வெள்ளி, 10 ஜூலை, 2020





கேள்வி : Reliance நிறுவனம் நினைத்தால் TikTok க்கு நிகரான Social Video platform ஐ உருவாக்க முடியுமா? அப்படி முடியுமென்றால் ஏன் அவர்கள் இதுவரை அதற்கு முயற்சி செய்யவில்லை?

என் பதில் :

இதுபோன்ற செயலியை உருவாக்குவது என்பது ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மிக மிக சாதாரண விஷயம். ஆனால் அவர்கள் கண்டிப்பாக இதை செய்ய மாட்டார்கள். அதற்கு இரண்டு காரணம் உண்டு.

ஒன்று, இது போன்ற செயலில் வரும் வருமானம், இது போன்ற பெரிய நிறுவனத்திற்கு மிக மிகக் குறைவு. ஆகவே இதில் முதலீடு செய்வதும் அந்த முதலீட்டை நிர்வாகம் செய்வதும் நேர விரயம் மட்டுமே. அந்த நேரத்தில் அந்த பணியாளர்களை கொண்டு அந்த முதலீட்டை கொண்டு வேறு ஒரு பெரிய விஷயத்தை அவர்களால் மிக எளிதாக செய்து விட முடியும்.

இரண்டாவது, ரிலையன்ஸ் நிறுவனம் உலகில் பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்து வளரும் வாய்ப்பு எதிர்காலத்தில் உண்டு. இப்போது சீன நிறுவனத்தை முழுமையாக காப்பி அடித்தால் நாளைக்கு அவர்கள் நிறுவனம் சீனாவில் முதலீடு செய்யும் போதோ அல்லது வேறு தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு.


இது கிட்டத்தட்ட தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போலாகும். கண்டிப்பாக இந்த தவறை ரிலையன்ஸ் செய்யாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக