கேள்வி : சொந்தமாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உங்களின் முக்கியமான ஆலோசனை என்ன?
என் பதில் :
நாம் செய்யும் தொழிலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா என்று நம் போட்டியாளர்கள் செயல்பாட்டை வைத்து முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் போட்டியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி நீங்கள் ஏகபோகமாக(monoploy) மாற வேண்டும்.
நமது போட்டியாளர்களின் இருப்பு, நமது வணிக யோசனையை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அது விலையில் போட்டியை ஏற்படுத்துகிறது. விலையில் போட்டி என்பது மிக மோசமான ஒரு போட்டியாகும். அதை தவிர்ப்பதற்கான யுக்தி உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும்.
நம் போட்டியாளர்கள் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றல் அவர்கள் நம்மை தொழிலிருந்து வெளியேற்றும் வரை ஓய மாட்டார்கள். நம் போட்டியாளர் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் நம்மை போட்டியாளர்களாக எண்ணாதவர்களாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு குறிப்பிட்ட சந்தையை அல்லது மக்களை மட்டும் குறி வைக்க வேண்டும். அதில் எல்லோரையும் விட சிறப்பாக செயல்பட வேண்டும். பெரிதாக வளர்ந்தவுடன் பன்முக சந்தையை குறி வைக்கலாம். (எ.கா - அமேசான், பேஸ்புக்)
முதலில் நம் தயாரிப்பை வெளிக்கொணர்ந்து பயனர்களின் கருத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் தொழில் ஆராய்ச்சி செய்ததிலிருந்து நம் பொருளிற்கு தேவை இருக்குமென நாமே எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் பொருள் சந்தைக்கு வந்த பின்னர் நாம் எதிர் பார்த்த அளவு தேவை இல்லாமல் போகக்கூடும். எனவே முதலில் சிறிய சோதனை செய்து கொள்வது நன்று.
வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. எனவே அவர்களின் கருத்துக்களை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிலிருந்து நம் தொழிலை முன்னேற்ற பல யோசனைகள் கிடைக்கும். (எ.கா - அமேசான்).
மிகவும் தெளிவாக கணக்குகளை வைத்துக்கொள்ளவும். மிகவும் எளிதாக ஒரு எக்செல் ஷீட்டில் கொள்முதல் மற்றும் விற்பனை என இரண்டு பக்கங்களை ஆரம்பித்து உங்களது அனைத்து கொள்முதல் மற்றும் விற்பனையையும் அந்தந்த பக்கங்களில் அன்றைய நாள் முடிவதற்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முடிந்த வரை ஒற்றை புள்ளி தோல்வி சாத்தியத்தை குறைத்துக்கொள்ளவும். உங்களிடம் மூன்று பெரிய வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளார்கள் என்றால் ஒரு வாடிக்கையாளர் நம்மை கைவிடுவது கூட நம் வணிகத்தில் குறிப்பிடத்தக்க பெரிய ஓட்டையை உண்டாக்கி விடும். அதே போல உங்களிடம் ஒரே இயந்திரம் தான் உள்ளது அது பழுதாகி விட்டால் அதற்கு ஈடு கட்ட வழியில்லையென்றால் அது நம் உற்பத்தியை பாதித்து விடும்.
குறைந்தபட்சத்தை விரும்புபவராக மாறுங்கள். 80% மதிப்பைக் கொண்டு வரும் 20% விடயங்களில் உங்களது நேரத்தை செலவழியுங்கள். வேலை செய்யுமிடத்திற்கோ அல்லது தயாரிப்பு இடத்திற்கோ அதிகம் செலவு செய்யாதீர்கள்.
ஒரு தயாரிப்பு நிறுவனமெனில் ஆரம்பத்திலே விலையுர்ந்த உபகரணங்களை வாங்குவதற்கு பதில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுங்கள். நீங்கள் நினைக்கும் பொருளை அவர்களால் தயாரிக்க முடிந்தால் அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (எ.கா - பிரிட்டானியா, நெஸ்லே, காட்பரி )
இந்த வழியில், நாம் நமது முதலை பிராண்டிங், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகத்தில் சற்று அதிகமாக பயன்படுத்த முடியும். இதில் நம் தயாரிப்பு வெற்றி அடைந்த பின்னர் சொந்த உற்பத்தி வசதியை பற்றி சிந்திக்கலாம்.
நன்றி ..வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக