திங்கள், 6 ஜூலை, 2020

கேள்வி : குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சனை முதல் பெரும் பிரச்சனை வரை சமாளித்து அனைவருக்கும் குடும்ப ஒற்றுமை உணர்வை எப்படி மேம்படுத்துவது? அதற்கான ஆலோசனைகள் என்ன?

என் பதில் :

குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் . வீட்டுக்கு வீடு வாசல் படி என்பார்களே அதே போல். பொதுவாக குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அது கணவன் மனைவி இருவர் இடையே ஆன பிரச்சினை ஆக இருக்கலாம். அதை எப்படி கை ஆளுவது என்றால் ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் அமைதியாக இருந்து விடுவது நலம். ஆனால் நம்மில் பல பேர் அதை போல் இருப்பது இல்லை . உடனே நம் கோவத்தை காட்டி விடுகிறோம் . அந்த காலத்தில் எல்லாம் குடும்பத்தில் சண்டை வந்தது என்றால் கணவன் வெளியில் சென்று விடுவார்.

அப்போது ஸ்மார்ட் போன்கள் கிடையாது . வீட்டுக்கு வந்து உடனே சமாதானம் ஆகி விடுவார். போன் இருப்பதால் நம்ம என்ன செய்கிறோம் உடனே நம் கோவத்தை வார்த்தைகள் மூலமாக கொட்டி விடுகிறோம். தவறு என்ன என்று அவர் உணர்வதற்கு வழியே இல்லாமல் போய் விடுகிறது . தற்போது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர் . ஒருவரை நம்பி ஒருவர் இல்லை என்று வரும் போது அங்கே நான் என்ற கர்வம் தலைக்கு ஏறி நாம் செய்வது தான் சரி என்று ஆகி விடுகிறது.என்னவாக இருந்தாலும் குடும்பம் என்ற வண்டி ஓடுவதற்கு ரெண்டு மாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று கட்டுக்கு அடங்காமல் போனால் மற்ற ஒன்று என்னவாகும்??.


இது நம்முடன் முடிய கூடிய விஷயம் இல்லை. நம் குழந்தைகள் பற்றி அவர்கள் எதிர் காலம் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.அவசர பட்டு நாம் எடுக்கின்ற சின்ன முடிவுகள் அந்த பிள்ளைகளின் வாழ்கையை தொலைத்து விடும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக