வியாழன், 30 ஜூலை, 2020

கேள்வி : மாறி வரும் சூழ்நிலையில் வேலை இழப்போரின் விகிதம் அதிகரித்து வருகிறது. அவர்கள் சொந்த காலில் நிற்க வழி இருக்கிறதா? சுய சார்பு கலாச்சாரம் போல சுய தொழில் முயற்சி செய்யலாமா?

என் பதில் :..

பதில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். முடியும் என்று. மாஸ்க் கூட விற்கலாம்.ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் மாஸ்க் யார் வாங்குவது?. அதே போலத்தான் விவசாயமும் கையில் பணம் இல்லை. இருக்கின்றவர்களாலேயே தாக்குபிடிக்க முடியவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கம் தான் பணப்புழக்கம் தை அதிகரிக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டை வைத்து எல்லோருக்கும் 50,000/- கடன் தருவதாக சொன்னார்கள். இப்பொழுது கேள்வி கேட்டால் பழையதாக கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி மில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதுவும் அவர்களாக பார்த்து இரக்கப்பட்டு கொடுத்தால் தான் உண்டு. அதற்கும் பணம் இலஞ்சம் கொடுக்க வேண்டும் தலைவருக்கு. அதையும் கடன் கொடுக்காததிற்கு எவ்வளவு வழி உண்டோ எல்லாவற்றையும் செய்து ஒரு கணக்கு காண்பித்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக