வெள்ளி, 10 ஜூலை, 2020

கேள்வி : குடும்ப பயன்பாட்டிற்காக வாங்கச் சிறந்த கார் எது?


என் பதில் :.


உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களை பொறுத்து தான் இதை சொல்லமுடியும்.

உங்கள் குடும்பத்தில் ஒரு மூன்று பேர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் உங்கள் மனைவி உங்கள் மகன் / மகள் : உங்களுக்கு கண்டிப்பாக சிறிய கார் போதுமானது. ஆனால் கார் வாங்கும்போது நாம் எப்போதும் மாருதி சுசூகி பலேனோ இல்லை என்றால் ஸ்விப்ட் நல்ல தாராளமாக இருக்கும் என்று நினைத்து வாங்குகிறோம். ஆனால் அவை பாதுகாப்பில் ஸிரோ தான்.

என்ன கார் வாங்கலாம்?

உங்களுக்கு பவர் வேண்டும் என்றால் போலோ [Volkswagen Polo]
உங்களுக்கு மைல்லேஜ் வேண்டும் என்றால் ஹ்யுண்டாய் சாண்ட்ரோ
நல்ல கட்டுமானம் மற்றும் fuel efficiency வேண்டும் என்றால் டாடா டியாகோ
[Tata Tiago]
எப்போதும் "fully loaded" வாங்குவது நல்லது.
உங்கள் குடும்பத்தில் ஒரு நான்கு பேர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் உங்கள் மனைவி உங்கள் மகன் & மகள் : போலோ மற்றும் சாண்ட்ரோவில் பின்னாடி சீட் கொஞ்சம் வெறுப்பு. இடம் கம்மியாக இருக்கும் என்னை பொறுத்தவரையில். மேலும் போலோவில் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து வருவது என்பது ஒரு டிசாஸ்டர். சிறியவர்கள் ஓகே ஆனால் பெரியவர்கள் கஷ்டம்.
என்ன கார் வாங்கலாம்?
மாருதி விட்டாரா பிரீசா
டாடா அல்ட்ரோஸ்
ஹ்யுண்டாய் ஐ டுவெண்ட்டி
மற்றும் நிசான் கிக்ஸ்.
இவை எல்லாம் அருமையாக உழைக்கும். நிசான் கிக்ஸ் மற்றும் ஹ்யுண்டாய் ஐ டுவெண்ட்டி ஸ்டேரிங் அருமையாக இருக்கும். லோங் டிரைவ் என்றால் கிக்ஸ் தான். அல்ட்ரோஸ் ரொம்ப நேரம் ஓடினால் முதுகு வலி எனக்கு ஏன் என்று தெரியவில்லை. விட்டாரா பிரீசா நன்றாக இருக்கும்.
சீடன் வேண்டும் என்றால் நீங்கள் :
ஹோண்டா சிட்டி மற்றும் வெர்னா பற்றி யோசியுங்கள் மற்றவை எல்லாம் - வேஸ்ட் ஒப் மனி
ஆனால் வெர்னா மற்றும் சிட்டி fully loaded 17 லட்சம் வரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
பெரிய குடும்பம் : நீங்கள் இன்னோவா எடுப்பது சிறந்தது. இல்லை என்றால் XUV 500. XUV500 எடுத்தால் அதில் தினம் தினம் ஒரு புதிய விஷயம் கண்டுபிடிக்க இருக்கும். மஹிந்திராவின் மிக அருமையான வண்டி.  இன்னோவா ஒரு குடும்ப கார். அருமையான வண்டி சார் அது. ஸ்மூத் என்றால் இன்னோவா தான். நன்றாக உழைக்கும். ஸ்பைஸ் நல்ல இருக்கும். டாப் எண்டு வேற லெவல். ஸ்போர்ட்ஸ் என்று ஏதோ ஒரு மாடல் வந்தது. ஆனால் நோர்மல் இன்னோவா Z சூப்பர் வண்டி.
நீங்க எந்த வண்டி வாங்குவதற்கு முன் ஒட்டி பார்த்து உங்களுக்கு Comfort தருகிறதா என்று பார்த்துவிட்டு வாங்குவது சிறந்தது.
மேலும் ஒரு ஷோரூம் சென்றால் அங்கு இருக்கும் நபர்களிடம் சிறந்த offer பற்றியும் கேளுங்கள்.
உங்கள் நண்பரிடம் அந்த வண்டி இருந்தால் மிகவும் சிறப்பு. அதை வைத்து லாங்  டிரைவ் செய்து பாருங்கள். மேலும் ஜூம் காரில் நீங்கள் வாங்கும் கார் மாடல் பார்த்து ஒட்டி பாருங்கள். காசு கொஞ்சம் போனாலும் பரவாயில்லை. கார் விஷயத்தில் கஞ்ச தனம் வேண்டாம். அது கடைசி வரை இருக்கும் என்று சொல்லமுடியாது ஆனால் நீண்ட காலம் உழைக்கும்.

நன்றி

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs,Car Loans) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக