட்டேன், என்னை நெருங்காதே என்று விலகி விடுங்கள், குழந்தை உங்கள் கணவருக்கு பெற்றது ,தவறான உறவு கொண்டவனுக்கு இல்லை என்பதை உரைத்துவிடுங்கள் அவனுக்கு. கற்பை தெரிந்தே கொடுக்கத் தெரிந்த உங்களுக்கு , கள்வனை எப்படி கழட்டி விடுவது என்பதும் நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்,

மன்னிக்கணும் சகோதரி கடினமான சொல் தான்…! கனத்த இதயத்தோடு சொல்லிவிட்டேன்!

இதில் உங்கள் சூழ்நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது, நான் நினைப்பதை ஒரு சகோதரிக்கு சொல்வது போல் சொல்லிவிட்டேன்,என்ன இருந்தாலும் நீங்கள் செய்தது தவறுதான்!

இதுபோல் ஆணும் பெண்ணும் சமூகத்திற்க்கு பயந்து வாழாமல், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக வாழுங்கள்,அதுவே உத்தமமான வாழ்க்கை!

இதை படித்த உங்களுக்கு வேறு எதேனும் நல்ல தீர்வு தெரிந்தால் தயங்காமல் கருத்து தெரிவியுங்கள், நாளை யாரோ ஒருவர் இது போன்ற தவறை செய்யாதிருக்க நாம் காரணமாக இருக்கலாம். ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு எது தவறு எது சரி என்று கற்றுகொடுப்தே நம் தலையாய கடமை.

நன்றி ...
கேள்வி :..மனைவிக்கு தெரியாமல் தனது பெற்றோர்க்கு பண உதவி செய்யும் கணவன் எப்படிப்பட்டவர்?


என் பதில் ...

நல்லவர் தான் அதில் தப்பு இல்லை!

கணவன் தான் சம்பாதிக்கும் பணத்துக்கு, ஒவ்வொண்ணும் கணக்கு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதெல்லாம் கூட புரிஞ்சுக்க முடியாத பெண்டாட்டி என்றால் தானே சொல்ல மாட்டேன் என்கிறார்..

மேலும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை.

இந்த அம்மா அவங்க வீட்டுக்கு, தான் சம்பாதித்ததில் ஓரளவு செஞ்சாலும், அவங்க புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வீட்டுக்காரர் அவங்க அம்மா அப்பா உறவினருக்கு செய்வதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை...

இதெல்லாம் சண்டை வரக்கூடிய விஷயம் இல்லவே இல்லை - ஆரோக்கியமான உறவில்.

பெண்டாட்டியும் கணவரின் சகோதரி, அண்ணன் மகள், தம்பி மகன் எல்லோருக்கும் தாராளமா செய்யணும் .. அந்த குழந்தைங்க - சித்தி, அத்தை, அல்ல மாமி இப்படி ஆசையா எதிர்பாக்கறது கொள்ளை அழகு .. கணவனின் அண்ணன் குழந்தையும் நம்ம குழந்தை தானே ! பாதி நாள் அந்த குழந்தைகள் தான் ஆறுதலா இருக்கும் கூட்டு குடும்பத்தில் .
கேள்வி :நான் கல்லூரியில் காதல் கொண்டதில்லை, வகுப்பை புறக்கணித்ததில்லை, குடிப்பழக்கம் இல்லை, கடந்து வந்த பாதைகளில் எந்த தவறும் செய்ததில்லை. இப்பொழுது திரும்பி பார்க்கும் பொழுது வாழ்க்கையில் வெறுமையை உணர்கிறேன். என்ன செய்வது?

என் பதில் :...


நீங்கள் சொன்ன லிஸ்ட்டில் எவற்றையெல்லாம் உண்மையிலேயே இழந்திருக்கிறீர்கள். எவற்றையெல்லாம் "நல்லவேளை, செய்யவில்லை. இல்லையேல் உங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கும் " என்று பார்க்கலாமா?

காதல் : பருவ வயதில் வரவேண்டிய உணர்வுதான். கொஞ்சம் ஈர்ப்பு எல்லாம் உங்களுக்கும் எல்லோரையும் போலவே வந்திருக்கும். ஆனால் அடுத்த படிக்கு- காதலை வெளிப்படுத்தி, அந்த பெண் சம்மதித்து, ஊர் சுற்றி, திருமணத்திற்கு கனவுகள் கண்டு பின் வெற்றியோ, தோல்வியோ ஆவது வாய்ப்பில்லாததாலோ அல்லது உங்களுடைய கூச்ச சுபாவம் போன்ற குணாதிசயத்தாலோ நடக்காமல் இருந்திருக்கலாம்.
அப்படியானால் கையைக் கொடுங்கள். நானும் உங்கள் கேஸுதான். ஆனால் நாம் எல்லோரும் நினைப்பதுமாதிரி காதல் கல்லூரி படிக்கும்போது மட்டும் வருவதில்லை. வாழ்க்கை முழுவதும் புதிய காதல்கள் வருவதும், புதிய பெண்ணின் அன்பு கிடைப்பதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நல்ல வேலையாக கல்லூரிப் பருவத்தில் காதல் வரவில்லை என்று நான் இப்போது உணர்கிறேன். அந்த பருவத்தில் வரும் காதல் தவறு கிடையாது. ஆனால் வாழ்வில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாலும், புதிய பொறுப்புக்களை சுமக்கவேண்டிய அவசியம் இருப்பதாலும் அப்போது வரும் காதல் முறிந்தாலும், திருமணத்தில் முடிந்தாலும் அதீத துன்பத்தையே தருவதை நான் நிறைய மனிதர்களிடம் பார்த்திருக்கிறேன்.

அதனால் காதலுக்கான வயது ஒன்றும் முடிந்துபோய்விடவில்லை. பெண்களிடம் இதுவரை இல்லையெனில் இனி நெருங்கிப் பழகத் தொடங்குங்கள். வெகு விரைவில் நாம் பெண்களை புரிந்துகொள்ளாத தொடங்குவோம். பின் பல கள்ளம் கபடமற்ற பல காதல்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை தொடர்ந்து வரும்.

2. வகுப்பு புறக்கணிப்பு :

இதை நான் சின்னச் சின்ன குறும்புகள்-யாருக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத குறும்புகள் என்று எடுத்துக் கொள்கிறேன். இத்தகைய விளையாட்டு குணங்களுக்கும் எதுவும் வயது வரம்பு கிடையாது. சிறு வயதில் குறும்புத் தனத்துடன் இருந்த பலர் சற்று வயதானவுடன் இறுக்கமான, சீரியஸான முகத்துடன் வளம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதில் விளையாட்டுத் தனத்துடனும்,இந்த வயதில் சீரியஸாகவும் இருக்கவேண்டும் என்று எந்த இலக்கணமும் கிடையாது. பொறுப்புணர்வுக்கும் விளையாட்டுத் தன்மையுடன் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் பொறுப்பாக இருந்துகொண்டே மகிழ்ச்சியாகவும், விளையாட்டுத் தன்மையுடனும் இருக்கமுடியும். எனவே இதுவரை போனால் போகட்டும். இனி அப்படி இருக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

3. குடிப்பழக்கம்:

நல்லவேளை, நீங்கள் அந்த வயதில் மதுவைத் தொடவில்லை. உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போடும் தன்மை மதுவுக்கு உண்டு. மதுவுக்கு அடிமையான பலர் வாழ்க்கையில் எந்தவித மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியாமல், சதா ஒரு பதட்டத்துடன் இருந்துகொண்டு, தன் கடமையையும் பொறுப்புகளையும் சரிவர செய்ய இயலாமல், மதுவைப் பெறுவதற்காக திருடுவது பிச்சை எடுப்பது என்ற அளவிற்கு கீழிறங்கி, நிறைய அவமானப் பட்டு ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மது மட்டுமல்ல, மனதை அடிமைப்படுத்தும் மற்ற பழக்கங்களான புகை, கஞ்சா,மற்ற போதை, சூது முதலிய எல்லாமே மிக மிக ஆபத்தான விஷயங்கள். மது அருந்தாதவனுக்கு சமூகத்தில் என்றுமே தனி மதிப்பு உண்டு. மதுப்பழக்கம் இல்லாத ஒரே காரணத்தினால் ஒருவனிடம் ஈர்க்கப்பட்டு காதலித்த பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.

4. மற்ற தவறுகள்:

எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனது தெரியவில்லை. ஆனால் நம்மை அடிமைப்படுத்தும் போதை ஊட்டக்கூடிய எந்த தவறையும் நீங்கள் செய்யாமல் இருந்தது நல்லதற்கே. இனியும் செய்ய முயற்சிக்காதீர்கள்.

சமூக விதிகள் சார்ந்த தவறுகள் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது.ஒருவரது சூழல்,வாழும் சமூகம் போன்ற பல காரணிகள் கொண்டு சரி, தவறிற்கான இலக்கணம் மாறிக்கொண்டேதான் இருக்கும். வாழ்க்கையில் நாம் பல விஷயங்கள் பயிற்சியின்மூலம் தவறு செய்து செய்துதான் கற்கிறோம்.

நன்றி ...

கேள்வி :..உங்கள் வாழ்க்கையினை மாற்றிய அந்த தருணம் எது?

என் பதில் :..இந்த கேள்வியை என் தோழி ஆசிரியரிடம் பதில் சொல்லுங்களேன் என்று கேட்டேன் ...அவர் பணிபுரிந்த கடற்கரை கிராம பள்ளியில் பணிபுரிந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி ..


எனக்கு வேலை கிடைத்த அந்த தருணம் தான். ஏனா அதுவரைக்கும் நான் வேலை பார்த்துகிட்டு இருந்த தனியார் பள்ளியில் மாணவர்கள் ரொம்ப நீட்டா வருவாங்க. சொல்லிக் கொடுக்கிறத படிப்பாங்க. அதனால மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கையும் அப்பர் மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கை மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஆனால் முதன்முதலில் அரசுப்பள்ளியில் பணியில் சேர்ந்தப்போ அந்தப் பள்ளி உடைய தோற்றமும் அதைவிட அங்க உக்காந்து இருந்த மாணவர்களோடு தோற்றமும் என் மனசுல ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைய சொல்லனும்னா ஒரு வாரம் முழுக்க என்னால அந்தப் பசங்கள ஏத்துக்க முடியல.

அதுக்கப்புறம் நான் யோசிச்சு பார்த்தேன் இனிமேல் அவங்க கூட தான் நான் இருந்து ஆகணும் ஏன் அவங்களை எனக்கு ஏத்த மாதிரி மாற்றக்கூடாது என்று முயற்சி செய்தேன். அவங்ககிட்ட நிறைய பேசினேன் அவங்களோட குடும்ப சூழ்நிலை என்னனு தெரிஞ்சிகிட்டேன் ஆனா அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிச்சு ஒருநாள் சாப்பாட்டுக்கே அவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு .

காலைல சாப்பாடு சாப்பிடாத பசங்க எத்தனையோ பேர் வருவாங்க அவனோட வயிறு பசிக்கும்போது அவனால் எப்படி படிக்க முடியும். அதுக்காக தினம் என் கைப்பையில் தனியா பணம் வச்சுறுப்பேன் யாரு சாப்பிடாம வராங்களோ அவங்களுக்கு பிஸ்கட் பழம் வாங்கி குடுக்க. நான் அப்ப முடிவு செஞ்சேன் அவங்களோட வாழ்க்கைமுறையை மாத்தணும்னு. அங்க படிச்ச பசங்க எல்லாருமே மீனவர் வீட்டு பிள்ளைங்க.

அவங்க எனக்கு பெரிய தத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்காங்க. அது என்ன தெரியுமா நாம வாழ்வதற்காக எவ்வளவு வேணாலும் போராடலாம்.

முதல் இரண்டு வாரம் அவங்க எல்லாரையும் என் பக்கத்துல வர வச்சு நிறைய கதை சொன்னேன். பாட்டு சொல்லிக் குடுத்தேன்.உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா உங்ககிட்ட ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கல நீங்க சுத்தமா இருக்கணும்அப்போதான் உங்கள எனக்கு பிடிக்கும்னு சொன்னேன். அடுத்த நாள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது ஓரளவுக்கு கொஞ்சம் நீட்டா வந்திருந்தாங்க.

அடுத்து பெற்றோர்களை வரவச்சு பேசுனேன் அவங்ககிட்ட சொன்னேன் நீங்க கொஞ்சம் ஒத்துழைப்பு குடுங்க உங்க பசங்கள நான் படிக்க வைக்கிறேன்னு.இந்த தருணத்துல எனது பள்ளி தலைமையாசிரியர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு குடுத்தார்.

அதுக்கப்புறம் அவங்களோட நடத்தையில் நிறைய முயற்சி செய்துமாற்றத்தை உருவாக்குனேன். என்னோட வகுப்பில இருக்க மாணவர்கள் கிட்ட நிறைய மாற்றம் ஏற்பட்டது. எல்லாரும் சொல்லுவாங்க கடற்கரை ஏரியால வேலை பாக்குறது ரொம்ப கஷ்டம் அந்த பசங்க சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க படிப்பு வராது ரொம்ப கஷ்டம்னு.

என்னோட உயர் அதிகாரி பள்ளிய பார்வையிட வரும் போது என் கைய புடிச்சுட்டு அவங்க சொன்னாங்க நான் உன்னை முதல் தடவை பார்க்கும் போது இந்த பொண்ணு எப்படி இங்க சமாளிக்க போகுதுனு நினைச்சேன் ஆனா மூணு மாசத்துலயே அவங்க கிட்ட நிறைய மாற்றத்தை உருவாக்கி இருக்க அப்படின்னு.ஏனா எனக்கு வேலை கிடைக்கும்பொழுது என் வயது 22.


அந்த தருணங்கள் தான் எனக்கு வாழ்க்கையில் பல விஷயத்தை கற்றுக் கொடுத்தது நம்மள விட கஷ்டமான வாழ்க்கை வாழ்றவங்க இருக்காங்க அப்படின்னு. அதுக்கப்புறம் நிறைய சிறப்பு குழந்தைகள் முதன்முதலா அங்கதான் பார்த்தேன் நடக்க முடியாத பேச முடியாத அதைவிட மனநலம் குன்றிய குழந்தைகள். அவங்கள சமாளிக்க தனி திறமை வேனும்.அந்த சுழ்நிலைதான் என்ன ஒரு புது மனுசியா மாத்துச்சு.

ஞாயிறு, 24 மே, 2020

ஒரு சின்ன முத்தத்திற்கே
சமாதானம் ஆகிறாயே
லூசு 😘😘😘😘

பின் எதற்கு இப்படி
மூச்சு முட்ட
சண்டை போடுகிறாய் 😍😍😍😍

💞💘💞
கேள்வி :...வீட்டுக் கடன் (Housing Loan) வாங்கினால், அதில் அசல் மற்றும் வட்டியாக திருப்பிச் செலுத்தும் தொகைக்கு என்னென்ன வருமான வரிச்சலுகைகள் கிடைக்கும்?

என் பதில் :...


கல்யாணம் பண்ணி பார்க்கலாம் எனறால் பலருக்கு பெரியவர்களே அதை பண்ணி வைத்து விடுகிறார்கள். வீட்டைக்கட்டி பார்க்கலாம் என்றால் அதற்கும் அவர்களே கட்டையை போடுவார்கள்.

கடன் வாங்கி சொந்த வீடு வாங்கலாம் என்று 80ஸ் கிட்ஸ் பேச்செடுத்தால் வீட்டில் இருக்கும் ஒரிஜினல் 80 வயது பெரியவர்கள் 'யோசித்து பண்ணுப்பா, இருபது வருஷம் தவணையையும் வட்டியையும் எப்படி கட்டுவாய்' என்று எச்சரிக்கை பண்ணுவார்கள்.

மருமகள் யோசனையின் பேரில்தான் மகன் வீடு கட்டும் முடிவுக்கு வந்திருப்பான் என்று அவர்களுக்கு தெரியும்.

நீங்கள் வருமானவரி கட்டும் நிலையில் இருப்பவர்களா? எந்த யோசனையும் இல்லாமல் வீட்டுக்கடன் வாங்கி ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளலாம். எப்படி அப்படி?

தற்போது நீங்கள் தரக்கூடிய வீட்டு வாடகையில் ஏற்படும் மிச்சம், கொரோனோவால் வீட்டு சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சி, வீட்டுக்கடன் வட்டி குறைப்பு, கடனில் கிடைக்கப்போகும் வரிச்சலுகைகள் - இந்த நான்கு விஷயங்களே நீங்கள் வங்கியில் வாங்க போகும் வீட்டு கடன் தவணைக்கு ஈடாக இருக்கும்.

வரும் காலத்தில் வீட்டின் மதிப்பு கூடுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் வீடு இலவச இணைப்பு மாதிரிதான்.

எல்லாவிற்கும் மேலாக, உங்களுக்கு சொந்தமான வீட்டில் இருக்கும்போது கால் மேல் கால் போட்டு நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். யாரும் காலிபண்ணி போகச் சொல்ல மாட்டார்கள்.

உயிருள்ள வரை பூவுலகில் அது உங்களுக்கு ஒரு சொர்க்கம். இருப்பினும் பரலோக சொர்க்கத்துக்கு போகுமுன் மறக்காமல் உயில் எழுதி வைக்கவும்.

ஒரு விஷயம். பொதுவாக அரசாங்கம் அப்படி ஒன்றும் இலவச விருந்து போடாதே? எதற்கு நாம் வீடு வாங்குவதற்கு, அரசு தனக்கு வரவேண்டிய வரி வருமானத்தில் சலுகை தரவேண்டும். இதில் உள்குத்து எதுவும் இருக்கிறதா?

மக்களை ஒரு வீட்டிலாவது முதலீடு செய்ய இந்திய அரசு பலவருடங்களாக ஊக்குவித்து வருகிறது. ஏனென்றால் வீட்டு கட்டுமான தொழில், நாட்டுக்கு முக்கியமான உபரி பலன்களை தருகிறது:

ஒரு வீட்டின் கட்டுமானம் 250 வகையான தொழில்களுக்கு அடிப்படை தேவையை உருவாக்குகிறது (அம்மன் TMT கம்பிகள் முதல் ராம்கோ சிமெண்ட் வரை)
ஒரு வீடு சராசரியாக 1050 வேலை நாட்களுக்கு வழிவகுக்கிறது
இதன் மூலம் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களுக்கு, புலம் பெயர் சகோதரர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது.
மனிதனின் மூன்று அடிப்படை தேவைகளில் பெரும் செலவு பிடித்த ஒன்றை அவரே பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.
இதனால் வீடு வாங்குவதை ஊக்குவிக்க பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதே காரணத்தால்தான் வீட்டுக் கடன்களுக்கு, தனி நபர் வருமான வரி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது.

இந்த வருடம் அரசு அறிவித்த புதிய வருமானவரி விருப்ப திட்டத்தை (Option II) தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். சில ஆண்டுகளில் அது சேமித்தலுக்கான உங்களின் ஊக்கத்தை தகர்த்துவிடும்.

வீட்டுக் கடனில் வரி சலுகை

வீட்டை வாங்க / கட்ட இரண்டில் எதற்காகவும் வீட்டுக் கடன் வாங்கலாம்.

கடன் வாங்கப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் வீட்டின் கட்டுமானம் முடிக்கப்பட வேண்டும்.

வீட்டுக் கடனுக்காக நீங்கள் ஈ.எம்.ஐ செலுத்துகிறீர்கள் என்றால், அதில் இரண்டு கூறுகள் உள்ளன - வட்டி திருப்பிச் செலுத்துதல் மற்றும் அசல் திருப்பிச் செலுத்துதல்.

1. வீட்டுக் கடனில் வட்டிக்கான வரி சலுகை

கடன் ஈ.எம்.ஐ.யின் வட்டி பகுதிக்கு Sec24 இன் கீழ் உங்கள் மொத்த வருமானத்திலிருந்து அதிகபட்சமாக ரூ2 லட்சம் வரை விலக்கு கோரலாம். இது ஒரு பெரிய சலுகை.
உங்கள் சொந்த உபயோகத்துக்கு வீட்டில் குடியேறிவிட்டிர்கள் என்றால் செலுத்தப்படும் வட்டிக்கு ரூ .2 லட்சம் வரை வரி சலுகை.
வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் இந்த மேல் வரம்பு இல்லை. ஆனால் வீட்டு சொத்து (House Property) என்ற பிரிவின் கீழ் ஒட்டுமொத்த சலுகை ரூ.2 லட்சத்திற்கு மட்டுமே.
வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிந்த ஆண்டிலிருந்து இந்த விலக்கை நீங்கள் பெறலாம்.

2. இன்னும் கட்டுமானம் முடியவில்லை. ஆனால் வீட்டுக் கடனுக்காக வட்டி செலுத்தினால் சலுகை உண்டுமா?

சென்னையில் 2018–19ல் எதாவது அடுக்ககத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருந்தீர்கள் எனறால் அநேகமாக இன்னும் கட்டி முடித்து சாவியை கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் EMI களை செலுத்திக்கொண்டிருப்பீர்கள். இந்த விஷயத்தில் என்ன சலுகை?

இந்த மாதிரி செலுத்தும் வட்டி தொகைக்கு கட்டுமானத்திற்கு முந்தைய வட்டி (pre-construction interest) என்று பெயர்.
கட்டுமானம் முடிந்த ஆண்டிலிருந்து தொடங்கி ஐந்து சம தவணைகளில் இந்த வட்டிக்கு (அதிகபட்ச லிமிட் ரூ.2 லட்சத்துக்குள்) சலுகை பெறலாம்.

3. அசலை திருப்பிச் செலுத்தினால் என்ன வரி சலுகை?

ஈ.எம்.ஐ.யின் அசல் பகுதிக்கு பிரிவு 80 சி இன் கீழ் விலக்கு அளிக்கப் படுகிறது.
அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம் வரை.
ஆனால் 5 ஆண்டுகளுக்குள் வீட்டை விற்கக்கூடாது.
அப்படி விற்றால் முன் வருடங்களில் நீங்கள் பெற்ற வரி விலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டு அந்தந்த வருடங்களில் உங்கள் வருமானத்தில் மீண்டும் சேர்க்கப்படும்.

4. முத்திரை வரி, பதிவு கட்டணங்களுக்கான சலுகை

முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களுக்கான விலக்கு அதே 80 சி பிரிவின் கீழ் அதே ஒட்டுமொத்த வரம்பான ரூ .1.5 லட்சத்திற்குள் கோரிப்பெறலாம்.
இந்த வரிச்சலுகை முத்திரை வரி, பதிவு கட்டணங்களை கட்டிய ஆண்டில் மட்டுமே கோர முடியும்.

5. பிரிவு 80EEA இன் கீழ் கூடுதல் வரி சலுகை

இது ஒரு கூடுதல் சலுகை. இந்த மார்ச் 2020ல் முடிய வேண்டியது. கொரோனா சலுகையாக இதை நீட்டித்திருக்கிறார்கள்.
வீட்டின் மதிப்பு ரூ.45 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை தரப்படுகிறது.
முக்கியமாக கடன் வாங்கப்பட்ட தேதியில், உங்கள் பெயரில் வேறு எந்த வீடும் இருக்கக்கூடாது

6. தம்பதிகள் இணைந்து வாங்கிய வீட்டுக் கடனுக்கான சலுகை

தம்பதிகள் கருத்தொருமித்து இணைந்து இருவர் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் இருவருமே வீட்டுக் கடன் வட்டிக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலும், அசலுக்கு தலா ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். இது ஒரு சூப்பர் மேட்டர்.
இந்த சலுகையை பெற இருவரும் கடனில் எடுக்கப்பட்ட சொத்தின் இணை உரிமையாளர்களாகவும் (co-owners of the property ) இருக்க வேண்டும்.
தம்பதிகள் இருவர் பெயரில் இணைந்து வாங்கிய வீட்டுக் கடனுக்கு என்று ஒரு தனிச் சலுகையும் அரசு அறிவித்தால் இன்னும் நல்லது.

அப்பொழுதும் எண்பது வயதுகாரர்கள் பொக்கை வாயை மெல்லுவதற்கு பதில் இந்த அரசை மெல்லுவார்கள்......

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

சனி, 23 மே, 2020

கேள்வி : ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உறவு எவ்வளவு ஆழமானது மற்றும் அழகானது என கவித்துவமாக கூற முடியுமா?

என் பதில் :...கோவையில் பணியில் இருந்தபொழுது என் வாடிக்கையாளர் வருவது கொஞ்சம் தாமதம் ஆனதால் ..சாய்பாபகாலணி பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தேன் ....நானும் ஏதோச்சையாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தேன் ...


. வித்தியாசமாக தெரிய அவர்களை  ஊன்றி கவனித்தேன்.. .

அந்த பெண் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஜடை தைத்து போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்று போட்டோ எடுத்து, தன் கணவன் வீட்டுக்கு செல்ல பஸ ஏறுவதற்காக காத்திருக்க, பக்கத்தில் அறுபது வயது மதிக்க தக்க அந்த பெண்ணின் ஏழை தந்தை.

"எல்லாம் சரியா பைல மறக்காம எடுத்து வச்சிருக்கியமா"? என்று கேட்டு கொண்டிருக்க, அவர் முயன்றும் அடக்க முடியாமல் கண்ணீர் வழிய, ..

அந்த பெண் "எல்லாம் சரியா இருக்கும் பா, நீங்க உடம்ப பாத்துக்குங்க "

அந்த பெரியவர் தான் கண்ணாடியை , கழற்றி, கண்ணை மீண்டும் துடைத்து, வீட்டுக்கு போய் போன் பண்ணுமா? என்று சொல்லிக்கொண்டு தான் பையில் தேடி, மிச்சம் மீதி காசினை மகள் கையில் திணிக்க..

அவசர அவசரமா, "வீட்லதான் கொடுத்தீங்களேப்பா, அது இருக்கு "என்று மறைந்த தான் தாயின் உருவில் தன் அப்பாவை பார்க்க

இந்த முக்கியமான நேரத்தில் தன்னுடைய மனைவி இல்லையே என்று நினைத்து தந்தை கலங்க

தான் போய் விட்டால் தன் தந்தை ஒற்றை ஆளாய் என்ன படுபடுவாரோ என்று அந்த பெண் கண்ணீர் விட..

பஸ், பஸ் நிலையத்தில் நுழைந்தது, வயதான தந்தை, தான் முதுமையை பொருட்படுத்தாமல், அந்த பஸ்சில் முண்டியடித்து ஏறி, தன் பெண்ணுக்கு உட்காருவதற்கு சீட் பிடிக்க..

பஸ் நகர ஆரம்பித்தது "ஜாக்கிரதையா பாத்துகோமா ' என்று சொல்லிக்கொண்டே தந்தை பஸ் பின்னே ஒட.

தன் தந்தை ,பின்னே ஓடி வருவதை தலையை திருப்பி அடக்க முடியாத காண்ணீருடன், பெண் தன் கையை ஆட்டி விடை கொடுக்க..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, என் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை தடுக்க முடியவில்லை !

தந்தை ..மகள் ...பாசம் ..தாய் இல்லாமல் முதன்முறையாக பார்த்தது ..

நன்றி ...
கேள்வி :..காதல் தோல்வியில் கற்ற பாடங்கள் என்ன?

என் பதில் ..

உண்மையான காதல்ன்னு ஒன்னு சத்தியமா இந்த காலத்துல கிடையாது. வேணும்னா குமரிகண்டம் இருந்தப்ப இருந்திருக்கலாம். அது அழியும் போது இதுவும் கூடவே சேர்ந்து அழிஞ்சிட்டுன்னு நினைக்கிறேன்.

உங்கூட நூறு வருஷம் வாழனும், பயப்பட வேண்டாம்டி உன் புருஷன் நான் தான்டி இப்படியெல்லாம் டையலாக் பேசிக்கிட்டு வந்தா வேண்டாம்பா சாமின்னு ஓடிவந்துடுங்க.

அழகு, பணம் இதையெல்லாம் பார்த்து காதல் வராது. குணத்தை பார்த்து தான் காதல் வரும்னு சொல்றவங்களா நீங்க? செமையா அழப்போறீங்கன்னு அர்த்தம்.

காதல் ஒரு ரப்பர் பேன்ட் மாதிரி, காதலை யார் ரொம்ப பிடிச்சிருக்காங்களோ அவங்களுக்கு தான் வலி ரொம்ப அதிகமா இருக்கும். விட்டுட்டு போறவங்க அடுத்தவங்களுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க.

இந்த கால காதல் சூவிங்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் போக போக சுவையில்லாமல் போய்டும்.

காதல் தோல்வியில ஆண்கள் ஏமாறுறாங்க, பெண்கள் ஏமாறுறாங்கன்னு இல்லை. யார் உண்மையா காதலிச்சாங்களோ அவங்க தான் ஏமாறுறாங்க.
நம்ப கண்ணீருக்கு மதிப்பிருக்கு. நம்ப வேண்டாம்னு சொன்னவங்களுக்காக அதை வீணாக்க வேண்டாம்.

ஏமாத்துன அவங்களே சந்தோஷமா இருக்காங்க. உண்மையா இருந்த நீங்க ஏன் வருத்த படணும். போகட்டும் விடுங்க.

காதல் தோல்விக்கு பிறகு தான் தெரியும் நம்ம எவ்வளவு கண்மூடித்தனமா மத்தவங்களுக்காக வாழ்ந்திருக்கோம்னு. நாம முதலில் நமக்காக வாழனும்.

காதல் தோல்வி ஏற்ப்பட்டவங்க காதலை வெருக்காதீங்க. காதல் எப்பவும் அழகு தான். நீங்க காதலிச்ச நபர் காதலை அந்த கோணத்தில் காட்டிவிட்டார்.



நம்ப வாழ்க்கையில ஒரு சின்ன பகுதி தான் இந்த காதல். அதனால் ஏற்ப்பட்ட தோல்வி நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக்கிடவிட்டுட கூடாது.

ஏழு பில்லியன் மக்கள் இருக்காங்க இந்த உலகத்துல ஒருத்தவங்களுக்கு கூடவா உங்க மேல காதல் வராம போய்டும். சந்தோஷமா இருங்க.

நன்றி ..வாழ்கை வாழ்வதற்கே ....

கேள்வி :ஒரு ஆணாக, பிறரிடம் என்னை நான் எப்படி சிறந்த ஆளுமையாக காட்டுவது? பிறரால் சிறந்த ஆளுமை குணங்களாக கருதப்படுபவை எவை?


என் பதில் :..


ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்

ஆள் பாதி ஆடை பாதி - தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.

ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்

அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்

தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.

செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,

பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.

திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்

புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல் - பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.

நிறைய படிப்பார்கள் - இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.

சுறுசுறுப்பாக இருப்பார்கள் - இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்

அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும் - இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.

என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.

பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் - இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.


மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?

நன்றி ...

வியாழன், 21 மே, 2020

வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....

ஆம்! 

வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.

போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!

அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்! 

அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.

அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்! 

அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.

அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்! 

அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.

அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது. 

சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது. 

அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.

அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!

முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது. 

இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது. 

மேலும் பலவலுவான காரணங்கள் :  

அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு) 

அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. 

ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..

வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்! 

வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!

அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.

ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...

அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். 

அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..

பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....

சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.

அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும். 



இன்று, 22-05-2013...நான் இருக்கும் கோவை  நகரத்தில் உள்ள அனைத்து சிறுவர்பள்ளிக்கு மான ஓட்டப்போட்டி, சுமார் 2 km தூரம் ஓடிமுடிக்கவேண்டும். காலையிலையே எனது மகன் மிக ஆர்வத்துடன் barcelona football உடுப்புதான் போடணும் என்று அடம்பிடித்தும் சப்பாத்துகளில் jordan போட்டால்தான் காலுக்கு சௌகரியமாய் இருக்கும் என்றும் சொல்லி ஆயத்தமாகிப்போனான். அவன் தோற்றம் ஒரு வீரனுக்குரிய அம்சங்களுடன் நிறைந்திருந்தது எனக்கு இருப்புக்கொள்ளவில்லை, அவனுக்கு ஆச்சரியம் கொடுப்போமே என்றெண்ணி அவ்விடத்துக்கு நானும் போயிருந்தேன். அவனது வயதை ஒத்த 133 சிறுவர்கள் ஓடும் நேரமும் வந்தது. வரிசையில் நிற்கும்போது என்னை கண்டு கை அசைத்தான். துப்பாக்கியில் இருந்து ஒலி வரும் வரை அவன் நின்ற வேகம் காட்டிய ஆர்வம் எல்லாமே எனக்கு நம்பிக்கையை தந்தது. இதோ வெடி,, ஓடினான் ஓடினான் அவ்வளவு வேகம்,முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒரு கடினத்தன்மை,கைகள் இரண்டும் முன்னோக்கி தூக்கி கால்கள் அவன் இடுப்பு உயரத்துக்கும் மேலாக எழும்பி அவன் வேகம் எடுத்தது குதிரைப்பாய்ச்சல்தான். 1km ஓடிவரும் இடத்துக்கு அவனைவிட வேகமாக நான் ஓடிப்போய் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட 50 பிள்ளைகள் வரை வந்துவிட்டார்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணோம். பிள்ளை விழுந்துட்டானோ என எண்ணி பதறியபடி நான் நிற்க தூரத்தில் அவனுடன் 5 சிறுவர்கள் சேர்ந்த போல நடந்துவந்தார்கள். அவனது முகத்தில்லிருந்த கடினம், ஆர்வம்,வெற்றி நோக்கிய வெறி எல்லாம் வியர்வையுடன் வழிந்துவிட்டிருந்தது. காற்றாட நடந்து காலின் கீழ் கிடக்கும் கற்களை பந்துகளாக்கி ஐவரும் கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஷியாம்  ஓடு ஓடு என்று நான் கத்த,, அவன் என் அருகில் மிக நிதானமாய் வந்து பார்த்தீங்களா அப்பா முதல் அரைவாசி தூரம் நாங்கள் தான் முன்னுக்கு வந்தோம். இப்போ நாங்கள் களைத்துவிட்டோம் பின்னுக்கு வந்தவங்கள் ஓடுறாங்கள். அடுத்த முறை பின்னுக்கு ஓடிட்டு கடைசியில பிடிக்கணும் என்று அடுத்தவருட ஆசையை எனக்குள் விதைத்துவிட்டு ஓடினான். மொத்தமும் ஓடிமுடித்து வந்து இன்னுமொன்றும் சொன்னான், ''வெல்லுறது முக்கியமில்லை பங்குபெறுவதுதான் முக்கியம்'' என ஆசிரியர் சொன்னதாய். அவனை கட்டியணைத்து முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு வந்தேன்.

புதன், 20 மே, 2020


கேள்வி :..உங்களது திருமணத்திற்குப்பின் முதல் வாரத்தில் என்னென்ன நடந்தது.?

பதில் :..நான் எனது திருமண மலரும் நினைவுகள்  சொல்லி சொல்லி போர் அடித்திவிட்டது ...நமது சொந்தம்  ரஞ்சிதா கணினி பேராசிரியர் -ரெங்கநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம்,வத்தலகுண்டு ),  கணவர் கேரளா(இடுக்கி மாவட்டம் , புற்றடி).தனது மலரும் நினைவுகளை பதிவாக அனுப்பியிருந்தார் ...

முதல் நாள் : திருமணம் ஆகி மறுநாள் காலையில் நானும் என் கணவரும் அங்கு உள்ள கோவிலுக்கு செல்வதற்கு தயாராகி கொண்டு இருந்தோம். எனக்கு அங்கு இருப்பதற்க்கே மிகவும் புதுமையாக இருந்தது. ஜூன் மாதம் என்பதால் அப்பொழுது கேரளாவில் மழை காலம் என்பதால் எனக்கு ஊட்டியில் இருப்பது போல ஒரு அனுபவம் இருந்தது.

கோவிலுக்கு நானும் என் கணவரும் சென்றோம் ….. அப்பொழுது ஊரை நன்றாக சுற்றி பார்த்தேன் மிகவும் அழகாக இருந்தது. ரோட்டின் இரு புறமும் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடியாக இருந்தது. பின்பு கோவிலுக்கு அருகில் சென்றோம் வித்தியாசமாக இருந்தது.தமிழ்நாட்டில் இருப்பது போல் இல்லை அங்கு , சாமிக்கு சூடம் ஏற்றுவது மற்றும் திருநீறு கொடுப்பது எதுவும் இல்லை, எனக்கு எல்லாமே வித்தியாசமா இருந்தது , அதுமட்டும் இல்லாமல் எனக்கு மலையாளம் தெரியாது என்பதால் மிகவும் கடினமாக இருந்தது….அப்பொழுது நினைத்தேன் என்னடா இது இப்படி இருக்கே ஊரு, நாம எப்படி இருக்க போறோமோ மலையாளம் வேற பேச தெரியாதே எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

இரண்டாம் நாள் : இன்று காலையில் எழுந்த உடன் என் கணவரின் வீட்டை சுற்றி பார்க்க ஆசையாக இருந்தது. என் கணவர் எல்லாவற்றையும் சுற்றி காட்டினார்.. அவரின் வீட்டை சுற்றி, ஏலக்காய் தோட்டமாக இருந்தது. என் வாழ்க்கையிலே ஏலக்காய் செடியே நான் பார்த்ததே இல்லை. அன்று முதல் முதலாக பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. செம்பருத்தி செடியை வைத்து எல்லாம் ஏலக்காய் தோட்டத்திற்கும் வேலி வைத்து அடைத்து இருந்தனர். தமிழ்நாட்டில் வீட்டில் செம்பருத்தி செடி இருந்தாலே ஆச்சரியமாக இருக்கும் ஆனால் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடிகளும் அதன் பூக்களும் கண்ணில் தென்பட்டது.


அன்று மாலையில் அங்கு உள்ள ஒரு நீர்விழ்ச்சி காண சென்று இருந்தோம்,அந்த இடத்தின் பெயர் அருவிக்குழி. அந்த இடத்தை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை, அவ்வளவு பிடித்து இருந்தது எனக்கு. மிகப்பெரிய பாறை ஒன்று இருந்தது , அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் தமிழ்நாடு தெரிந்தது…. குறிப்பாக சொன்னால் தேனி மாவட்டம் கம்பம் பகுதி நன்றாக தெரிந்தது.

மூன்றாம் நாள் : திருமணம் ஆகி மூன்றாம் நாளான இன்று நாங்கள் மறுவீட்டிற்கு செல்ல வேண்டும். அன்று காலை உணவு, எனது அத்தை இட்லி, வடை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, என்று அசத்திவிட்டார் . எல்லாம் சாப்பிட்டு விட்டு நாங்கள் அனைவரும் மறுவீட்டிற்கு (என் வீட்டிற்கு) சென்றோம். மாலை நேரம் ஒரு 6 மணி இருக்கும் வேளையில் எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 5 நாட்கள் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள். எனது ஊரு கொஞ்சம் கிராமம் என்பதால் என் கணவருக்கு அங்கு இருப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது.

நான்காம் நாள் : என் ஊரில் நிறைய கோவில்கள்இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் என் அம்மா என்னிடம் குளித்துவிட்டு நீயும் உன் கணவரும் நம் ஊரில் உள்ள எல்லா கோவிலுக்கும் போய்விட்டு வாருங்கள் என்று சொன்னார்.

என் கணவருக்கோ கடவுள் நம்பிக்கை என்பது கொஞ்சம் கம்மிதான் , இருந்தாலும் கல்யாணம் நடந்த மூன்று நாட்கள் தான் ஆகி இருக்கிறது இப்பவே எப்படி நான் வரவில்லை என்று சொல்ல முடியும் என்பதற்காக என்னுடன் வந்தார். நாங்கள் இருவரும் பைக்கில் சென்றோம் ….முதல் முதலாக என் கணவருடன் பைக்கில் சென்ற அனுபவம் அதை மறக்கவே முடியாது.

அன்று மாலையில் சென்னையில் இருக்கும் எனது சித்தி தொலைபேசியில் அழைத்து இருந்தார். என்னையும் என் கணவரையும் விருந்துக்கு சென்னைக்கு வாருங்கள் என்று சொன்னார். என் கணவர் நல்லது என்று நினைத்து கொண்டு அன்று இரவே நானும் என் கணவர் , என் தங்கை நங்கள் மூன்று பேரும் சென்னைக்கு சென்றோம்.

ஐந்தாம் நாள் : சென்னை வந்து சேர்த்தோம் … அன்று ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுத்து விட்டு, மாலையில் சித்தி , சித்தப்பா , சித்தி பசங்க இரண்டு பேரும் , நாங்கள் மூன்று பெரும் சேர்ந்து அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்றோம்…மாலை நேரத்தில் சென்று இருந்ததால் கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது.

நானும் என் கணவர் மட்டும் தனியாக சென்று இருவரும் கைகளை பிடித்து நடந்து கொண்டு சுற்று கொண்டு இருந்தோம்.

பிறகு அலைகளை பார்த்தபடி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம். இருவருக்கும் மனம் விட்டு பேசுவதற்கு சரியான இடமாக இருந்தது .அலைகளை பார்த்து ரசித்துக்கொண்டே நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தோம் , நேரம் போனதே தெரியவில்லை. பின்பு ஹோட்டலுக்கு அனைவரும் சேர்த்து சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம்.

ஆறாம் நாள் : இன்று என் சித்தி எங்கள் இருவருக்கு விருந்து சாப்பாடு செய்து இருந்தார்.மட்டன் , சிக்கன் , முட்டை , நாங்கள் இருவரும் நன்றாக சாப்பிட்டோம், பிறகு எங்களுக்கு புதிதாக ஆடை எடுத்து கொடுத்தார்கள் . சிறிது நேரம் ஆனதும் என் வீட்டில் இருந்து போன் வந்தது. என் அப்பா என் கணவரிடம் பேசினார். நாளை மறுவீடு முடிந்து உங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். நீங்கள் இருவரும் இன்று இரவு கிளம்பி வாருங்கள் என்று சொன்னார். இரவு கிளம்பினால் நம் வீட்டிற்கு போவதற்கு காலை ஆகிவிடும் , அதனால் இப்பொழுதே கிளம்ப முடிவு செய்து நாங்கள் மூன்று பேரும் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டோம்.

ஏழாம் நாள் : அன்று காலையில் 8 மணிக்கு மேலே கிளம்ப ஆரபித்தோம். எல்லோரும் முகத்திலும் ஒரே கவலை. எனக்கோ கிளம்புவதற்கு மனமே இல்லை. என்ன செய்வது போய்த்தான் ஆக வேண்டும் , எல்லோரும் கிளம்பி என் கணவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு என் அத்தை சம்மந்த வீட்டுக்காரர்கள் வருகிறார்கள் என்று தடபுடலாக சமையல் செய்து வைத்து இருந்தார்.எனக்கோ என்னை இங்கு விட்டு செல்ல போகிறார்கள் என்று கவலை ஒருபக்கம் வந்து வந்து போனது.

என் அம்மா தனியாக அழைத்து என்னிடம் பேசினார் ,,,,என்னை அறியாமல் அழுது விட்டேன் , என் அம்மா என தங்கை அனைவரும் என்னை கட்டி பிடித்துக்கொண்டு அழுதனர். பின்பு எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு நாங்கள் அடிக்கடி உன்னை பார்க்க வருவோம், சந்தோசமாக இருக்கணும், பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், பார்த்து பத்திரமாக இரு, அழக்கூடாது எதுவாக இருந்தாலும் போன் பண்ணி எங்களிடம் சொல்லு. அங்கு நாங்கள் எப்படியோ அதே போல தன இங்கு உன் அத்தையும் மாமாவும் அதனால் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அனைவரும் சந்தோசாக ஊருக்கு சென்று விட்டார்கள்.....இன்று நினைத்தாலும் பசுமையான அருமையான மலரும் நினைவுகள் ...வாழ்த்துக்கள்  தோழி ..தோழருக்கு ..

நன்றி ..

திங்கள், 18 மே, 2020

கேள்வி : ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் சுத்தம் செய்துகொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?


என் பதில் :அருமையான கேள்வி ..நான் சொல்வதை விட பல் மருத்துவரிடம் கேட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் ...எங்கள் அக்கா மகள் Dr .சொர்ணமாலா முருகராஜ் -திருப்பூர் ..அவர்கள் கொடுத்த பதில் ..நீங்கள் தெரிந்துகொள்வதற்காக ...

முதலில், தற்போது கிடைக்கும் உணவுகள் எல்லாம் கடிக்க மெதுவாக இருப்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பயங்கரமாக கடித்து சாப்பிட இங்கே தற்போது ஒன்றும் இல்லை. உடலை மட்டும் இல்லை, வாயை கூட சோம்பேறி ஆக்கி வைத்திருக்கு இந்த சமூகம்.

நீங்கள் எப்படி பல் துலக்கினாலும், floss செய்தாலும், பல்லில் உணவு துணுக்குகள், பிரியாணியில் உள்ள மட்டன் பீஸ் போல பல்லில் ஒட்டிக்கொள்ளும். அதை எடுக்க ஊக்கு தேடி பாதி உசிர் போய்விடும். உணவில் உள்ள சர்க்கரை ( even carbohydrates) உங்கள் பல்லை பதம் பார்த்து விடும். இதனால் தான் சாப்பிட்ட பின் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்து துப்ப சொல்கிறார்கள். இப்படி செய்தே திருடனை பாரதியார் விரட்டியதை மறக்க வேண்டாம்.

6 மாதம் ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பிக்கும் பொழுது அவர் பல்லில் சொத்தை ஏதும் இருக்கிறதா, இல்லை வேறு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்த்து கூறிவிடுவார். அது இல்லாமல் சில நேரம் தேனீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு மஞ்சள் காரை வாயினுள் அதிகமாக படிந்துவிடும் அதை மருத்துவரிடம் சுத்தம் செய்யலாம்.

ஒரு 200 ரூபாய் பல் மருத்துவரிடம் கொடுத்தால் நம் குடி முழுகிப் போய்விடாது. இதற்கும் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் முக்கியமான செலவு அது. விஜய் படம் அஜித் படம் வந்தால் 300 ரூபாய் செலவு செய்து பார்க்கத் தூண்டுகிறது, இதற்கு செலவு செய்ய என்ன குறை? வெளிநாடுகளில் பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

மற்ற படி, உங்களது பல்லை, ஈறுகளை நன்றாக வைத்திருக்க, oil pulling செய்யலாம். நல்லெண்ணெய் என்ன விலை விக்கிறது என்று நினைக்க வேண்டாம். தேங்கா எண்ணெயிலும் பண்ணலாம்.ஆனால் கடையில் கிடைக்கும் refined oil வேண்டாம். அது வெறும் சூப்பி போட்ட பணங்கோட்டை போன்றது. செக்கு எண்ணெய் சிறப்பு.

எப்படி செய்வது?

10 - 15ml எடுத்து, காலை எழுந்த உடன் ஒரு 10 நிமிடமாவது கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் வலிக்கும். அப்புறம்? அதுவே பழகிடும்.

என்ன பலன் ?

இயற்கையான முறையில் உங்கள் பல் பாதுகாக்கப்படும். பல் ஈறு, சொத்தை, பல் வலி வராது. ரூட் கேணல் செய்யவேண்டிய அவசியம் வராது. சிரித்தமுகத்தோடு ஸ்ரீநித்யா (Shrinithyaa Gopalan) @ மாதிரி பின்னி எடுக்கலாம். ..

நன்றி ...

ஞாயிறு, 17 மே, 2020

பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....
உடுமலை: பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக்
காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க
இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாற்றின் குறுக்கேயும், தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருமூர்த்திமலை பகுதியில், ஜல்லிபட்டி பழனிச்சாமி, அருட்செல்வன், , சிவக்குமார் உட்பட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மொடக்குப்பட்டி ரோட்டில், பாலாற்றின் கரையில் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. அருகில், தளி பாளையக்காரர் சிலையுடன், பாறையில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில், அணை கட்டப்பட்ட ஆண்டு, மறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் தளி பாளையக்காரர் எர்ரமநாயக்கர் என்பவரால், அணை கட்டப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பணை போன்ற இந்த அணை சுவர்கள் இடிந்து ஓடையில் கிடக்கின்றன.
ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'தளி பாளையக்காரர் காலத்தில், பல்வேறு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, திருமூர்த்தி அணையின் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ள பாலாற்றின் கரையிலுள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. சிலை காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. அப்பகுதி எர்ரம நாயக்கரின் பெயரால், ஏராம் வயல் என அழைக்கப்படுகிறது. அங்குள்ள சிலைக்கு குறிப்பிட்ட நாட்களில், மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் நீர் பாசன முறைகள் சிறப்புற்றிருந்தது
முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது.
கொரோனா என்பது நோய் அல்ல..! 

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. 

தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மாறியது.  வசதிகள் கூடியது.  ஏழை, பணக்காரன் என்ற இரண்டு அடுக்கு மாறியது. நடுத்தரவர்க்கத்தின் எண்ணிக்கை அதிகமானது. கூடவே  உயர் நடுத்தரவர்க்கம் என்ற புதிய வர்க்கம் உருவானது.

கம்யூனிஸ்ட் கொள்கைகள் செல்லக்காசாக மாறியது. பணமே பிரதானம். செல்வமே கடவுள் புதிய கொள்கை உருவானது.

காண்பதெல்லாம் வாங்கு. பார்ப்பதெல்லாம் அனுபவிக்க என்ற தத்துவம் தமிழர்களை வழிநடத்தத் தொடங்கியது.

நுகர்வோருக்கு தரம் தேவையில்லை. விளம்பரங்கள் போதும் என்ற எண்ணம் தான் விற்பனையை வளர்த்தது. கடன் வாங்குவது தவறில்லை என்ற கொள்கையும்  இயல்பானது.

சுதந்திரம் முக்கியம் என்றார்கள். கூட்டுக்குடித்தனம் தவறு என்றார்கள். அவரவர் பாதைகள் வேறு. பயணம் வேறு. எண்ணங்கள் வேறு. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றார்கள். சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்  என்று வந்தவர் போனவர் அனைவரும் அறிவுரை சொன்னார்கள்.

ஆனால்.......... நம்புவார்களா? மாட்டார்களா? என்று தெரியாது. 

ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமான உண்மைகள். எல்லாவற்றையும் கொரனா உருவாக்கியது. அதுவே உறுதிப்படுத்தியது. இப்போது நாம் கொரானா கால நினைவுகள் குறித்துப் பேசப் போகின்றோம்.

“இப்படியான ஒரு காலத்தை நாங்கள் கடந்து வந்தோம்” என்று இன்னும் 25 வருடங்கள் கழித்து நம் தலைமுறைகளிடம் சொன்னால் என்ன பதில் வரும்?

கொரனா காலம் என்பதனைப் பற்றியோ கோவிட் 19 உருவாக்கிய தாக்கத்தையே அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதே குழப்பமாக உள்ளது.

சீனா தான் காரணம் என்பதும், வூகான் மாநிலத்தில் உருவான வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தியது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்குமா?

வீட்டுக்குள் இருந்து உயிர் பிழைத்தோம். தனித்து இருந்து தப்பித்தோம். என்று சொன்னால் எதிர்கால மருத்துவ உலகம் சிரிக்காதா?

இயற்கையில் உருவானதா? செயற்கை சமாச்சாரமா? என்ற ஆராய்ச்சி முடிவே ஆறு மாதங்கள் ஆகியும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இன்னமும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர். மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் நிலை குலைந்து போய் விட்டது.

மானிட இயக்க விதிகள் மாறிப் போனது. மகா பெரிய கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தை இழந்தார்கள். அளவாக செல்வம் உடையவர்கள் உணவு இல்லாதவர்களுக்கு வழங்கினார்கள்.

அரசு ஊழியர்கள் அன்போடு பணிபுரிந்தார்கள். சாலைகள் சந்துகள் வீடுகள் எங்கும் கிருமி நாசினியை முதல் முறையாக பீய்ச்சியடிக்கப்பட்டது. நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் நகரும் சாலைகள் அனைத்தும் வெறிச் சோடியது. முக்கிய நகர்ப்புற சாலைகளில் கூட விலங்குகள்  பயமின்றி பயணித்தது. புகையின்றி காற்றைச் சுகமாகச் சுவாசித்தது. மனிதர்களுக்கு பயணமே இல்லாத வாழ்க்கையானது.

தமிழக அரசு   மருத்துவமனைகள்  கோவிலாக மாறியது. மருத்துவர்களும், சுகதாரப் பணியாளர்களும் கடவுளாக மாறினார்கள். 
செலவில்லாத சுகப் பிரசவம் அதிகமானது. 
கொரானா நோயை நெஞ்சக நோய் என்று தமிழில் அழைத்தார்கள். 
நோயாளிகளுக்கு பாசத்துடன் உணவு வழங்கினார்கள்.
‘கபசுர குடிநீர்’ கண்கண்ட கடவுளாக வந்து சேர்ந்தது.
எல்லாமே அரசு செலவு. 
தனியார் மருத்துவமனைகள் தடுமாறி இயக்கமற்று கிடந்தார்கள்.

உலகில் டாலர் முதல் பணம் வரைக்கும் செல்லாக்காசானது வல்லரசு நாடுகள் தடுமாறியது. வசதியிருந்தவர்களும் அரசு மருத்துவமனைகளில் தான் அடைக்கலாம் ஆக வேண்டியிருந்தது.

இங்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாமல் எதைத்தான் செய்ய வேண்டும் என்பதனையும் அறியாமல் குழம்பிக் கிடந்த போது கொரானா கற்றுக் கொடுத்த பாடங்கள் ஒன்றா இரண்டா?

2020 ல் ஒரு அலைபேசி தான் உலகம். ஒவ்வொருவரும் ஒரு உலகத்தை வைத்திருக்கின்றனர்.  கண்டம் கடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் காட்சியாக வந்து நம் அலைபேசியில் விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பது என்னவொரு விந்தை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின்னால் நவீனத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இன்னமும் உச்சத்தில் இருக்கும். அப்போது கொரனா நினைவுகள் குறித்து அறியப் பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்தால் எப்படி உணர்வார்கள்?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பஞ்சங்கள் பசியைக் கொண்டு வந்தது. பசி வறுமையைக் கொண்டு வந்தது. வறுமை கொத்துக் கொத்தாக மக்களைச் சாக வைத்தது. ஆனால் இன்று? பஞ்சம், பசி, பட்டினி எல்லாமே வெறும் வார்த்தையாக மாறியுள்ளது. ஒப்பீட்டளவில் மனிதர்களின் வறுமை என்ற எல்லைக்கோட்டைக் கடந்து வந்துள்ளான். முயற்சிக்கின்றான். வாய்ப்பும் உள்ளது. வசதிகளும் இழுத்துச் செல்கின்றது. ஆசைகள் இழுத்துச் செல்கின்றது.

தற்போது மனிதர்களுக்கு எதுவும் அனுபவிக்கக் கூடியது என்ற எண்ணத்தால் ஒவ்வொரு நாடும் சந்தையாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் நுகர்வோராகவே உள்ளான்.

இதன் காரணமாகக் கோரானா உருவாக்கிய ஒழுக்க விதிகளைப் பின்பற்ற முடியாமல் சாலைக்கு வரும் போது காவல்துறையிடம் சிக்கி உக்கி போடுகின்றார்கள். கும்மி தட்டுகின்றார்கள். கடைசியாகக் கதறி மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு ஓடுகின்றார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இங்கு வந்த பஞ்சங்கள் அனைத்தும் வெறுமனே கும்மிப்பாடல்களாக, ஒழுங்கற்ற கோர்வையற்ற செய்திகளாகவே உள்ளது.  முழுமையாக எங்கும் எவரும் ஆவணப்படுத்தப்படவே இல்லை.  அதன் தாக்கத்தை இன்று வரையிலும் எவரும் உணர வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொரானா காலமென்பது காணொளிக்காட்சியாக உள்ளது. எழுத்து வடிவில் உள்ளது. இதற்கு மேலாக சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் எழுதிய அவரவர் அனுபவங்கள் சார்ந்த ஆவணமாகவும் உள்ளது. 

ஒரு தகவல் உண்மையா என்பதற்கு எதிர்காலத்தில் சோதித்துப் பார்க்கப் பலரின் எழுத்துக்கள் ஆவணமாக இருக்கிறது என்பதே தற்போதைய கொரானா காலத்தின் ஒரே சிறப்பு.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பல எல்லைக்கோடுகள் உண்டு. மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல பிரிவினைகளையும் உடைத்துச் சுக்குநூறாகி அதெல்லாம் இருக்கட்டும். நீ முதலில் வீட்டுக்குள் போய் உட்கார். நான் சொல்லும் வரைக்கும் வெளியே வராதே என்று 2020 என்று ஒவ்வொருவரையும் மாற்றும் என்று எந்த ஜோசியராவது 2020 புத்தாண்டு பலனில் சொன்னார்களா?

இப்படியான ஒரு வாழ்க்கை முதல் ஆறு மாதங்களில் நாம் வாழ வேண்டியிருக்கும் என்று எவரும் நினைத்திருக்கவே மாட்டார்கள்.  பரம ஏழை முதல் பகாசூர பணக்காரர்கள் வரைக்கும் வரை,  கிராமம் முதல் நகரம் வரை. சென்னை முதல் நியூயார்க் வரை.  மெல்பேர்ன் முதல் வான்கூவர் வரைக்கும் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் கண்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்களை, வயது வித்தியாசமின்றி, பொருளாதார உயர்வு தாழ்வின்றி அனைவரும் இப்போது ஒரே மாதிரியான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும்.  என்ன வசதிகள் இருந்தாலும் வீட்டுக்குள் மட்டும் தான் இருந்தாக வேண்டும் என்று சிறிய கிருமி மிரட்டிவிட்டதே?

மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் கடந்த 50 நாளில் ஒன்று சேர்ந்து அன்பு ஆறாக ஓடியுள்ளது.  அதன் விளைவு அடுத்த வருடம் பல கோடி புதிய ஜீவன்கள் இந்தப் பூமிக்கு வரப் போகின்றார்கள் என்று எச்சரிக்கின்றார்கள்.

குழந்தைகளைக் கவனிக்காமல், மனைவியுடன் பேச நேரம் இல்லாமல் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருந்த விரைவு வாழ்க்கையை கொரானா மாற்றியுள்ளது.   கிமு, கிபி என்பது போல  இனி கொமு கொபி என்பதாக மாறியுள்ளது. அதாவது கொரானாவிற்கு முன், கொரானாவிற்கு பின் என்பதாக இனி வரும் காலம் மாறப் போகின்றது. கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாகப் பார்த்து உத்தேசமாகப் படம் வரைந்து பாகம் குறித்துள்ள நவீன விஞ்ஞானம் நமக்கு உணர்த்தியதை விடச் சமூக விஞ்ஞானத்தில் நடந்துள்ள மாற்றங்கள் அபாரமானது.

வீட்டைச்சுற்றியுள்ள இயற்கை குறித்து அக்கறை வந்துள்ளது.

பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் அசிங்கமல்ல என்ற எண்ணம் உருவாகியுள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு நாட்டுக்குத் தேவை என்பதனையும் உணர்த்தியுள்ளது.

உணவு கலாச்சாரம் மாறியுள்ளது.

பீகார் அருகே உள்ள கிராமத்திலிருந்து இமயமலையின் முடுகளைப் பார்க்கும் அளவிற்கு இடையே உள்ள 180 கிலோ மீட்டர் வானவெளியும் படு சுத்தமாக மாறியுள்ளது.

பல நூறு வருடங்கள் பல மனிதர்கள் சாதிக்க முடியாமல் அழுக்காக அசிங்கமாக இருந்த கங்கை நதியின் நீர் இப்போது இளநீர் போல மாறியுள்ளது.

கொரனா வருவதற்கு முன்பே டெல்லி மக்கள் முகமூடி போட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது டெல்லி காற்றின் மாசு நம்ப முடியாத அளவிற்கு முழுமையாக குறைந்துள்ளது. இலவசமாகத் தருகிறேன். என்னிடம் உள்ள கச்சா எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போ என்று இப்போது நடக்கும் கூத்தை எதிர்காலத்தில் சொன்னால் யாராவது நம்புவார்களா?

கொரனா என்பது நோயல்ல.
பூமிப் பந்தை சுத்தப்படுத்த வந்த தேவதை.

தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு வழிகாட்ட வந்த மாபெரும் சக்தி.




வெள்ளி, 15 மே, 2020

கேள்வி :1...எப்போதும் பாசிட்டிவாக இருப்பது எப்படி?

கேள்வி :2...எப்போதும் பாசிட்டிவ் ஆக இருந்து என்ன பயன்?

என் பதில் :...



நம் தனிப்பட்ட வாழ்விலும் உலகப்பொது விஷயங்களிலும் யாதொரு நெகடிவ் விஷயமே இல்லை என்ற நிலை வருமாயின் நாமெல்லாம் எப்படி நடந்துகொள்வோம்? யோசித்து பதில் சொல்லுங்களேன்!


கம்பி மேல் நடக்கும் வீதி வித்தைக்காரர் கையில் ஒரு நீளமான கோலை வைத்துக்கொண்டு நடப்பார். கவனித்ததுண்டா?


நம் அணுகுமுறை என்ற அந்த கோலின் ஒரு முனை நேர்மறை. இன்னோர் முனை எதிர்மறை. நாம் நடுநிலைமையை பிடித்துக்கொண்டு தான் வாழ்க்கை என்ற கயிறை கடக்க முடியும். பாசிட்டிவ் பக்கமே சாய்ந்து கொண்டிருந்தாலும் விழத்தான் செய்வோம்.


எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க கடவுளால் கூட முடியாது. முதல்நாள் பட்டாபிஷேகம் என்ற உறுதிமொழி வந்த போதும் மறுநாள் வனவாசம் என்ற கட்டாயம் வந்த போதும் சலனமே காட்டாமல் சமன்பட்ட ஒரு மனநிலையும் முகக்குறிப்பும் காட்டிய இறைவன் தான் காட்டில் மனைவியை பிரிந்து புலம்பும் பொது உன்மத்தம் பிடித்த நிலைக்கு போகிறார்!


இரு முனைகளும் அவசியம்; இடைப்பட்ட நிலையை பற்றிக்கொள்ளுதலும் அவசியம். அவ்வப்போது சாய்ந்து மீள்வதும் அவசியம்!

நன்றி...பாஸிட்டிவ் எனர்ஜி ....வாழ்க்கைக்கும் ...வேலைவாய்ப்புக்கும் ...

வியாழன், 14 மே, 2020

இது இப்போ அதிக குழந்தைகளும் சொல்லும் ஒரு மாதிரி உரையாடல் ..
நான் ஏழரைக்கு எழுந்திருப்பேன் . ..எட்டு மணிக்கு ஸ்கூல் போவேன்... அம்மா தான் வேன்லே ஏற்றி விடுவா ... தாத்தா கூட்டிட்டு வருவார் வேன் நிக்கிற இடத்திலேந்து.... அதுக்கப்புறம் .. பாட்டு, டேன்ஸ், டிராயிங், கீபோர்ட் க்ளாஸ்க்கு பாட்டி இல்லைன்னா தாத்தா கொண்டு போய் விடுவாங்க ... திரும்ப வீட்டுக்கு போய்ட்டு ஹோம்வர்க் செய்வேன்... டிவி சீரியல் பார்ப்பேன் பாட்டிகூட .... அப்புறம் தூங்கிடுவேன் .... (நான் பேசிய ஐந்து குழந்தைகளில் நால்வர் இதைத் தான் சொல்கின்றனர் .. சிறு சிறு மாறுதல்கள் மட்டும் )
"அம்மா எப்போ வருவாங்க.?."
"தெரியாது.... நான் தூங்கிடுவேன்... அவங்க வரதுக்குள்ளே"
"காலையிலே எப்போ போவாங்க அம்மா?"
"தெரியாது.... சாப்பாடு சாப்பிட்டுட்டு தான் போவாங்க.."
" அப்பா .. எப்போ போவாரு ?"
" அவரு நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாலேயே போய்டுவாரு"
" சாயந்திரம் எப்போ வருவாரு?"
"தெரிலே ... நான் தூங்கிடுவேன் "
" சண்டே அன்னைக்கு என்ன பண்ணுவீங்க "
"சொந்தக்காரங்க வீட்டுக்கு போவோம் .. இல்லேண்ணா ஏதாவது பங்க்ஷன் போவோம்... "
இதிலே குழந்தைக்கு நல்லது .. கெட்டது சொல்லிக் கொடுக்க பெற்றோர்களுக்கு நேரமெங்கே .........???
பெற்றோர் வளர்ப்பதில்லை .. குழந்தைகளே வளர்றாங்க அப்படின்னு சொல்லிடுவோம் இனிமே ...!!!
பாளையக்காரர்கள் ஜமீனாக இருந்த காலத்தில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை கொடுத்தனர் என்பதை விளக்கும், கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

நெகமம் அடுத்த சின்ன நெகமம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீசெல்வ சென்ராயப் பெருமாள் கோவில். இக்கோவில் தெற்குப்புறமுள்ள சுவரில் இருந்த கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த நிலையில், புதிதாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்குப்புற சுவரில் இருக்கும் கல்வெட்டை, கோவையை சேர்ந்த கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கண்டறிந்துள்ளார்.அவர் கூறியதாவது:கோவில் அர்த்த மண்டபத்தில், சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த சுவற்றில் கல்வெட்டு காணப்பட்டது. சுண்ணாம்பு பகுதியை சுத்தம் செய்து பார்த்தபோது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. அதில், 'உசர்வாரி வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி பெரிய நெகமத்தில் இருக்கும், காணியாளருடைய சேரக்குல வம்சத்தில் குமாரசாமி பிள்ளையின் புத்திரர்களில் பூமி நாத பிள்ளை என்கிறவர், நெகமம் பாளையக்காரராகிய முத்து வல்ல கெண்டம தேவய நாயக்கருடைய எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம்.சின்ன நெகமம் ஸ்ரீசென்ராயப் பெருமாளுக்கு அஷ்த்தகிரி கருங்கல், கற்பகிரி மகா மண்டபம், துளசி மண்டபம், தீர்த்த கிணறு, கல்கருட கம்பம், பொங்கு மடப்பள்ளி, துாங்கு மஞ்சத்தொட்டி, நகரை சுத்தி மதில் எழுப்பியதில் அடங்கலான வேலைகளையும், மேற்படி எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம் வேலைகள் முடித்து வைத்த கொடை உபயம்,' என கல்வெட்டு செய்தியாக உள்ளது. கல்வெட்டையும், அதில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், கல்வெட்டு காலம் கி.பி., 1840ம் ஆண்டு என தெரிகிறது.

மேலும், ஆவணி மாதம் என குறிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த கோவில் சிதிலமடைந்த காரணத்தால், கோவில் புனரமைக்கும் பணி, 1840ல் நடந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில், பாளையக்காரர்கள் ஜமீன்தார் முறையில் வாழ்ந்துள்ளனர். அப்போது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் தனது அதிகாரத்தை செலுத்தியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக, இக்கல்வெட்டு குறிப்பு விளக்குகிறது

நன்றி : தினமலர் ..செந்தில்ராம் ....ஜூலை 28....2019....
Raja Pandian📚📚✍️✍️✍️

செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.

கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1 கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம்” எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு-மூன்று பகுதிகளாக

2 நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

3 முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர் (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

4 வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.

5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1. பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
2 அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்
3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.

6 கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
· கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
· இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
· கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் ”பிளாக் பர்ன்” (Black Burn) மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
· சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 📚📚📚✍️✍️✍️✍️